நூதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூதன்
Nutan Hindi Movie Actress (14).jpg
1958 இல் நூதன்
பிறப்புசூன் 4, 1936(1936-06-04)
மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு21 பெப்ரவரி 1991(1991-02-21) (அகவை 54)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
மார்பகப் புற்றுநோய்
தேசியம்இளகியன்
செயற்பாட்டுக்
காலம்
1950 முதல் 1991 வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்சீமா (1955)
சுஜாதா (1959)
பாந்தினி (1963)
மிலன் (1967)
மெயின் துள்சி தேரே ஆங்கன் கி (1978)
பெற்றோர்சோபனா & மார்க் மற்றும் குமார் சென் சமார்த்
வாழ்க்கைத்
துணை
ரஜனீஷ் பால் (தி. 1959⁠–⁠1991)

( அவருடைய இறப்பு)
பிள்ளைகள்மோக்னீஷ் பால்
உறவினர்கள்முகர்ஜி சமாரத் குடும்பம்
விருதுகள்
  • சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
  • சிறந்த நடிகைக்கான பெங்கால் திரைப்பத்திரிக்கையாளர் சங்கத்தின் விருது
  • சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது

நூதன் பால் (Nutan Bahl) (நாதன் சமாரத், 4 சூன் 1936 - 21 பெப்ரவரி 1991) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவரது திரை வாழ்க்கை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆகும். 70 க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நட்சத்திர நடிகையாகவே தோன்றியுள்ளார்.[1][2] இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் போற்றப்படக் கூடிய ஒரு நடிகையாகவே கருதப்படுகிறார்.[3] பிலிம்பேர் வழங்கிய சிறந்த நடிகைக்கான விருது உட்பட ஐந்து விருதுகளை கொண்டுள்ளார், 30 ஆண்டுகள் திரை வாழ்க்கையில் இவர் பெற்ற விருதுகளை, 2011 இல் இவரது உறவினரான நடிகை கஜோல் சமன் செய்தார்.[4] 1974 ஆம் ஆண்டு, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

குமார் சென் சமாரத் மற்றும் சோபனா சமாரத் ஆகியோரின் மகளும், திரைப்பட நடிகையுமான நூதன் தன்னுடைய 14 வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவரது தாயார் இயக்கிய "ஹமாரி பேட்டி" (1950) என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர், அதைத் தொடர்ந்து, 1950 இல் "நாகினா" மற்றும் "ஹம் லோக்" போன்ற படங்களில் தோன்ற ஆரம்பித்தார். 1955 ஆம் ஆண்டு வெளிவந்த "சீமா" என்ற படத்தில் இவரது பாத்திரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அது அவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்றுத் தந்தது. 1960 முதல் 1970களின் பிற்பகுதி வரை தொடர்ந்து நடித்து வந்த சுஜாதா (1959), பாந்தினி (1963), மிலன் (1967) மற்றும் மேய்ன் துள்சி தேரே ஆங்கன் கி (1978) போன்ற படங்களில் நடித்ததனால் தொடர்ந்து நான்கு விருதுகளைப் பெற்றுள்ளார். 1980களில் இவர் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்து அவர் இறக்கும் வரை நடித்து வந்தார். சாஜன் தி சகேலி (1981), மேரி ஜங் (1985) மற்றும் நாம் (1986) போன்ற படங்கள் உட்பட இவர் பெரும்பாலும் தாயார் வேடத்திலேயே நடித்துள்ளார். மேரி ஜங் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆறாவது மற்றும் கடைசி பிலிம்பேர் விருது இவருக்கு கிடைத்தது.

நூதன் மார்பகப் புற்றுநோய் காரணமாக 1991 ஆம் ஆண்டு இறந்தார். நூதன் கடற்படை அதிகாரி லெட்டினன்ட் கமாண்டர் ரஜனிஷ் பால் என்பவரை 1959 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மோக்னீஷ் பால் என்ற ஒரு மகனும் உள்ளார். இவர் பின்னர் தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும் நடிகரானார். நூதனின் இறப்பினால் இவர்களது 30 வருட திருமண வாழ்க்கை முடிவுற்றது.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

