மாதுரி தீட்சித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதுரி தீட்சித்

நச்சு பாலியே (2007) நிகழ்ச்சியில் மாதுரி தீட்சித்.
இயற் பெயர் மாதுரி ஷங்கர் தீட்சித்
பிறப்பு மே 15, 1967 (1967-05-15) (அகவை 56)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1984–2002
2007
துணைவர் சிறீராம் நெநே (1999–தற்காலம்)

மாதுரி தீட்சித் (மராத்தி: माधुरी दीक्षित) (மே 15, 1967 அன்று பிறந்த மாதுரி ஷங்கர் தீட்சித்) [1] ஓர் இந்திய பாலிவுட் நடிகையாவார். 1980 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்தி படவுலகில் புகழ்பெற்ற நடிகைகள், நடன நாட்டிய நிபுணர்களின் வரிசையில், இவர் தன்னை ஒரு பெயர்பெற்ற நடிகையாகவும் நடன நாட்டிய கலைஞராகவும் நிலைநாட்டிக் கொண்டார்.[2] இவர் பல வகையான வணிகரீதியான வெற்றிப்படங்களில் தோன்றியதோடு பல படங்களில் அவருடைய நடிப்புத் திறமைக்காகவும் எண்ணற்ற மனம் கவரும் நடனங்களுக்காகவும் பெயர் பெற்றார். ஊடகங்கள் மாதுரியை பாலிவுட்டின் மிகவும் முதன்மை நடிகையாக அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு.[3] 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது மிகவும் உயர்ந்த குடிமுறை சார்ந்த விருதான பத்ம ஸ்ரீ பட்டத்தை அளித்து பெருமை செய்திருக்கிறது.

தொடக்ககால வாழ்க்கை[தொகு]

மாதுரி தீட்சித் மும்பையை சார்ந்தவர். மராத்தி சித்பவன் பிராம்மண குடும்பத்தைச் சார்ந்த ஷங்கர் மற்றும் ஸ்நேஹலதா தீட்சித்திற்கு பிறந்த இவர் டிவைன் சைல்ட் உயர்நிலைப்பள்ளியிலும் மும்பை பல்கலைக்கழகத்திலும் படித்தார். மேலும் ஒரு நுண்ணுயிரியல் வல்லுனர் (microbiologist)[4] ஆக விரும்பினார். இவர் பலமுறை மேடைகளில் நடனமாடி பெயர்பெற்ற கதக் நடனக் கலைஞராவார், இவர் கதக் நடனத்தில் எட்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.

திரைப்படத் தொழில் வாழ்க்கை[தொகு]

மாதுரி தீட்சித் முதல்முறையாக அபோத் (1984) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் சில சிறிய மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்தபிறகு, தேஜாப் (1988) என்ற படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இப்படம் இவரை ஒரு திரைநட்சத்திரமாக வானளாவுக்கு உயர்த்தியது, மேலும் இவர் இப்படத்தில் நடித்ததற்கான முதல் பிலிம்பேருக்கான பரிந்துரையும் (nomination) பெற்றார். இவர் அதற்குப்பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்தார், அவற்றில் ராம் லகன் (1989), பரிந்தா (1989), த்ரிதேவ் (1989) மற்றும் கிஷன் கன்ஹையா (1990) போன்ற படங்கள் அடங்கும். இப்படங்களில் நடித்தான் மூலம் அனில் கப்பூரும் இவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.

1990 ஆம் ஆண்டில், மாதுரி இந்திர குமாரின்காதல்-நாடகமான தில் என்ற திரைப்படத்தில் ஆமிர் கானுடன் நடித்தார். இவர் மது மெஹ்ரா என்ற கதாப்பாத்திரத்தில் ஒரு பணக்கார மற்றும் சீரழிந்த இளம்பெண்ணாக நடித்தார். ராஜா என்ற வாலிபனைக் காதலிக்கிறார், அவ்வேடத்தில் கான் நடித்தார் மேலும் அதற்குப்பிறகு அவனை மணந்து கொள்வதற்காக தன் வீட்டைவிட்டு செல்கிறாள். அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக (பாக்ஸ் ஆபீஸ் ஹிட்) அந்தப்படம் இந்தியாவில் திகழ்ந்தது, மேலும் மாதுரியின் நடிப்பு அவருக்கு அவருடைய தொழில்வாழ்க்கையின் முதல் பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது.

