பத்மினி கோலாபுரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மினி கோலாபுரே
PadminiKolhapure.jpg
பத்மினி கோலாபுரே - ஏப்ரல் 2017
பிறப்பு1 நவம்பர் 1965 (1965-11-01) (age 57)
மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா
பணிநடிகை, பாடகி
வாழ்க்கைத்
துணை
பிரதீப் சர்மா (1986)
பிள்ளைகள்பிரியங்க் பிரதீப் சர்மா

பத்மினி கோலாபுரெ (Padmini Kolhapure) (பிறப்பு நவம்பர் 1,1965) இவர் இந்திய நடிகை மற்றும் பாடகி ஆவார். இந்தி திரைப்படங்களின் மூலம் அறிமுகமானார். இவர் மூன்று முறை பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார். 1980 களில் பரவலாக பிரபலமாக இருந்தார். தனது 15வது வயதில் பிலிம்ஃபேர் சிறந்த துணைநடிகைக்கான விருதை இன்சாஃப் கா டாரஜ் (1981) என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததற்காகப் பெற்றுள்ளார்.17வது வயதில் "ப்ரேம் ரோக்"(1983) படத்தில் நடித்ததற்காக பிலிம்ஃபேரின் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றுள்ளார். இப்பிரிவுகளில் சிறிய வயதில் விருது பெற்றுள்ளவர்களில் இரண்டாவதாக உள்ளார்.

இளமைப் பருவம்[தொகு]

பத்மினி கோலாபுரே பண்டரிநாத் கோலாபுரே - நிருபமா கோலாபுரே தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவரது தந்தை இசை அமைப்பாளர். இவரது மூத்த சகோதரி ஷிவாங்கி கபூர், முன்னாள் நடிகை, நடிகர் சக்தி கபூரின் மனைவி, நடிகை ஷ்ரத்தா கபூர் மற்றும் நடிகர் சித்தார்த் கபூரின் அன்னையுமாவார். இவரது இளைய சகோதரி நடிகை தேஜஸ்வினி கோலாபுரே..[1] கோலாப்பூர்லிருந்து வந்ததால் இந்த குடும்பத்தினர் கோலாபுரே என்னும் பெயரைப் பெற்றனர். பத்மினியின் தாய் நிருபமா கோலாபுரே கர்நாடகம் மாநிலத்தில் மங்களூரில் கொங்கணி மொழி பேசும் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்.[2] பத்மினியின் தந்தை பண்டரிநாத் கோலாபுரே திறமையான பாடகர் மற்றும் வீணை வாத்தியக் கலைஞர். இவரது தந்தை பண்டிட் கிருஷ்ணாராவ் கோலாபுரே, பல்வந்த் நாடக சங்கத்தில் தீனாநாத் மங்கேஷ்கருக்கு பங்குதாரராகவும், நாட்டிய சங்கீதத்திற்கு பிரதிநிதியாகவும், பரோடாவிலுள்ள பரோடா தர்பாரின் ஆதரவாளராகவும் இருந்தார். பண்டரிநாத்தின் தாய் தீனாநாத் மங்கேஷ்கரின் உறவினர் ஆவார். ஆகையால் பத்மினி புகழ் பெற்ற பாடகர்களான லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லேக்கு உறவினராகிறார்..[3] "ஐசா ப்யார் கஹான்" படத்தில் நடிக்கும் போது பத்மினி பிரதீப்பைச் சந்தித்தார். அப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த பிரதீப்பை காதலித்து 1986இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியங்க் சர்மா என்கிற மகன் இருக்கிறார். .[4] பத்மினியும் பிரதீப்பும் தங்களது 31வது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினர்.

தொழில்[தொகு]

பத்மினி தனது சகோதரி ஷிவாங்கியுடன் இணைந்து,"யாதோன் கி பாரத்", "கிதாப்", மற்றும் "துஷ்மன் தோஸ்த்" போன்ற படங்களில் குழுவில் பாடியுள்ளார். இவரது படங்களான "விதாதா", "சாட் சஹேலியன்", "ஹம் இந்தசார் கரேங்கெ" மற்றும் "சடக் சாப்" (கிஷோர் குமாருடன் இணைந்து) போன்றவற்றில் பாடல்களைப் பாடியுள்ளார். "மியூசிக் லவ்வர்ஸ்" என்ற பெயரில் பப்பி லஹரியுடன் சேர்ந்து இசைத்தட்டுகள் வெளியிட்டுள்ளார். 1986இல் பப்பி லஹரி குழுவுடன் இலண்டன் சென்று ராயல் ஆல்பெர்ட் ஹால், இலண்டன் கவுன்சிலில் பாடியுள்ளார்.

ஆஷா போஸ்லே, பத்மினியைப் பற்றி நடிகர் தேவ் ஆனந்த்திடம் பரிந்துரை செய்தார். தேவ் ஆனந்த் "இஷ்க் இஷ்க் இஷ்க்" (1975) என்கிற படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து,"டிரீம் கேர்ள்"(1978), "ஜிந்தகி(1976)",மற்றும் "சாஜன் பினா சுஹாகன்" படங்களில் நடித்தார். 1980இல் வெளிவந்த "கஹராயீ" திரைப்படத்தில் பள்ளி மாணவியாக சிறப்பாக நடித்துள்ளார். ராஜ் கபூரின் "சத்யம் சிவம் சுந்தரம்"(1977) படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக இவரது நடிப்பு பேசப்பட்டது.

தொலைக்காட்சி[தொகு]

பல்லவி சுரேஷ் மோடியாக ஏக் நயி பிசான் (சூன் 2014 – ஆகஸ்டு 2014) சோனி டிவி[5]

பிற விருதுகள்[தொகு]

2003 கலாகர் விருது [6] 2006 சிறந்த நடிகைக்கான விருது " சிம்நீ பாக்ரே (மராத்தி)

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashok Kumar (Expressindia.com) (13 August 2008). "Working for TV serial was frustrating: Tejaswini". Express India. 14 அக்டோபர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. If I had my way, I would have worked with Raj Kapoor all my life: Padmini Kolhapure Times of India 13 September 2013
  3. I feel bad about it: Pt. Pandharinath DNA 16 June 2009
  4. Starkid on the block: Priyank Sharma பரணிடப்பட்டது 30 சூன் 2013 at the வந்தவழி இயந்திரம் Hindustan Times 28 January 2013
  5. "Padmini Kolhapure to enter as love interest of Suresh Modi". Pinkvilla. 3 June 2014. 26 ஆகஸ்ட் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. Kalakar Awards பரணிடப்பட்டது 20 பெப்ரவரி 2008 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பத்மினி கோலாபுரே

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மினி_கோலாபுரே&oldid=3561783" இருந்து மீள்விக்கப்பட்டது