கங்கனா ரனாத்
கங்கனா ரனாவத் | |
---|---|
![]() 2024இல் கங்கனா ரனாவத் | |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 ஜூன் 2024 | |
முன்னையவர் | பிரதிபா சிங் |
தொகுதி | மண்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கம்க்கனா அமர்தீப் ரனாவத் 23 மார்ச்சு 1986 மண்டி, இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பணி |
|
கையெழுத்து | ![]() |
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்போது வரை |
புகழ்ப்பட்டம் | பத்மசிறீ (2020) |
கங்கனா அமர்தீப் ரனாவத் (Kangana Ranaut, பிறப்பு 23 மார்ச் 1987)[1]}}[2] என்பவர் ஓர் இந்திய நடிகையும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.[3][1] இவர் முதன்மையாக இந்தி திரைப்ப்படங்களில் பணிபுரிகிறார். நான்கு தேசிய திரைப்பட விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 பட்டியலில் ஆறு முறை இடம்பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் இவருக்கு இந்திய நாட்டின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.
2020 ஆம் ஆண்டில், ரனாவத் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்சைத் தொடங்கினார், இதன் கீழ் இவர் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் சிறந்த உடைகளை அணியக்கூடிய பிரபலங்களில் ஒருவராக ஊடகங்களால் கருதப்படுகிறார், வெளிப்படையாக பேசக்கூடியவர் என்று அறியப்படுகிறார். வலதுசாரி சித்தாந்தங்களுடன் இணைந்து, பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து வருகிறார். வரவிருக்கும் 2024 இந்திய பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளராக இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Kangana Ranaut is not as young as she claims?". Deccan Chronicle (in ஆங்கிலம்). 22 May 2016. Archived from the original on 28 May 2022. Retrieved 1 June 2022.
- ↑ "Ms Kangna Ranaut". sansad.in. Parliament of India. Retrieved 3 July 2024.
- ↑ "Manikarnika Films Private Limited Information on The Economic Times". The Economic Times (in ஆங்கிலம்). Archived from the original on 1 June 2022. Retrieved 1 June 2022.
- ↑ "நடிகை கங்கனா ரனாவத் முதல் மேனகா காந்தி வரை..! - பாஜகவின் 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் ஒரு பார்வை". விகடன். 2024-03-25. Retrieved 2024-04-08.