தில் படத்தைத் தொடர்ந்து அவர் வரிசையாக மேலும் பல வெற்றிப்படங்களை அளித்தார், அவற்றில் சாஜன் (1991), பேட்டா (1992), கல்நாயக் (1993), ஹம் ஆப்கே ஹைன் கௌன் ! (1994) மற்றும் ராஜா (1995) போன்றவை அடங்கும். பேட்டா என்ற படத்தில் மாதுரியின் நடிப்பானது, அதில் அவர் ஒரு படிக்காதவனை மணந்து கொள்ள, பல இக்கட்டான சூழ்நிலைகளுக்குப் பிறகு, அவரது கணவன் முன் தனது சூழ்ச்சி செய்யும் மாமியாரைக் கையும் களவுமாக பிடிக்கிறார், இப்படம் இவருக்கு இவருடைய இரண்டாவது பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது.

ஹம் ஆப்கே ஹைன் கௌன் ! என்ற படம் ஹிந்தி திரைப்பட வரலாற்றில் இதுவரை பெற்றிராத அளவுக்கு வசூலைப் பெற்றுத்தந்தது. அப்படத்திற்கு ரூபாய் 650 மில்லியனுக்கும் மேலாக இந்தியாவில் வசூலானது மற்றும் வெளிநாட்டில் ரூபாய் 150 மில்லியனுக்கும் மேல், மாதுரிக்கு அவருடைய மூன்றாவது பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது. அதே வருடத்தில், மாதுரி அதே வகையான பகுப்பில் அன்ஜாம் என்ற படத்தில் அவருடைய சிறந்த நடிப்பிற்காக பரிந்துரைக்கப்பட்டார் மேலும் இவர் திறனாய்வாளர்களின் நன்மதிப்பையும் பெற்றார்.

1996 ஆம் ஆண்டு அவருக்கு வெற்றிகரமாக இருக்கவில்லை, 1997 ஆம் ஆண்டில் மாதுரி பூஜா என்ற பாத்திரத்தில் யாஷ் சோப்ராவின் படமான தில் தோ பாகல் ஹை (1997) யில் தோன்றினார். இந்தப்படம் தேசிய அளவில், விமர்சகர்களிடமும் மற்றும் வணிகரீதியிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாகத் திகழ்ந்தது மேலும் மாதுரி அவருடைய நான்காவது பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப்பெற்றார்.[5] அதே வருடத்தில், மாதுரி பிரகாஷ் ஜாவின் பலராலும் போற்றப்பட்ட ம்ரித்யுதண்ட் என்ற படத்தில் நடித்தார். வணிகரீதியாகவும் கலை நயத்துடன் கூடிய படமாகவும் இப்படம் திகழ்ந்து இரு எல்லைகளையும் தாண்டிய ஒரு படமாக இப்படம் அறியப்பெற்றது. ஜெனீவாவில் நடந்த சினிமா டோவ்த் எச்ரான் (Cinéma Tout Ecran) என்ற நிகழ்ச்சி மற்றும் பாங்கோக்கில் நடந்த திரைப்பட விழாவிலும் இப்படம் சிறந்த தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. அப்படத்தில் அவரது நடிப்பிற்காக மாதுரிக்கு அவ்வாண்டின் ஸ்டார் ஸ்க்ரீன் திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

