உள்ளடக்கத்துக்குச் செல்

வித்யா பாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யா பாலன்
Vidya Balan
Vidya Balan in 2024
2024-இல் வித்யா பாலன்
பிறப்பு1 சனவரி 1979 (1979-01-01) (அகவை 46)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
புகழ்ப்பட்டம்பத்மசிறீ (2014)

வித்யா பாலன் (Vidya Balan, பிறப்பு: 1 சனவரி 1979) என்பவர் ஒரு இந்திய நடிகையாவார். இவர் பெண்மையப் பாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகில் பெண்களின் சித்தரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக அறியப்படுகிறார். இவர், தேசிய திரைப்பட விருதையும், ஏழு பிலிம்பேர் விருதுகளையும் உள்ளடக்கிய பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

வித்யா சிறு வயதிலிருந்தே திரைப்படத் துறையில் பணிபுரிய விரும்பினார். மேலும் 1995 ஆம் ஆண்டு ஹம் பாஞ்ச் என்ற நகைச்சுவைத் தொடரில் முதன் முதலில் நடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பயின்றபோது, திரைப்படத்துறையில் நுழைய ஒரு பல முயற்சிகளை மேற்கொண்டு அதில் தோல்வியுற்றார். மேலும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இசைக் காணொளிகளிலும் இடம்பெற்றார். இவர் பெங்காலி திரைப்படமான பாலோ தேகோ (2003) மூலம் திரைப்படத்துளையில் அறிமுகமானார். மேலும் இவரது முதல் இந்தி படமான பரினீதா (2005) படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். அதைத் தொடர்ந்து லகே ரஹோ முன்னா பாய் (2006), பூல் புலையா (2007) உள்ளிட்ட பல வணிக ரீதியாக வெற்றிபெற்ற படங்களில் நடித்தார்.

வித்யா மனிதாபிமான நோக்கங்களை ஊக்குவிப்பதோடு, பெண்கள் அதிகாரம் பெறுவதை ஆதரிக்கிறார். இவர் இந்திய இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார் மேலும் ஒரு வானொலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், இவரது ஏற்ற இறக்கமான எடை, உடை இரசனைக்காக விமர்சனங்களைப் பெற்றார். ஆனால் பின்னர் இவரது வழக்கத்திற்கு மாறான தன்மைக்காக ஊடகங்களில் பாராட்டப்பட்டார். வித்யா திரைப்பட தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை மணந்தார்.

துவக்ககால வாழ்க்கையும் துவக்ககால தொழில் போராட்டங்களும்

[தொகு]

வித்யா 1979 சனவரி 1 ஆம் நாள் பம்பாயில் (இன்றைய மும்பை) ஒரு தமிழ்ப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[1][2][3] இவரது தந்தை பி. ஆர். பாலன், டிஜிகேபிளின் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராகப் பணியாற்றினார். இவரது தாயார் சரஸ்வதி பாலன் ஒரு இல்லத்தரசியாவார்.[4][5][6] வித்யாவின் கூற்றுப்படி, கேரளத்தின் பாலக்காட்டில் உள்ள இவரது வீட்டில் அவர்கள் தமிழும் மலையாளமும் கலந்த மொழியைப் பேசுவர்.[7] இவரது அக்காள் பிரியா பாலன், விளம்பரத் துறையில் பணிபுரிகிறார்.[5] நடிகை பிரியாமணி இவரது உறவினராவார்.[8][9] வித்யா மும்பையின் புறநகர்ப் பகுதியான செம்பூரில் வளர்ந்தார். செயிண்ட் அந்தோணி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[10][11]