மராத்திய சந்திரசேனிய கயாஸ்த பிரபு என்ற குடும்பத்தில் இயக்குநரும் கவிஞருமான குமார் சென் சமார்த் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சோபனா என்பவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்தவராக 1936 சூன் 4 அன்று நூதன் பிறந்தார். அவரது சிறு வயதில் தன்னுடைய நிறத்தைப் பற்றியும், அழகைப் பற்றியும் ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்து வந்தார்.[5][6][7] நடிகை தனுஜா மற்றும் சதுரா என்ற இரு சகோதரிகளும், ஜெய்தீப் என்ற சகோதரனும் உண்டு. ஜெய்தீப் பிறப்பிற்கு முன்னரே இவரது பெற்றோர்கள் பிரிந்து விட்டனர். நூதன் பஞ்சாங்கி புனித சூசையப்பர் கான்வென்டில் படித்துள்ளார்.[8] 1953 இல் மேல் படிப்பிற்காக ஸ்விட்சர்லாந்து சென்றார். இவர் நடித்த திரைப்படம் தோல்வி கண்டவுடன் இவரது தாயாரின் கட்டளைப்படி இவர் சென்றதாகவும், அங்கு தான் இருந்த ஒரு வருடம் தன்னுடைய வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணமிது என நூதன் தெரிவித்தார்.[9]

சொந்த வாழ்க்கை[தொகு]

நூதன் கடற்படை அதிகாரி லெட்டினன்ட் கமாண்டர் ரஜனிஷ் பால் என்பவரை 1959 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மோக்னீஷ் பால் என்ற ஒரு மகன் பிறந்தார். பின்னர் இவர் தொலைக் காட்சியிலும், திரைப்படங்களிலும் நடிகரானார்.வேட்டையாடுவது இவருக்கு மிகவும் பிடிக்கும்.[10]

இறப்பு[தொகு]

1990 இல் நூதனுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதை அறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார்.[11] அவரது உடல் நிலை மோசமானதால் 1991 பிப்ரவரியில், மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கக் பட்டார். அந்த சமயத்தில் கர்ஜனா மற்றும் இன்சானியாத் போன்ற படங்களில் நடித்து வந்தார். இவர் (இந்திய நேரப்படி) பிப்ரவரி 21, 1991 ஆம் ஆண்டு பிற்பகல் 12.07 மணிக்கு இறந்தார்.[12] அவரது கணவர் தன்னுடைய வீட்டில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 2004 ஆம் ஆண்டு இறந்தார்.[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Sunday Tribune – Spectrum – Article". Tribuneindia.com. 26 May 2002. 22 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "rediff.com, Movies: Forever Nutan". Rediff.com. 22 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The Sunday Tribune – Spectrum". Tribuneindia.com. 22 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. Nutan Upperstall.
  5. Gupte, Pranay (2010). "Alone and forgotten". The Hindu. http://www.thehindu.com/opinion/op-ed/Alone-and-forgotten/article12718987.ece. "In the event, Shobhana married Kumarsen Samarth — one of the early developers of the Films Division of India — who hailed from the same CKP community." 
  6. Renu Saran (2014). Encyclopedia of Bollywood–Film Actresses. Diamond Books. பக். 76. "Nutan. She grew with complexes, she was termed skinny and ugly, yet her eyes told tales from the depth of the heart and she gave us more than three decades of her life. Daughter of an established actress Shobana Samarth, Nutan was born on June 4, 1936 in Mumbai..."" 
  7. "Legendary wonderful Actress". The Times of India.
  8. "The agony & ecstasy of being Tanuja". The Times of India. 10 August 2003. 4 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  9. Sharma, Anshika (24 January 2017). "Nutan: The Woman Who Defined Bold and Beautiful in Bollywood in the 70s". 4 June 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Drop-dead gorgeous: Nutan". Filmfare. 14 November 2013. 3 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  11. Farook, Farhana (23 January 2017). "'Her palms smelt of Chandan' : A detailed account of the life of the legendary Nutan". Filmfare. 3 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Nutan dead". The Indian Express: p. 1. 22 February 1991. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19910222&printsec=frontpage. பார்த்த நாள்: 3 June 2017. 
  13. "Actor Mohnish Behl's father dies in fire". ரெடிப்.காம். 4 August 2004. http://www.rediff.com/movies/2004/aug/04bahl.htm. 

வெளி இணைப்புகள் .[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nutan
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூதன்&oldid=3587379" இருந்து மீள்விக்கப்பட்டது