மாதுரி அவரது நடிப்புத்திறமைக்கு மட்டுமல்ல, ஆனால் அவரது நடனத்திறமைக்கும் பெயர்போனவர். பாலிவுட்டின் பிரபலமடைந்த திரைப்பட பாடல்களுக்கான அவளுடைய நடன வரிசை முறைகள், எடுத்துக்காட்டாக ஏக் தோ தீன் (தேஜாபில்), படா துக் தீன்ஹ (ராம் லகனில்), தக் தக் (பேட்டா) , சனே கே கேத் மெயின் (அன்ஜாமி), சோலி கே பீச்சே (கல்நாயக்), அகியான் மிலாவுன் (ராஜா) பியா கர் ஆயா (யாரானா), கே சரா (புகாரி), மார் டாலா (தேவதாஸ் ) போன்ற பல பாடல்கள் மக்களால் மிகையாக போற்றப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் இவர் சஞ்சய் லீலா பன்சாலியின் தேவதாஸ் படத்தில் ஷா ருக் கான் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தார். இவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பெற்றது. மேலும் இப்படம் இவருக்கு பிலிம்பேர் சிறந்த துணைநடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது. இப்படம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது மேலும் கேன்ஸ் திரைப்பட விழா வில் திரையிடப்பெற்றது.

அதற்குப்பின் வந்த வருடத்தில் இவர் பெயரில், மை மாதுரி மாதுரி பன்னா சாஹ்தீ ஹூன் ! என்ற படம் வெளியானது.[6] இப்படத்தில் ஒரு பெண் (அந்தர மாலி என்பவள் அவ்வேடத்தில் நடித்தாள்) புதிய மாதுரியாக வருவதற்கு, பாலிவுட் தொழிலில் தனது யோகத்தை சோதித்துப் பார்த்தார்.

பெப்ரவரி 25, 2006 அன்று ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மேடையில் பிலிம்பேர் திரைப்பட விருதின் போது இவர் கடைசியாக நடித்த படமான தேவதாஸ் படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.[7] இவருடைய இந்த மேடை நிகழ்ச்சிக்கான நடன அமைப்பை சரோஜ் கான் என்பவர் மேற்கொண்டார்.

இந்தியாவின் மிகப்பிரபலமான ஒவியரான எம். எப். ஹுஸேன், மாதுரி மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார் மற்றும் அவரை பெண்மையின் தொகுப்பு என்று கருதினார். அதனால் அவர் கஜ காமினி (2000) என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார், அதில் மாதுரியும் நடித்தார். ஹுஸேன், மாதுரி அவர்களைப் புகழுரைக்கும் நோக்கத்துடன் அவர் இப்படத்தை எடுத்தார்.[8] இப்படத்தில் அவர் பெண்மையின் பல்வேறு வடிவங்களை மற்றும் வெளிப்பாடுகளை சித்தரிப்பதைக் காணலாம், அவற்றில் காளிதாசரின் கற்பனையில் உதித்த அபிமான நங்கை, லியொனார்டோவின் மோனா லிசா, ஒரு போராளி மற்றும் இசையின் நலஉணர்வுமிகு உளப்பிணியின் (நல நில உணர்வின்) அவதாரம் அதாவது விண்ணுலகிலிருந்து மண்ணுலகத்திற்கு வந்து பிறப்பது போன்ற தோற்றம் ஆகியவவை அவற்றிலடங்கும்.

டிசம்பர் 7, 2006 அன்று ஆஜா நாச்லே (2007) என்ற படத்தின் படப்பிடிப்பைத் துவங்க, மாதுரி தனது பிள்ளைகள் மற்றும் கணவனுடன் மும்பைக்கு திரும்பி வந்தார்.[9] இந்தப்படம் நவம்பர் 2007 இல் வெளியானது மற்றும் திறனாய்வாளர்கள் அதனை அலசி களைந்தும், மாதுரியின் நடிப்பு நல்லமுறையில் வரவேற்கப் பெற்றது. மேலும் நியூயார்க் டைம்ஸ் "அவரிடம் இன்னமும் திறமை இருக்கிறது" என்ற கருத்தை வெளியிட்டது.[10][11]

