நர்கிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நர்கிச் தத்
பிறப்பு பாத்திமா ராசீத்
1 சூன் 1929
கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இறப்பு 3 மே 1981 (வயது 51)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1935, 1942–1967
வாழ்க்கைத்
துணை
சுனில் தத் (1958–1981)
பிள்ளைகள் சஞ்சய் தத்
நம்ரதா தத்
பிரியா தத்

நர்கிச் தத் (Nargis Dutt, நர்கிஸ் தத், உருது: نرگس, இந்தி: नर्गिस; 1 சூன் 1929 – 3 மே 1981), ஒரு புகழ்பெற்ற பாலிவுட் நடிகை ஆவார். 1935 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் கதாநாயகியாக அறிமுகமான படம் தமண்னா. முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான மதர் இந்தியாவில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. இந்தப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப்பெற்றார். நடிகர் சுனில் தத்தை மணந்த இவர் திருமணத்திற்குப்பிறகு நடித்து வெளிவந்த ராத் ஆர் தின் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார்.[1] கணையப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1981-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.[1] இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.[2] நர்கிசை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் "சிறந்த ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை இவர் பெயரில் வழங்கி வருகிறது.[3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Dhawan, M. (27 April 2003). "A paean to Mother India". The Tribune. பார்த்த நாள் 2013-05-09.
  2. Dutt, Nargis (1929-1981) The National Resource Centre for Inclusion, The Spastics Society of India.
  3. "PM’s remarks at the Release of Book "Mr. & Mrs. Dutt" on Late Sunil and Nargis Dutt". Prime Minister of India. மூல முகவரியிலிருந்து September 28, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 May 2013.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நர்கிசு&oldid=2227778" இருந்து மீள்விக்கப்பட்டது