வஹீதா ரெஹ்மான்
வஹீதா ரெஹ்மான் | |
---|---|
![]() 2019 இல் வஹீதா ரெஹ்மான் | |
பிறப்பு | 3 பெப்ரவரி 1938 செங்கல்பட்டு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய தமிழ்நாடு, இந்தியா) |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் |
|
வாழ்க்கைத் துணை | சஷி ரேகி (தி. 1974; இற. 2000) |
பிள்ளைகள் | 2 |
கையொப்பம் | ![]() |
வஹீதா ரெஹ்மான் (Waheeda Rehman, பிறப்பு 3 பிப்ரவரி 1938) என்பவர் ஒரு இந்திய நடிகையாவார். இவர் இந்தித் திரையுலகின் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான இவரது தொழில் வாழ்க்கையில் 90 இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தேசிய திரைப்பட விருதும், இரண்டு பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார். இந்திய அரசால் 1972 இல் பத்மசிறீ விருதும், 2011 இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டார். 2021 ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் திரைப்படத் துறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இவருக்கு, 2023 இல் வழங்கப்பட்டது.
வஹீதா ரோஜுலு மராயி (1955) என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பியாசா (1957), காகஸ் கே பூல் (1959), சௌத்வின் கா சந்த் (1960), சாஹிப் பீபி அவுர் குலாம் (1962) ஆகிய நாடகப்பங்களில் இந்தித் திரைப்படப் படைப்பாளியான குரு தத்துடன் இணைந்து நடித்ததன் மூலம் முக்கியத்துவம் பெற்றார். காதல் நடகப் படமான கைடு (1965) படத்தில் நடித்ததற்காக இவர் பரவலான விமர்சனங்களைப் பெற்றார், இதற்காக இவர் சிறந்த நடிகைக்கான முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார். காதல் பரபரப்பூட்டும் படமான நீல் கமல் (1968) படத்தில் நடித்ததற்காக இவருக்கு மீண்டும் இந்த விருது வழங்கப்பட்டது. மேலும் ராம் அவுர் ஷ்யாம் (1967) என்ற நகைச்சுவைப் படத்திலும், காமோஷி (1969) என்ற நாடகப்படத்திலும் நடித்ததற்காக விருதுக்கான பரிந்துரைகளைப் பெற்றார். ரேஷ்மா அவுர் ஷேரா (1971) என்ற குற்ற நாடகப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.
1970களில் இருந்து, ரஹ்மான் முதன்மையாக துணைப் பாத்திரங்களில் நடித்துவருகிறார். யஷ் சோப்ராவின் காதல் நாடகப் படங்களான கபி கபி (1976), சாந்தினி (1989), லாம்ஹே (1991), மற்றும் அதிரடித் திரைப்படங்களான திரிசூல் (1978), மஷால் (1984) ஆகியவற்றில் நடித்தார். 1982 ஆம் ஆண்டு வெளியான நம்கீன், நமக் ஹலால் ஆகிய படங்களில் குறிப்பிடத்தக்க துணை வேடங்கள் நடித்தார். 1994 ஆம் ஆண்டில், இவருக்கு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஒரு இடைவெளிக்குப் பிறகு, இவர் அவ்வப்போது சமூக நாடகப் படங்களான வாட்டர் (2005), ரங் தே பசந்தி (2006), தில்லி 6 (2009) ஆகியவற்றில் நடித்தார்.
