ஆஷா பரேக்
ஆஷா பரேக் | |
---|---|
2018இல் பரேக் | |
பிறப்பு | 2 அக்டோபர் 1942[1] |
பணி | நடிகை , தயரிப்பாளார், நடனம் |
செயற்பாட்டுக் காலம் | 1952–1999 |
விருதுகள் |
|
ஆஷா பரேக் (Asha Parekh) 1942 அக்டோபர் 2 அன்று பிறந்த இந்தியத் திரைப்பட நடிகை ,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 1960 களில் வணிகரீதியாக வெற்றிபெற்ற பல படங்களில் தோன்றியுள்ளார் 1959 முதல் 1973 வரை இந்தி சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தார்.[2] 1992 இல், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். திரைப்படத் துறையில் அவரது வெற்றிகரமான வாழ்க்கை காரணமாக அவர் பாலிவுட்டின் ”ஹிட் கேர்ள்” எனக் கருதப்படுகிறார். எல்லா நேரத்திலும் மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வாக்குமிக்க இந்தி திரைப்பட நடிகர்களில் ஒருவராக பரேக் கருதப்படுகிறார்.[3]
சுயசரிதை
[தொகு]ஆஷா பரேக் குஜராத்தி பகுதியைச் சார்ந்தவர் ஆவார்.[4] 1942 அக்டோபர் 2 அன்று பிரந்துள்ளார்.[1] போக்ரி முஸ்லீமான சுதா என்கிற சல்மா பரேக்கிற்கும், குஜராத்தியான பச்சுபாய் பரேக்கிற்கும் பிறந்தவர் ஆவார்.[5][6][7][8] இவரது தாயார் சிறு வயதிலேயே இந்திய பாரம்பரிய நடன வகுப்புகளில் சேர்த்தார், பண்டிட் பன்சிலால் பாரதி உட்பட பல ஆசிரியர்களிடமிருந்து நடனம் கற்றுக்கொண்டார்.
தொழில்
[தொகு]பேபி ஆஷா பரேக் என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் பரேக் . பின்னர், இவரது 10வது வயதில் புகழ் பெற்ற இயக்குனர் பிமல் ராய் ஒரு நடன நிகழ்ச்சியில் இவரைக் கண்டு தனது "மா" (1952) திரைப்படத்திலும் அதன் பின்னர் "பாப் பேட்டி" (1954)படத்திலும் இவரை நடிக்க வைத்தார்.[9] பிந்தைய திரைப்படத்தின் தோல்வி அவருக்கு ஏமாற்றம் அளித்தது, மேலும் சில குழந்தைப் பாத்திரங்களை செய்திருந்தாலும், அவர் தனது படிப்பினை மீண்டும் தொடர்ந்தார்.[10] பதினாறு வயதில் மீண்டும் நடிக்க முயற்சி செய்து கதாநாயகியாக அறிமுகமானார், ஆனால் நடிகை அமீட்டாவிற்கு ஆதரவாக இயக்குனர் விஜய் பட் படமான "கோன்ஜ் உதி ஷெனாய்" என்பதிலிருந்து நிராகரிக்கப்பட்டார்.