சிறு வயதிலிருந்தே, வித்யா திரைப்படத் துறைத் தொழிலை விரும்பினார். மேலும் நடிகைகள் சபனா ஆசுமி, மாதுரி தீட்சித் ஆகியோரின் நடிப்பால் ஈர்க்கப்பட்டார்.[12][13] 16 வயதில், ஏக்தா கபூரின் நகைச்சுவைத் தொடரான ஹம் பாஞ்சின் முதல் பருவத்தில், கண்ணாடி அணிந்த இளம்பெண் ராதிகாவாக நடித்தார்.[14][15] தொடர் முடிந்த பிறகு, வித்யா திரைப்படத் தொழிலில் கவனம் செலுத்த விரும்பியதால், இயக்குநர் அனுராக் பாசுவின் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.[16] பெற்றோர் இவரின் முடிவுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் முதலில் கல்வியை முடிக்குமாறு கூறினர்.[12] சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெறுவதற்காக இவர் செயிண்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[17][18]

முதுகலைப் பட்டம் படிக்கும் போது, வித்யா மோகன்லாலுக்கு ஜோடியாக மலையாளப் படமான சக்ரம் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், அதைத் தொடர்ந்து 12 மலையாள மொழிப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், தயாரிப்பு சிக்கல்கள் காரணமாக, சக்ரம் கைவிடப்பட்டது.[19] மோகன்லால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கைவிடப்பட்டது என்பது மலையாளத் திரையுலகில் அதுவரை கேள்விப்படாத ஒரு நிகழ்வாகும். இதனால் தயாரிப்பாளர்கள் வித்யாவின் "துரதிர்ஷ்டமே" படத்திற்கு இடஞ்சல் ஏற்பட காரணம் என்று குற்றம் சாட்டினர். இதனால் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இவர் மாற்றப்பட்டார்.[12] பின்னர் இவர் தமிழ்த் திரைப்படங்களின் பக்கம் கவனம் செலுத்தினார். 2001 ஆம் ஆண்டில், ஆர். மாதவனுக்கு ஜோடியாக என். லிங்குசாமியின் ரன் (2002) படத்தில் கதாநாயகியாக நடித்தார். இருப்பினும், முதல் கட்ட படப்பிடிப்பு அட்டவணை முடித்த பிறகு, வித்யா நீக்கப்பட்டு, பதிலாக மீரா ஜாஸ்மினைக் கொண்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.[20] தவறான சாக்குபோக்குகளினால் இவர் பாலியல் நகைச்சுவை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த வகைப் படம் இவருக்கு சங்கடமாக இருந்தது. எனவே அந்தப் படத்தில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.[12] பாலா (2002) படத்தில் இவருக்கு பதிலாக மீரா ஜாஸ்மின் நடித்தார். அதன்பிறகு, இவர் மூன்றாவது தமிழ் படமான மனசெல்லாம் (2003) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இயக்குநர் இவரது பணியால் அதிருப்தி அடைந்ததால் இவருக்கு பதிலாக த்ரிஷாவை நடிக்கவைத்தார். 2003 ஆம் ஆண்டில் இவர் முடித்த மற்றொரு மலையாளப் படமான களரி விக்ரமன் திரையரங்குகளில் வெளியாகவில்லை.[21] திரைப்பட வாழ்க்கையின் துவக்கத்தில் ஏற்பட்ட சறுக்கல்களுக்குப் பிறகு, வித்யா சுமார் 60 தொலைக்காட்சி விளம்பரங்களிலும், யூபோரியா மற்றும் சுபா முத்கல் இசைக் காணொளிகளிலும் தோன்றினார்; இவற்றில் பெரும்பாலானவை பிரதீப் சர்க்காரால் இயக்கப்பட்டவையாகும்.

தொழில்

[தொகு]