நடிப்புத் தொழில் வாழ்க்கையில் உள்ள, ரெஹ்மான் ஒரு கொடையாளராகவும் உள்ளார். இவர் கல்வி வளர்சிக்கான ஆதரவாளராகவும், இந்தியாவில் வறுமை ஒழிப்புக்காக பாடுபடும் ஒரு அமைப்பான ரங்தேவின் தூதராகவும் உள்ளார். [1]
துவக்க கால வாழ்க்கை
[தொகு]வஹீதா ரெஹ்மான் பிப்ரவரி 3, 1938 அன்று [2][3][4] இந்தியாவின் தற்கால தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் ஒரு தக்காணி முசுலீம் குடும்பத்தில் பிறந்தார். ரெஹ்மான் ஐதராபாத்தில் பிறந்தார் என்று தவறான கருத்து உள்ளது. இவரது தந்தை முகமது அப்துர் ரஹ்மான், இவரது தாயார் மும்தாஜ் பேகம் ஆவர். இவரின் பேற்றோருக்குப் பிறந்த நான்கு மகள்களில் இவர் இளையவராவார்.[5] குழந்தைப் பருவத்தில், இவரும் இவருடைய சகோதரிகளும் சென்னையில் பரதநாட்டியப் பயிற்சிப் பெறனர். இவரது தந்தை அப்போதைய மதராசு மாகாணத்தில் அரசு பணியில் இருந்தபோது, விசாகப்பட்டனத்தில் உள்ள செயிண்ட் ஜோசப் கான்வென்ட்டில் இவர் படித்தார். மாவட்ட ஆணையராகப் பணியாற்றிய இவரது தந்தை, 1951 ஆம் ஆண்டு தன் இளம் வயதிலேயே இறந்தார்.[6]
ரெஹ்மான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று கனவு கொண்டார். ஆனால் தனது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையாலும், தாயாருக்கு ஏற்பட்ட நோயாலும், தனது கனவைக் கைவிட்டார். குடும்ப நலனுக்காக, தனது நடனத் திறமையினால் கிடைத்த திரைப்பட வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டார். [7]
நடிப்பு வாழ்க்கை
[தொகு]துவக்கமும் முன்னேற்றமும்
[தொகு]ரஹ்மான் தமிழ் திரைப்படமான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் வழியாக ஒரு நடனக் கலைஞராக அறிமுகமானார். இருப்பினும், அதற்கு முன்னர் வெளியான தெலுங்கு திரைப்படமான ரோஜுலு மராய் (1955); படத்திலும் ஒரு நடனத்தில் இடம்பெற்றார். அதே ஆண்டு, இவர் ஜெயசிம்ஹா படத்தில் என். டி. ராமராவ் ஜோடியாக முதன்மை வேடத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, 1956 இல் வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் இவர் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். அலி பாபாவும் நாற்பது திருடர்களும் கதையை அடிப்படையாகக் கொண்டு, எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும். [8] 1950களின் நடுப்பகுதியில், இவர் தேவ் ஆனந்த்துடன் சேர்ந்து பல படங்களில் நடித்தார். அவற்றில் சோல்வா சால் (1958) போன்ற படங்கள் அடங்கும். தி இந்துவின் சுரேஷ் கோஹ்லி , சோல்வா சாலில் இவரது நடிப்பைப் பற்றி எழுதுகையில்; "அப்படத்தின்போது அவருக்கு 20 வயதுதான் என்றாலும், அவரது நான்காவது இந்தி படமான இதில், ரெஹ்மான் தனது தரமான நடிப்பைக் காட்டுகிறார்: தீவிரமான காட்சிகளிலும், லேசாக மின்னும், குறும்புத்தனமான கண் அசைவுகள் மூலமாகவும் நடித்துள்ளார்."
குரு தத்துடனான திரைப்படங்கள்
[தொகு]ரெஹ்மானின் நடிப்புத் திறமையானது இந்தி திரைப்படப் படைப்பாளியான குரு தத்தின் கவனத்தை ஈர்த்தது. அவரை இவர் தன் வழிகாட்டியாகக் கருதினார். [9] தத் இவரை பம்பாய்க்கு (இன்றைய மும்பை) அழைத்து வந்து, குற்றவியல் பரபரப்பூட்டும் படமான சிஐடி (1956) படத்தில் காமினி என்ற வேடத்தில் நடிக்க வைத்தார். மதுபாலா, நர்கிசு, மீனாகுமாரி போன்ற அப்போதைய பிரபல நடிகைகளின் பெயரைப் போல, வஹீதாவும் ஒரு திரைப் பெயரைப் பயன்படுத்தும்படி கேட்கப்பட்டார். ஆனால் அதை மறுத்த இவர் தனது இயற் பெயரையே தொடர்ந்து நடித்தார். [10] தத் அடுத்து இவரை இந்தி நாடகப் படமான ப்யாசா (1957) படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதில் இவர் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்தார். இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது, மேலும் இதுவரையிலான சிறந்த படங்களில் ஒன்றாக அப்படம் விமர்சகர்களால் கருதப்படுகிறது. [11] [12] இவர் தத்துடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றினார், அவற்றில் 