2007 ஆண்டின் அனைத்துலக மகளிர் தினம் அன்று, மாதுரி ரிடிஃப் வரையறுத்த பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகளின் பட்டியலில் என்றென்றைக்கும் முதன்மை பெற்றவரானார்.[3]. மே 2008 ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற இந்தியன் பிலிம் பெஸ்டிவலில் இவர் கவுரவபடுத்தப்பட்டார். மார்ச் 2010 ல், தி எக்கனாமிக் டைம்ஸ் மாதுரியை, "இந்தியாவை பெருமை அடைய செய்த 33 பெண்மணிகள்" பட்டியலில் இவரையும் சேர்த்து பெருமைப்படுத்தியது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1999 ஆம் ஆண்டில், மாதுரி தீட்சித் UCLA- என்ற அமைப்பில் இதயக்குழலிய அறுவை சிகிச்சை முறையில் பயிற்சி பெற்றவரும், அமெரிக்காவிலுள்ள டென்வெர் நகரத்தில் வசித்து வரும் ஸ்ரீராம் மாதவ் நேனே என்ற மருத்துவரை (டாக்டரை) மணந்தார்; டாக்டர். நேனே ஒரு மராத்தி கொங்கணஸ்த பிராம்மண குடும்பத்தைச் சார்ந்தவராவார். இவருக்கு இரு பிள்ளைகள் அரின் (மார்ச் 18, 2003 அன்று கோலோரடோவில் பிறந்தவன்) மற்றும் ராயன் (March 8, 2005 அன்று கோலோரடோவில் பிறந்தவன்).

இவருக்கு ரூபா மற்றும் பாரதி என்று இரண்டு அக்காவும் அஜித் என்ற ஒரு அண்ணனும் உள்ளனர். மாதுரி குடும்பத்தினருடன் அமேரிக்காவில் டென்வெர், கோலோரடோவில் வசிக்கின்றார்.

விருதுகளும் பரிந்துரைப்புகளும்[தொகு]

பிலிம்பேர் விருதுகள்[தொகு]

வென்றது

  • 1990: தில் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 1992: பேட்டா என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 1994: ஹம் ஆப்கே ஹைன் கவுன் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 1997: தில் தொ பாகல் ஹை என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 2002: தேவதாஸ் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த துணைநடிகை விருது

பரிந்துரைப்பு

  • 1988: தேஜாப் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 1989: பிரேம் பிரதிக்யா என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 1991: சாஜன் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 1993: கல்நாயக் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 1994: அன்ஜாம் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 1995: ராஜா என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 1995: யாரானா என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 2000: புகார் என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
  • 2001: லஜ்ஜா என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த துணைநடிகை விருது
  • 2008: ஆஜா நாச்லே என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்[தொகு]

வென்றது

  • 1994: ஹம் ஆப்கே ஹைன் கவுன் என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது
  • 1995: ராஜா என்ற படத்திற்கு என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது
  • 1997: ம்ரித்யுதண்ட் என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது
  • 2002: தேவதாஸ் என்ற படத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது

பரிந்துரைப்பு

  • 2000: புகார் என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது

ஜி சினி விருதுகள்[தொகு]

வென்றது

  • 1998: சிறந்த நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை தில் தொ பாகல் ஹை என்ற படத்திற்காக
  • 2002: சிறந்த துணை நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை லஜ்ஜா என்ற படத்திற்காக

பரிந்துரைப்பு

  • 2000: சிறந்த நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை புகார் என்ற படத்திற்காக
  • 2003: சிறந்த நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை தேவதாஸ் என்ற படத்திற்காக

ஐஐஎப்எ விருதுகள்[தொகு]

பரிந்துரைப்பு

  • 2000: புகார் என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான IIFA ஐஐஎப்எ திரைப்பட விருது

ஸ்டார் டஸ்ட் விருதுகள்[தொகு]

பரிந்துரைப்பு

விருதுகள், கவுரவங்கள், மற்றும் பாராட்டுதல்கள்[தொகு]