வித்யாவின் திரைப்பட அறிமுகமானது பெங்காலி திரைப்படமான பாலோ தேகோ (2003) மூலம் வந்தது. இது கௌதம் ஹல்டர் இயக்கிய நாடகத் திரைப்படமாகும். இவரிடம் காணப்பட்ட அப்பாவித்தனம் மற்றும் அனுபவத்தின் கலவைக்காக, இளம் பெண்ணான ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்தார். பெங்காலி திரையுலகில் தனது ஈடுபாட்டைப் பற்றி வித்யா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அதை ஒரு கனவு நனவானது என்றும், இவரது அடுத்தடுத்த முன்னேற்றத்திற்கு அது படிகட்டானது என்றும் கூறினார்.[22] அப்படதில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான ஆனந்தலோக் புரஷ்கார் விருதைப் பெற்றார்.[23] பிரதீப் சர்க்காரின் பரிந்துரையின் பேரில் அவர் இயக்கிய, பரினீதா (2005) என்ற இந்தித் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். படத்தின் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா முதலில் ஒரு பிரபலமான நடிகையை இந்தப் பாத்திரத்தில் நடிக்கவைக்க விரும்பினார். ஆனால் ஆறு மாத கால விரிவான ஆலோசனைக்குப் பிறகு வித்யாவை நடிக்க வைக்க ஒப்புக்கொண்டார்.[19][24] சரத்சந்திர சட்டோபாத்யாயாயின் 1914 ஆம் ஆண்டு அதே பெயரில் எழுதப்பட்ட பெங்காலி புதினத்தை அடிப்படையாகக் கொண்ட பரினீதா, உள்ளூர் ஜமீன்தாரின் மகன் சேகருக்கும் ( சைஃப் அலி கான் நடித்தார்) குத்தகைதாரரின் மகள் லலிதாவுக்கும் (வித்யா) இடையிலான காதல் கதையைச் சொல்வதாக இருந்தது. படத்தில் வித்யாவின் நடிப்பு விமர்சகர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது. பிலிம்பேர் விருது விழாவில், இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். மேலும் சிறந்த நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றார்.[25]

Vidya Balan is looking directly at the camera.
2006 ஆம் ஆண்டு தனது லகே ரஹோ முன்னா பாய் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட புத்தக வெளியீட்டு விழாவில் வித்யா.

தனிப்பட்ட வாழ்க்கையும் திரைக்கு வெளியேயும்

[தொகு]
Vidya Balan and Siddharth Roy Kapur are smiling at the camera.
2012 திசம்பரில் நடந்த திருமண விழாவில் வித்யாவும் சித்தார்த் ராய் கபூரும்.

வித்யாவுக்கும் அவரது சக நடிகர்களுக்கும் இடையே காதல் இருப்பதாக ஊடகங்கள் அடிக்கடி கிசுகிசுக்கள் எழுதின. ஆனால் இவர் இந்தச் செய்திகளை கடுமையாக மறுத்துவந்தார்.[26][27] 2012 மேயில் ஒரு நேர்காணலின் போது, வித்யா யுடிவி மோஷன் பிக்சர்சின் தலைமை நிர்வாக அதிகாரியான சித்தார்த் ராய் கபூருடன் களவளாவலில் உள்ளதாக அறிவித்தார்.[28] 2012, திசம்பர், 14 அன்று, இந்த ஜோடி மும்பையின் பாந்த்ராவில் திருமணம் செய்து கொண்டனர்.[29]

வித்யா கருநாடக இசையில் பயிற்சி பெற்றவர், மேலும் பரதநாட்டியம் மற்றும் கதக் நடன வடிவங்களை ஓரளவு கற்றுக்கொண்டுள்ளார். தனது சமய நம்பிக்கைக் குறித்து வித்யா கூறுகையில், "நான் மிகுந்த நம்பிக்கை கொண்டவள், நான் எப்போதும் [கடவுளுடன்] உரையாடுகிறேன், ஆனால் வழக்கமான, ஒழுங்கமைக்கப்பட்ட பொருளில் நான் அவ்வளவு மதவாதி அல்ல". அவர் சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளார். மேலும் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பீட்டா நடத்திய கருத்துக் கணிப்புகளில் "இந்தியாவின் செவ உணவு உண்ணும் மிகவும் பிரபலமானவர்" என்று பட்டியலிடப்பட்டார்.[30] பல ஆண்டுகளாக இவரது எடை ஏற்ற இறக்கமானது இந்தியாவில் கணிசமான ஊடக செய்திகளில் அடிபடுகிறது.[31]