12 ஓ'க்ளாக் (1958), [13] காதல் நாடகப்படமான காகஸ் கே பூல் (1959), முஸ்லிம் சமூகப் படமான சௌத்வின் கா சந்த் (1960) ஆகியவை அடங்கும்; இவை அனைத்தும் இவருக்கு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுத் தந்தன. [14] [15] ரெஹ்மானும் தத்தும் இணைந்து நடித்த கடைசி காதல் நாடகப் படம் சாஹிப் பீபி அவுர் குலாம் (1962) ஆகும். இதில் தத், மீனா குமாரி, ரெஹ்மான் ஆகியோர் நடித்தனர். [16] இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, இந்திய மற்றும் சர்வதேச விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. [17] இது ரெஹ்மானுக்கு சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் முதல் பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார். [18] இதற்கிடையில் இந்தப் படம் 13வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் பியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றது. [19]
பரவலான வெற்றிகள்
[தொகு]அடுத்து, சத்யஜித் ரேயின் அபிஜன் (1962) திரைப்படத்தின் மூலம் பெங்காலி திரைப்படத் துறையில் இறங்கினார். இதைத் தொடர்ந்து, அவர் பாத் ஏக் ராத் கி (1962) படத்தில் ஒரு கொலையாளியாக சந்தேகப்படும் பெண்ணாகவும், ராக்கி (1962) படத்தில் உடன்பிறப்புகளின் சண்டையில் சிக்கிய ஒரு பெண்ணாகவும், ஏக் தில் சாவ் அஃப்சனே (1963) படத்தில் மலடியாகவும் நடித்தார். முன்னணி நடிகையாக, இவர் இந்தித் திரையுலகின் பல பிரபலமான நடிகர்களுடன் நடித்தார்; குறிப்பாக, முஜே ஜீனே தோ (1962) படத்தில் சுனில் தத்துடனும், கவுன் அப்னா கவுன் பராயாவில் (1963) நிருபா ராய்யுடனும், திகில் படமான கோஹ்ராவில் (1964), நாடகப் படமான மஜ்பூர் (1964), உளவியல்-திரில்லர் படமான பீஸ் சால் பாத் (1962) ஆகியவற்றில் பிஸ்வஜித்வுடனும் நடித்தார். இதில் பீஸ் சால் பாத் படமானது 1962 ஆம் ஆண்டில் அதிகம் வசூலித்த இந்தி படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. [20] 1964 ஆம் ஆண்டின் இறுதியில், ரெஹ்மான் இந்தி படங்களில் அதிக சம்பளம் வாங்கும் மூன்றாவது நடிகையாக இருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]1974 ஏப்ரலில், வஹீதா ஷஷி ரேக்கியை (கமல்ஜீத் என்றும் அழைக்கப்படுகிறார்) மணந்தார். [21] இவர்கள் ஷாகூன் (1964) என்ற படத்தில் இணைந்து பணியாற்றினார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் பெங்களூரில் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். 2000 நவம்பர் 21 அன்று ரேகி இறந்த பிறகு, வஹீதா மும்பையின் பாந்த்ராவுக்குத் திரும்பிச் சென்றார். அங்கு இவர் தற்போதுவரை வசித்து வருகிறார். [22] [23]
திரைப்படவியல்
[தொகு]விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]
ஆண்டு | படம் | விருது | பிரிவு | முடிவு | மேற்கோள்கள். |
---|---|---|---|---|---|
1962 | சாஹிப் பீபி அவுர் குலாம் | பிலிம்பேர் விருதுகள் | சிறந்த துணை நடிகை | பரிந்துரை | [24] |
1965 | கைட் | சிறந்த நடிகை | வெற்றி | [25] | |
சிகாகோ சர்வதேச திரைப்பட விழா | சிறந்த நடிகை | வெற்றி | [26] | ||
1966 | தீஸ்ரி கசம் | பிஎப்ஜேஏ விருதுகள் | சிறந்த நடிகை (இந்தி) | வெற்றி | |
1967 | ராம் அவுர் சியாம் | பிலிம்பேர் விருதுகள் | சிறந்த நடிகை | பரிந்துரை | [27] |
1968 | நீல்கமல் | வெற்றி | [28] | ||
1970 | காமோசி | பரிந்துரை | [29] | ||
1971 | ரேஷ்மா அவுர் ஷேரா | தேசிய திரைப்பட விருதுகள் | சிறந்த நடிகை | வெற்றி | [30] |
1976 | கபி கபி | பிலிம்பேர் விருதுகள் | சிறந்த துணை நடிகை | பரிந்துரை | [31] |
1982 | நம்கீன் | பரிந்துரை | [32] | ||
1989 | சாந்தினி | பரிந்துரை | [33] | ||
1991 | லாம்ஹே | பரிந்துரை | [34] |
கௌரவங்கள்
[தொகு]- 1972 இல் பத்மசிறீ. [35]
- 1994 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது. [36]