திரைப்பட தயாரிப்பாளர் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து இல்லை என்ற கூறினார். எட்டு நாட்கள் கழித்து, திரைப்பட தயாரிப்பாளர் சுபோத் முகர்ஜி , எழுத்தாளர் மற்றும் இயக்குனரான நாசிர் ஹுசைன் ஆகிய இருவரது "தில் தேக்கே தேகோ" (1959) படத்தில் சம்மி கபூருக்கு கதாநாயகியாக நடித்தார். இது அவருக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை அளித்தது.[11] இந்த படம் ஹுசைனுடன் ஒரு நீண்ட மற்றும் பலமான உறவை ஏற்படுத்தியது. அவரது படங்களில் ஆறு கதாநாயகியாக பரேக் நடித்தார். மேலும் 21 படங்களின் விநியோகத்தில் ஹுசைன் ஈடுபட்டார்.[12]
பரேக் ஆரம்பத்தில் அவரது பெரும்பாலான படங்களில் ஒரு கவர்ச்சி பெண்ணாக, சிறந்த நடன கலைஞராக மற்றும் முரட்டுத் தனமான நாயகியாகவே அறியப்பட்டார், இயக்குனர் ராஜ் கோஸ்லா " தோ பதான்"(1969) படத்தின் மூலம் அதை உடைத்தார். பின்னர் அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார். பல முக்கிய இயக்குநர்களின் பல திரைப்படங்களில் தொடர்ந்து பலமுறை நடித்தார், அதில் விஜய் ஆனந்த் மற்றும் மோகன் செகல் ஆகியோர் அடங்குவர். இந்தி திரைப்படங்களில் அவரது புகழ் உச்சத்தில் இருந்தபோது அவர் மூன்று குஜராத்தி திரைப்படங்களில் நடித்தார்.[13] ஒரு சில பஞ்சாபி மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.[14]
சில் நாட்களில் இவரை பாபி (அண்ணி) மற்றும் அம்மா பாத்திரங்களில் நடிக்க அழைத்தனர், ஆனால் இது அவரது தொழில் வாழ்க்கையின் "மோசமான நிலை" என்று அவர் நினைத்தார். எனவே அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார், அவளுடைய நண்பர்கள் ஒரு தொலைக்காட்சி இயக்குனராவதற்கு பரிந்துரை செய்தனர்.[15] அவர்களின் ஆலோசனையை ஏற்றுகொண்ட இவர் "ஆக்ருதி" என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி "பாலாஷ் கே பூல்" , "பாஜே பாயல்\", "கோரா ககாஸ்" போன்ற தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்துள்ளார்.[16]
1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் முதல் பெண் தலைவராகவும் இருந்தார்.. 1998 முதல் 2001 வரை அவர் அப்பதவி வகித்தார், அதில் எந்த ஊதியமும் கிடைக்கவில்லை, ஆனால் எலிசபெத் (1998) திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்குவதில் அதிகமான சர்ச்சைகள் ஏற்பட்டதையடுத்து , அதிலிருந்து விலகி பின்னர், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களின் சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றினார், பின்னர் அதன் அலுவலக பொறுப்பாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[17] ஆஷா 1995 இல் நடிப்பதைத் தடுத்து நிறுத்தி தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்தார். 2002 இல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.[18]
சொந்த வாழ்க்கை
[தொகு]பரேக் திருமணம் செய்து கொள்ளவில்லை.[19][20] அவர் ஏற்கனவே திருமணமான இயக்குனர் நாசீர் ஹுசைன் உடன் காதல் கொண்டிருந்தார், ஆனால் இருவரது குடுமபமும் இதை ஏற்காததால் அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை.[21] முன்னதாக, பரேக் தான் ஒரு நீண்டகால காதலைக் கொண்டிருப்பதாக மட்டுமே கூறினார், ஆனால் உறவு பற்றி விரிவாகக் கூற மறுத்துவிட்டார், "அது நீடித்திருக்கும் போது நன்றாக இருந்தது" என்றார்.[22] நாசீர் ஹுசைனின் வாழ்நாளின் கடைசி வருடத்தில் அவரது மனைவியின் மரணத்தின் காரணமாக அவர் தனிமையில் இருந்ததனால் அவரை தான் சந்திக்கவில்லை என்று கூறினார்.[23] ஆனால் 2002 ல் அவர் இறக்கும் முன் அவர் அவரிடம் பேசினார்[24]
இன்று, பரேக் தனது நடன அகாடமி "காரா பவன்" மற்றும் மும்பை , சாண்டா க்ரூஸ் ஆஷா பரேக் மருத்துவமனை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்.[7][25]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Jha, Subhash K. (3 October 2017). ""I don't feel 75 at all" – Asha Parekh". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
- ↑ Bhawana Somaaya. "Screen The Business Of Entertainment-Films-Happenigs". Screenindia.com. Archived from the original on 9 February 2011. பார்க்கப்பட்ட நாள் 27 October 2008.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-04.
