ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி | |
|---|---|
இலக்மி ஃபேசன் வீக் 2010இல் ஸ்ரீதேவி | |
| பிறப்பு | ஸ்ரீலட்சுமிதேவி 13 ஆகத்து 1963 சென்னை,[1] தமிழ்நாடு, இந்தியா |
| இறப்பு | 24 பெப்ரவரி 2018 (அகவை 54) துபாய், ஐக்கிய அரபு அமீரகம்[2] |
| இறப்பிற்கான காரணம் | நீரில் மூழ்கி இறப்பு[3][4][5] |
| பணி | நடிகர், தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1967–2018 |
| பெற்றோர் | தந்தை : ஐயப்பன் நாயுடு தாயார் : ராஜேஸ்வரி |
| வாழ்க்கைத் துணை | போனி கபூர், (1996-2018) |
| பிள்ளைகள் | ஜான்வி, குஷி |
ஸ்ரீதேவி (Sridevi, 13 ஆகத்து 1963 - 24 பெப்ரவரி 2018) தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், மீனம்பட்டியில்[1][6] பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.[7]
கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.[8]
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படமும் 300வது படமாகும்.
கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
வாழ்க்கை குறிப்புகள்
[தொகு]இவர் இயற்பெயர் ஸ்ரீலட்சுமிதேவி என்ற தனது பெயரை திரையுலகிற்காக சுருக்கமாக ஸ்ரீதேவி என்று மாற்றி வைத்து கொண்டார். இவர் ஐயப்பன் நாயுடு – இராஜேஸ்வரி ரெட்டி தம்பதியருக்கு 1963 ஆகத்து 13 அன்று சென்னையில் பிறந்தார் இவருக்கு ஸ்ரீலதா என்ற தங்கை ஒருவர் உள்ளார். இவர் தந்தை ஐயப்பன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஒரு செல்வாக்கு மிக்க நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.[1] பின்பு ஐயப்பன் அன்றைய முன்னணி வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த போது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ராஜேஸ்வரி ரெட்டி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஶ்ரீலதாவின் கணவர் சஞ்சய் ராமசாமி 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அவர் சார்ந்திருந்த இந்தியக் காங்கிரசு (சமதர்மம்) கட்சி சார்பில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
1996 சூன் 2 அன்று ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.[9]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]பாலிவுட்
[தொகு]ஸ்ரீதேவி பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னக மொழிப் படங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற பின்னர், 1980-களின் தொடக்கத்தில் பாலிவுட் சென்று மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டார். 1980-களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் எனப் பெயர்ப் பெற்றார். ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரிஷிகபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகிய பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிக நீண்ட காலம் பாலிவுட்டில் அவர் நடித்துவந்தார்.
மறைவு
[தொகு]2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது.[10] பின்னர் வெளியான பிணக்கூற்று அறிக்கை, அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது குருதியில் மதுபானம் இருந்ததாகவும் கூறியது.[11][12] உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவரது உடலானது பெப்ரவரி 27, 2018 அன்று தனி விமானம் மூலம் துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு இவரது உடலை பெப்ரவரி 28, 2018 அன்று மும்பையில் உள்ள வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "ஸ்ரீதேவி: மீனம்பட்டியில் இருந்து மும்பை வரை". BBC News தமிழ். 25 February 2018.
- ↑ https://m.huffingtonpost.in/amp/2018/02/24/breaking-sridevi-dies-at-55_a_23370162/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு தகவல்".
- ↑ http://gulfnews.com/life-style/celebrity/desi-news/bollywood/traces-of-alcohol-found-in-bollywood-actress-sridevi-s-body-died-of-accidental-drowning-1.2178719
- ↑ https://www.aljazeera.com/news/2018/02/bollywood-star-sridevi-died-accidental-drowning-180226104638021.html
- ↑ "sridevi birth place".
{{cite web}}: Cite has empty unknown parameter:|dead-url=(help) - ↑ "Baby Sridevi in pictures: From charming child to stunning teen". The News Minute. 25-02-2018. Retrieved 25-02-2018.
{{cite web}}: Check date values in:|accessdate=and|date=(help) - ↑ நடிகை ஸ்ரீதேவியின் திரைப்பட வாழ்க்கை வரலாறு
- ↑ "ஸ்ரீதேவி". Archived from the original on 2018-02-13. Retrieved 2018-02-25.
- ↑ "Bollywood actor Sridevi passes away". Indian Express. 25-02-2018. Retrieved 25-02-2018.
{{cite web}}: Check date values in:|accessdate=and|date=(help) - ↑ "Traces of alcohol found in Bollywood actress Sridevi's body, died of accidental drowning". கல்ப் நியூசு. Retrieved 26 பெப்ரவரி 2018.
- ↑ "Sridevi died due to accidental drowning, case transferred to Dubai Public Prosecution: Updates". இந்துசுத்தான் டைம்சு. Retrieved 26 பெப்ரவரி 2018.
- ↑ "இறுதி சடங்குகளுக்கு பின் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி உடல் தகனம்".
வெளி இணைப்புகள்
[தொகு]
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- 1963 பிறப்புகள்
- 2018 இறப்புகள்
- இந்தித் திரைப்பட நடிகைகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
- கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- தெலுங்கு மக்கள்
- விருதுநகர் மாவட்ட மக்கள்
- தமிழ்நாட்டு நடிகைகள்
- தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- 20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்
- தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