- 2001 ஆம் ஆண்டு ஐஐஎப்ஏ வாழ்நாள் சாதனையாளர் விருது. [37]
- 2006 ஆம் ஆண்டு என்டிஆர் தேசிய விருது . [38]
- 2011 இல் பத்ம பூசண். [39]
- 2020 இல் மத்தியப் பிரதேச அரசிடமிருந்து ராஷ்ட்ரிய கிஷோர் குமார் சம்மன். [40]
- தாதாசாகெப் பால்கே விருது : 2021 ஆம் ஆண்டிற்கான திரைப்படத் துறையின் சிறப்பிற்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருது, 2023 ஆம் ஆண்டு 69வது தேசிய திரைப்பட விருதுகளில் வழங்கப்பட்டது. [41]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thomas, Anu (27 September 2018). "How Rang De is using crowdsourcing to make micro loans cheaper". The Economic Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0389. https://economictimes.indiatimes.com/small-biz/money/how-rang-de-is-using-crowdsourcing-to-make-micro-loans-cheaper/articleshow/58509858.cms.
- ↑ Rachana Dubey (15 May 2014). "Waheeda Rehman's date issues". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 14 September 2017. Retrieved 15 January 2015.
- ↑ "Rehman, Waheeda (1936–)". National Library of Australia. Archived from the original on 18 May 2015. Retrieved 15 January 2015.
- ↑ "Rahman, waheeda, 1936". id.loc. Archived from the original on 18 May 2015. Retrieved 15 January 2015.
- ↑ Kabir, Nasreen Munni (15 March 2015). Conversations with Waheeda Rehman (in ஆங்கிலம்). Penguin UK. ISBN 9789351186427.
- ↑ "Interview with Waheeda Rehman". 5 August 2015. Archived from the original on 5 March 2016. Retrieved 6 August 2015.
- ↑ Britannica, Encyclopedia (2003). Encyclopaedia of Hindi Cinema (in ஆங்கிலம்). Popular Prakashan. ISBN 9788179910665.
- ↑ Modern Theatres (14 January 1956). Alibabavum 40 Thirudargalum 1956 Songbook.
- ↑ "How Guru Dutt Discovered Waheeda Rehman". 20 December 2018. https://indiacurrents.com/how-guru-dutt-discovered-waheeda-rehman/.
- ↑ "Was a stubborn newcomer in industry: Waheeda Rehman". 22 January 2015. https://economictimes.indiatimes.com/magazines/panache/was-a-stubborn-newcomer-in-industry-waheeda-rehman/articleshow/45980487.cms?from=mdr.
- ↑ "BoxOffice India.com". 2 January 2010. Archived from the original on 2 January 2010. Retrieved 26 May 2021.
- ↑ An, Gautam (27 November 2014). "'Pyaasa' (1957) is an Eternal Classic. Here's Why". The Cinemaholic (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 26 May 2021.
- ↑ "Filmfare recommends: Best Bollywood noir films of the '50s". filmfare.com (in ஆங்கிலம்). Retrieved 26 May 2021.
- ↑ Sood, Samira (16 May 2020). "Kaagaz Ke Phool is Guru Dutt's masterclass in filmmaking and heartbreak". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 26 May 2021.
- ↑ "Waheeda Rehman — the 'chaudhvin ka chand' of Indian cinema who never believed in her beauty". 3 February 2022. https://theprint.in/theprint-profile/waheeda-rehman-the-chaudhvin-ka-chand-of-indian-cinema-who-never-believed-in-her-beauty/820115/.
- ↑ "Raise a Glass for the Lady". The Indian Express (in ஆங்கிலம்). 11 March 2018. Retrieved 26 May 2021.
- ↑ "The legend endures" (in en-IN). 1 June 2012. https://www.thehindu.com/features/cinema/the-legend-endures/article3476550.ece.
- ↑ "The Nominations – 1962– The 51st Filmfare Awards". archive.is. 8 July 2012. Archived from the original on 8 July 2012. Retrieved 7 August 2019.