- ↑ Khan, Saeed (6 May 2012). "Gujarat woman gave censor the scissors". அகமதாபாத்: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Gujarat-woman-gave-censor-the-scissors/articleshow/13015091.cms. பார்த்த நாள்: 24 February 2018.
- ↑ "I was enamoured by Nasir saab - Asha Parekh". பிலிம்பேர். பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
- ↑ "Asha Parekh – Memories". Cineplot.com. 28 March 2011. பார்க்கப்பட்ட நாள் 11 September 2011.
- ↑ 7.0 7.1 "Asha ParekhSpirituality – Indiatimes". Spirituality.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 11 June 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080611091012/http://spirituality.indiatimes.com/articleshow/128309.cms. பார்த்த நாள்: 27 October 2008.
- ↑ "I AM: Asha Parekh". The Times Of India. 14 October 2010. http://timesofindia.indiatimes.com/life/spirituality/mind-over-matter/I-AM-Asha-Parekh/articleshow/5734640.cms.
- ↑ Parekh, Asha and Mohammed, Khalid. The Hit Girl. New Delhi: Om Books International (2017), p. 49
- ↑ "The Hindu : Poise and pearly smiles". Hinduonnet.com. Archived from the original on 11 ஜனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 27 October 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Interview". Thirtymm.com. Archived from the original on 29 September 2011. பார்க்கப்பட்ட நாள் 11 September 2011.
- ↑ Kumar, Anuj (19 December 2013). "Jubilee queen, once more". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/features/cinema/jubilee-queen-once-more/article5478936.ece.
- ↑ "Indiantelevision.com > Box Populi by Subhash K Jha > 'Sa Re Ga Ma' still challenges new kids on the block". Indiantelevision.com. பார்க்கப்பட்ட நாள் 27 October 2008.
- ↑ "Spice". Screenindia.com. Archived from the original on 13 May 2009. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
- ↑ "Screen The Business Of Entertainment-Television-Cover Story". Screenindia.com. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Chaya Unnikrishnan. "Printer Friendly Version". Screenindia.com. பார்க்கப்பட்ட நாள் 27 October 2008.
- ↑ "Asha Parekh wins CINTAA elections". News.webindia123.com. Archived from the original on 27 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 27 October 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Filmfare – Print Edition". Downloads.movies.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 11 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090111084754/http://downloads.movies.indiatimes.com/site/april2002/ivw15.html. பார்த்த நாள்: 27 October 2008.
- ↑ https://web.archive.org/web/20091024190704/http://geocities.com/fareeha7/intthr3.html Sadhana (actress) referred to a relationship between Asha and Nasir Hussain, but also acknowledged that she did not know the extent of their relationship]
- ↑ http://www.filmfare.com/features/lucky-strike-asha-parekh-4661-2.html#descArticle
- ↑ Parekh, Asha and Mohammed, Khalid. The Hit Girl. New Delhi: Om Books International (2017), p. 214-217
- ↑ "Asha Parekh: "No hero made passes at me… My male co-stars were intimidated by me!"- Interviews-News & Gossip-Indiatimes – Movies". Movies.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090113142026/http://movies.indiatimes.com/articleshow/msid-3077619,prtpage-1.cms. பார்த்த நாள்: 27 October 2008.
- ↑ March 2002 indiavarta.com – Startrek [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Express India". Cities.expressindia.com. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
- ↑ http://www.hindustantimes.com/bollywood/felt-miserable-had-suicidal-thoughts-asha-parekh-on-her-most-successful-time/story-xX5P8DDn1UZgt88pHpYxbI.html
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Asha Parekh
- Asha Parekh - a profile by Dinesh Raheja