2014 ஆம் ஆண்டில், வித்யாவுக்கு பொழுதுபோக்குத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு, அவர் ராய் பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்; பல்கலைக்கழகம் அவரது பெயரை நலிந்த பெண்களுக்கான உதவித்தொகை திட்டத்திற்கும் சூட்டியது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஹர்பீன் அரோரா கூறுகையில், "பிரபல நடிகைகளின் வரிசையில், வித்யா எல்லா வகையிலும் ஒரு முன்னோடி. அவரது படங்கள் ஒரு தனித்துவமான இந்தியத்தன்மையையும் சக்திவாய்ந்த பெண்மையையும் எடுத்துக்காட்டுகின்றன".[32]

பணிகளும் பாராட்டுகளும்

[தொகு]

வித்யாவின் திரைப்பட விருதுகளில் தி டர்ட்டி பிக்சர் (2011) படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது ;[33] மற்றும் ஏழு பிலிம்பேர் விருதுகள்: பரினீதா (2005) படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை ; பா (2009), தி டர்ட்டி பிக்சர் (2011), கஹானி (2012), தும்ஹாரி சுலு (2017) படங்களுக்காக சிறந்த நடிகை; இஷ்கியா (2010) ஷெர்னி (2021) ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகை (விமர்சகர்கள்) போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The right man hasn't come along yet: Vidya Balan". 9 April 2007 இம் மூலத்தில் இருந்து 18 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200518125401/http://www.dnaindia.com/entertainment/report-the-right-man-hasn-t-come-along-yet-vidya-balan-1089724. 
  2. "This Is Real Age Of Vidya Balan And Not What Wikipedia Is Saying". Yahoo Lifestyle. 6 December 2016. Archived from the original on 6 December 2016. Retrieved 6 December 2016.
  3. "Temple wedding for Vidya Balan and Siddharth Roy Kapur". 11 December 2012 இம் மூலத்தில் இருந்து 24 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150524154305/http://movies.ndtv.com/bollywood/temple-wedding-for-vidya-balan-and-siddharth-roy-kapur-630333. 
  4. "Management team, Digicable". Digicable. Archived from the original on 31 May 2013. Retrieved 20 February 2013.
  5. 5.0 5.1 "There's something about Vidya". 25 November 2006 இம் மூலத்தில் இருந்து 11 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131011162727/http://www.highbeam.com/doc/1P3-1168964461.html. 
  6. "Over the years: Vidya Balan from geek to haute!". 22 September 2012 இம் மூலத்தில் இருந்து 9 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171009195047/http://www.hindustantimes.com/bollywood/over-the-years-vidya-balan-goes-from-geek-to-haute/story-CY7LmU3wv2Crat773i7dyL.html. 
  7. "'It's a dream come true'". 16 February 2007 இம் மூலத்தில் இருந்து 14 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120114155348/http://www.hindu.com/fr/2007/02/16/stories/2007021600410100.htm. 
  8. "Filmi Family Tree: Know Priyamani's famous relative?". Rediff.com. 8 October 2013. p. 2. Archived from the original on 3 February 2014. Retrieved 16 April 2014.
  9. "Not going to ask Vidya Balan for advice: Priyamani". 11 May 2012 இம் மூலத்தில் இருந்து 12 May 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512011620/http://www.deccanchronicle.com/tabloid/hyderabad/not-going-ask-vidya-balan-advice-priyamani-672. 
  10. "Celeb diary: Vidya Balan". 4 February 2010 இம் மூலத்தில் இருந்து 3 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130103041053/http://www.mid-day.com/entertainment/2010/feb/040210-Celeb-Dairy-Vidya-Balan.htm. 
  11. "I have never done a barter with God: Vidya Balan". 17 September 2013 இம் மூலத்தில் இருந்து 2 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202185556/http://articles.timesofindia.indiatimes.com/2013-09-17/news-interviews/42114811_1_ganpati-vidya-balan-aarti. 
  12. 12.0 12.1 12.2 12.3 "Why Vidya Balan rules". 17 December 2011 இம் மூலத்தில் இருந்து 8 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180708081025/https://www.hindustantimes.com/bollywood/why-vidya-balan-rules/story-kBrnl5alAyNYS51Hzl2JNL.html. 