  • 1997: ஆந்திர பிரதேஷ் அரசு அளித்த "களபநேத்ரி" விருது [12]
  • 2001: தேசிய குடிமகன்களுக்கான விருது (நேசனல் சிடிஜென்ஸ் அவார்ட்)
  • 2001: போர்ப்ஸ் (Forbes) என்ற பத்திரிகை இந்தியாவின் முதன்மை பெற்ற முதல் ஐந்து திரைப்பட நடிகர்களில் ஒருவராக மாதுரி உள்ளதாக கூறுகிறது.[13]
  • 2007: "என்றென்றைக்குமான பாலிவுட்டின் மிக சிறந்த நடிகை"[3]
  • 2008: பத்ம ஸ்ரீ , இந்திய அரசு அளிக்கும் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமுறைசார்ந்த விருது.[14]
  • 2008: ஐ எப் எப் எல் ஏ (IFFLA) இந்தியன் பிலிம் பெஸ்டிவல் அட் லாஸ் ஏஞ்செல்ஸ் விழாவில் கவுரவிக்கப்பெற்றார்.[15]

திரைப்பட விவரம்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மற்ற குறிப்புகள்
1984 அபோத் கௌரி
1985 ஆவாரா பாப்
1986 சுவாதி
1987 மோஹ்ரெ
ஹிபாஜத் ஜானகி
உத்தர் தக்ஷின் சந்தா
1988 கத்ரோன் கே கிலாடி கவிதா
தயாவான் நீலா வேல்கு
தேஜாப் மோகினி பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
1989 வர்தி ஜெயா
ராம் லகன் ராதா
பிரேம் பிரதிக்யா லக்ஷ்மி பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
இலாகா வித்யா
முஜ்ரிம் சோனியா
த்ரிதேவ் திவ்யா மாதுர்
கானூன் அப்னா அப்னா பாரதி
பரிந்தா பாரோ ஒஸ்கார் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வமான வரவு
பாப் கா அந்த்
1990 மஹா சங்க்ராம்
கிஷன் கன்ஹையா அஞ்சு
இஜ்ஜத்தார் மோகினி
தில் மது மெஹ்ரா வெற்றியாளர் , பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
தீவானா முஜ் சா நஹின் அனிதா
ஜீவன் ஏக் சங்கர்ஷ் மது சென்
சைலாப் டாக்டர்.சுஷ்மா
ஜமாயி ராஜா ரேகா
தானேதார் சந்தா
1991 ப்யார் கா தேவதா தேவி
கிலாப் ஸ்வேதா
100 டேஸ் தேவி
பிரதிகார் மது
சாஜன் பூஜா பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
ப்ரஹார் ஷிர்லி
1992 பேட்டா சரஸ்வதி வெற்றியாளர் , பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
ஜிந்தகி ஏக் ஜுவா ஜூஹி
பிரேம் தீவானே சிவாங்கி மெஹ்ரா
கேல் சீமா /டாக்டர். ஜடி புட்டி
சங்கீத்
1993 தரவி ட்ரீம்கேர்ல்
சாகிபான் சாகிபான்
கல்நாயக் கங்கா

(கங்கோத்ரி தேவி )

பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
பூல்
தில் தேரே ஆஷிக் சோனியா கன்னா/ சாவித்ரி தேவி
ஆசூ பனே அங்காரே
1994 அன்ஜாம் ஷிவானி சோப்ரா பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
ஹம் ஆப்கே ஹைன் கோன் நிஷா சௌதுரி வெற்றியாளர் , பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
1995 ராஜா மது கரேவால் பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
யாரானா லலிதா/ஷிகா பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
1996 பிரேம் கிரந்த் கஜ்ரி
பாபி தேவதா
ராஜ் குமார்
1997) கோய்லா கௌரி
மஹந்தா ஜென்னி பின்டோ
ம்ரித்யுதண்ட் பூல்வா பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
மொஹப்பத் ஷ்வேதா ஷர்மா
தில் தோ பாகல் ஹை பூஜா வெற்றியாளர் , பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
1998 படே மியான் சோடே மியான் மாதுரி தீட்சித் சிறப்புத் தோற்றம்
வாஜூத் அபூர்வா சௌதுரி
1999) ஆர்ஜூ பூஜா
2000 புகார் அஞ்சலி பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
கஜ காமினி கஜ காமினி/ சங்கீதா/ சகுந்தலா/ மோனிகா/ மோனா லிசா
2001 யே ராஸ்தே ஹைன் ப்யார் கே நேஹா
லஜ்ஜா ஜான்கி பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது
2002 ஹம் துமாரே ஹைன் சனம் ராதா
தேவதாஸ் சந்திரமுகி வெற்றிபெற்றவர் , பிலிம்பேர் சிறந்த துணை நடிகைக்கான விருது ஒஸ்கார் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வமான வரவு
2007 ஆஜா நாச்லே தியா பரிந்துரைப்பு, பிலிம்பேர் சிறந்த நடிகை விருது