- ↑ Alvi, Abrar (2005). "Sahib bibi aur ghulam". 100 Bollywood Films. doi:10.5040/9781838710538.0089. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781838710538.
- ↑ Britannica, Encyclopedia (2003). Encyclopaedia of Hindi Cinema (in ஆங்கிலம்). Popular Prakashan. ISBN 978-81-7991-066-5.
- ↑ "Secrets: Unknown Husbands Of Bollywood". Indiatimes. Times Internet Limited. 9 March 2016. Retrieved 11 March 2018.
- ↑ "Exclusive: Waheeda Rehman's Son Has A Dream Wedding In Bhutan". The Quint. 15 June 2016. Retrieved 11 March 2018.
- ↑ "Mirror on a Full Moon". Outlook India. Retrieved 11 March 2018.
- ↑ "The Nominations – 1962". http://filmfareawards.indiatimes.com/articleshow/articleshow/366477.cms.
- ↑ "The Winners – 1966". http://filmfareawards.indiatimes.com/articleshow/366585.cms.
- ↑ "Chicago International Film Festival Awards". The Chicago International Film Festival. Retrieved 25 October 2017.
- ↑ "The Nominations – 1967". http://filmfareawards.indiatimes.com/articleshow/articleshow/366594.cms.
- ↑ "The Winners – 1968". http://filmfareawards.indiatimes.com/articleshow/366813.cms.
- ↑ "The Nominations – 1970". http://filmfareawards.indiatimes.com/articleshow/articleshow/366830.cms.
- ↑ "Reshma Aur Shera 1971" (in en-IN). 25 October 2008. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/Reshma-Aur-Shera-1971/article15391878.ece.
- ↑ "The Nominations – 1976". http://filmfareawards.indiatimes.com/articleshow/articleshow/366919.cms.
- ↑ "The Nominations – 1982". http://filmfareawards.indiatimes.com/articleshow/articleshow/367120.cms.
- ↑ "The Nominations – 1989". http://filmfareawards.indiatimes.com/articleshow/articleshow/368588.cms.
- ↑ "The Nominations – 1991". http://filmfareawards.indiatimes.com/articleshow/articleshow/368596.cms.
- ↑ "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. pp. 37–72. Archived from the original (PDF) on 14 September 2017. Retrieved 22 March 2016.
- ↑ "Lifetime Achievement (Popular)" இம் மூலத்தில் இருந்து 12 February 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080212082935/http://filmfareawards.indiatimes.com/cms.dll/articleshow?artid=33782146.
- ↑ "IIFA Through the Years – IIFA 2001: South Africa" இம் மூலத்தில் இருந்து 25 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150925131700/http://www.iifa.com/iifa-years/iifa-years-2001/.
- ↑ "N.T.R. NATIONAL FILM AWARDEES". APSFTVTDC. Retrieved 3 January 2021.
- ↑ "Brajesh Mishra, Azim Premji, Montek in list of 128 Padma awardees" இம் மூலத்தில் இருந்து 16 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120716120734/http://timesofindia.indiatimes.com/india/Brajesh-Mishra-Azim-Premji-Montek-in-list-of-128-Padma-awardees/articleshow/7361816.cms.
- ↑ "Waheeda Rehman conferred with Kishore Kumar Award". The Indian Express (in ஆங்கிலம்). 4 February 2020. Retrieved 20 March 2022.
- ↑ "Waheeda Rehman honoured with Dadasaheb Phalke Award for contributions to Indian cinema, expemplifying 'strength of Bharatiya Nari'" இம் மூலத்தில் இருந்து 26 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230926093107/https://indianexpress.com/article/entertainment/bollywood/waheeda-rehman-honoured-with-dadasaheb-phalke-award-for-contributions-to-indian-cinema-expemplifying-strength-of-bharatiya-nari-8956704/.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் வஹீதா ரெஹ்மான்
- பாலிவுட் கங்காமா இணையதளத்தில் வஹீதா ரெஹ்மான்
- Waheeda Rehman Interview
- A Film Retrospective in Seattle. October 2004
- Queen of Hearts – interview with Rehman published in தி இந்து
- Bollywood Hungama person template using non-numeric ID
- தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்
- பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- வங்காளத் திரைப்பட நடிகைகள்
- இந்தித் திரைப்பட நடிகைகள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- தமிழ்நாட்டு நடிகைகள்
- இந்தியத் திரைப்பட நடிகைகள்
- வாழும் நபர்கள்
- 1938 பிறப்புகள்