வினோத் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினோத் ராய்
பிறப்புமே 23, 1948 (1948-05-23) (அகவை 75)
காசிப்பூர் (மொகமதாபாத்) பரசா
தேசியம்இந்தியர்
கல்விமுதுநிலை பொருளியல் (தில்லி பல்கலைக்கழகம்),
முதுநிலை பொது நிர்வாகம் (ஆர்வர்டு பல்கலைக்கழகம்)
படித்த கல்வி நிறுவனங்கள்இந்துக் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம்
பணிஇந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
அறியப்படுவது2G அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு குறித்த தணிக்கைகள்
பட்டம்இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
முன்னிருந்தவர்வி. என்.கௌல்
வலைத்தளம்
cag.gov.in

வினோத் ராய் (Vinod Rai, பிறப்பு மே 23, 1948) 2008 சனவரி 8 ஆம் திகதி முதல் 2013 மே 22 திகதி வரை இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பதவியில் இருந்தவர் ஆவார். பழிச்சாட்டினால் கட்டாயமாக விலக்கப்பட்டாலன்றி 2014ஆம் ஆண்டு வரை இப்பதவியில் இருக்க இயலும்.[1] [2][3] தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து பொருளியலில் முதுநிலைப் பட்டமும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து பொது நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். தற்பொழுது இரயில்வே துறைக்கு வெளித் தணிக்கையர்கள் மற்றும் மதிப்புறு ஆலோசகர்கள் அடங்கிய குழுவுக்குத் தலைவராக உள்ளார்.

1977 முதல் 1980 வரை கேரள மாநில கூட்டுறவு சந்தை கூட்டமைப்பில் மேலாண் இயக்குனராகவும் 1980 க்குப் பிறகு பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.[4]

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு[தொகு]

வினோத் ராய் தனது தணிக்கை அறிக்கையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டால் இந்திய அரசுக்கு ரூபாய் 1,76,379 இழப்பு ஏற்பட்டது தெரிவித்தார். இதனால் வழக்கு தொடரப்பட்டது.

2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பான தமது தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் இடம் பெறாமல் இருக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிருபம் தனக்கு நெருக்கடி கொடுத்ததாக தொலைக்காட்சி, செய்தித் தாள்களுக்கு தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது என்றும், தவறுதலாக அப்படிக் கூறிவிட்டதாகவும் எழுத்து மூலமாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் வினோத் ராய்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mr. Vinod Rai" இம் மூலத்தில் இருந்து 2 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5zsKtRLWx?url=http://www.cag.gov.in/html/about1.htm. பார்த்த நாள்: 2 July 2011. 
  2. Narayanan, Dinesh (2011-01-07). "A Person of the Year: Vinod Rai". Forbes. http://www.forbes.com/2011/01/06/forbes-india-person-of-the-year-vinod-rai-auditor-general.html. 
  3. "Vinod Rai appointed CAG". Chennai, India: தி இந்து. 2007-12-18 இம் மூலத்தில் இருந்து 2007-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071219165536/http://www.hindu.com/2007/12/18/stories/2007121855371100.htm. பார்த்த நாள்: 2008-11-14. 
  4. http://www.thehindu.com/todays-paper/Vinod-Rai-appointed-CAG/article14896921.ece
  5. 2ஜி தொடர்பில் நான் அளித்த பேட்டி உண்மைக்கு புறம்பானது, மன்னிப்பு கோருகிறேன்: முன்னாள் சிஏஜி வினோத் ராய்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_ராய்&oldid=3575937" இருந்து மீள்விக்கப்பட்டது