குறிப்புகள்[தொகு]

  1. "indiaFM". Wish Madhuri Dixit on her birthday today. 2008-05-15. http://www.bollywoodhungama.com/news/2008/05/15/11388/index.html. பார்த்த நாள்: 2008-10-03 October. 
  2. Kumar, P.K. Ajith (6 December 2007). "Dancing to her tunes". The Hindu இம் மூலத்தில் இருந்து 2007-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071209113840/http://www.hindu.com/2007/12/06/stories/2007120650170200.htm. பார்த்த நாள்: 2009-05-30. 
  3. 3.0 3.1 3.2 "specials.rediff.com". Bollywood's Best Actress. Ever.. http://specials.rediff.com/women07/2007/mar/06wslid11.htm. பார்த்த நாள்: 4 January 2009. 
  4. Ganti, Tejaswini (2004). Bollywood: A Guidebook to Popular Hindi Cinema. Routledge. பக். 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0415288541. https://archive.org/details/bollywoodguidebo0000gant. 
  5. "1997 awards". Indiatimes இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225194118/http://filmfareawards.indiatimes.com/articleshow/368661.cms. பார்த்த நாள்: 2006-12-12. 
  6. "imdb.com". Film named after Madhuri Dixit. http://www.imdb.com/title/tt0374848/. பார்த்த நாள்: 12 December 2006. 
  7. "expressindia.com". Six years after, Madhuri Dixit to sizzle again இம் மூலத்தில் இருந்து 23 பிப்ரவரி 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060223073435/http://www.expressindia.com/fullstory.php?newsid=63173. பார்த்த நாள்: 20 February 2006. 
  8. "santabanta.com". The work of the muse இம் மூலத்தில் இருந்து 13 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071013082710/http://santabanta.com/wallpapers/biographyasp?catid=404. பார்த்த நாள்: 12 December 2006. 
  9. "rediff.com". Madhuri Dixit arrives for new film. http://in.rediff.com/movies/2006/dec/07madhuri.htm. பார்த்த நாள்: 10 December 2006. 
  10. ""Aaja Nachle" - Asia entertainment news from Variety - varietyasiaonline.com" இம் மூலத்தில் இருந்து 2010-06-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100625035237/http://www.varietyasiaonline.com/content/view/5258/53. 
  11. "Aaja Nachle - Movie - Review - New York Times". http://movies.nytimes.com/2007/12/01/movies/01nach.html. 
  12. "AP honours Sridevi, Madhuri". The Indian Express. 1997-11-24 இம் மூலத்தில் இருந்து 2010-08-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100812025818/http://www.expressindia.com/news/ie/daily/19971124/32850403.html. பார்த்த நாள்: 4 January 2009. 
  13. http://www.forbes.com/2001/03/09/0309bollywood.html Forbes.com
  14. "Madhuri missed meeting favourite director". Times of India. 2008-05-13 இம் மூலத்தில் இருந்து 18 மே 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080518065403/http://timesofindia.indiatimes.com/articleshow/msid-3035900,prtpage-1.cms. பார்த்த நாள்: 4 January 2009. 
  15. "Madhuri Dixit Tribute". Indian Film Festival of Los Angeles இம் மூலத்தில் இருந்து 7 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081207085704/http://www.indianfilmfestival.org/movies08/tribute2008-madhuridixit.html. பார்த்த நாள்: 4 January 2009. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுரி_தீட்சித்&oldid=3582854" இருந்து மீள்விக்கப்பட்டது