  13. "Madhuri is my inspiration in life: Vidya Balan". CNN-IBN. 6 January 2012. Archived from the original on 20 April 2012. Retrieved 13 October 2012.
  14. "I said no to Ekta: Vidya Balan". 22 October 2010 இம் மூலத்தில் இருந்து 23 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131023060327/http://articles.timesofindia.indiatimes.com/2010-10-22/news-interviews/28271540_1_tv-debut-vidya-balan-s-homepage-audition. 
  15. "It could have been George Clooney or a tree. I would have made love to the tree if I had to". 25 June 2010 இம் மூலத்தில் இருந்து 13 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130313102649/http://www.telegraphindia.com/1100725/jsp/7days/story_12723277.jsp. 
  16. "Return of the native". 4 February 2010 இம் மூலத்தில் இருந்து 23 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023235254/http://indiatoday.intoday.in/story/Return+of+the+native/1/82489.html. 
  17. "Sociology was my major subject: Vidya". 9 January 2011 இம் மூலத்தில் இருந்து 23 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131023055734/http://articles.timesofindia.indiatimes.com/2011-01-09/news-interviews/28367559_1_sociology-films-khar. 
  18. "Just how educated are our Bollywood heroines?". Rediff. 18 January 2012. Archived from the original on 1 February 2013. Retrieved 20 November 2012.
  19. 19.0 19.1 Kulkarni, Ronjita. "Meet the new girl in Saif's life". Rediff. Archived from the original on 9 November 2007. Retrieved 23 October 2007.
  20. "The Vidya magic!". Sify. 7 July 2005. Archived from the original on 22 December 2013. Retrieved 23 November 2006.
  21. "Kalari Vikraman from Jail". Vellinakshatram. 5 January 2003. 
  22. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; reelprayer என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  23. "SRK, Vidya get Anandalok Puraskar". Sify. 24 December 2007. Archived from the original on 14 February 2015. Retrieved 24 August 2014.
  24. "Small people with big egos, not for me!". Bollywood Hungama. 1 January 2009. Archived from the original on 23 October 2013. Retrieved 20 November 2012.
  25. "Vidya Balan: Awards & nominations". Bollywood Hungama. Archived from the original on 9 April 2010. Retrieved 23 July 2010.
  26. "Poor Vidya pays price of link-ups with stars". India Today. 24 May 2010 இம் மூலத்தில் இருந்து 10 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141210095710/http://indiatoday.intoday.in/story/Poor+Vidya+pays+price+of+link-ups+with+stars/1/98590.html. 
  27. "Vidya happy she's not linked to Arshad". Hindustan Times. 8 November 2008 இம் மூலத்தில் இருந்து 3 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180903115025/https://www.highbeam.com/doc/1P3-1591274061.html. 
  28. "I am dating Siddharth Roy Kapoor: Vidya Balan". CNN-IBN. 11 May 2012. Archived from the original on 12 May 2012. Retrieved 11 May 2012.
  29. Prashar, Chandni (14 December 2012). "Vidya Balan is now Mrs. Siddharth Roy Kapur". NDTV. Archived from the original on 3 January 2015. Retrieved 14 December 2012.
  30. "Amitabh Bachchan, Vidya Balan named PETA's hottest vegetarian celebrities பரணிடப்பட்டது 7 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம் ," The Indian Express, 3 January 2013.
  31. "Fat, so? Vidya is living large & loving it". NDTV. 5 June 2012. Archived from the original on 3 January 2015. Retrieved 18 October 2012.
  32. "Vidya Balan gets honorary doctorate for her contribution to Indian cinema". CNN-IBN. 25 June 2015. Archived from the original on 9 July 2015. Retrieved 2 June 2015.
  33. "National Awards: Vidya Balan gets best actress for 'The Dirty Picture'". CNN-IBN. Archived from the original on 3 July 2012. Retrieved 30 September 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_பாலன்&oldid=4261682" இலிருந்து மீள்விக்கப்பட்டது