உள்ளடக்கத்துக்குச் செல்

நர்கிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நர்கிசு தத்
பிறப்புபாத்திமா ரசீத்
(1929-06-01)சூன் 1, 1929
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இறப்புமே 3, 1981(1981-05-03) (அகவை 51)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1935, 1942–1967
வாழ்க்கைத்
துணை
சுனில் தத் (1958–1981)
பிள்ளைகள்சஞ்சய் தத்
நம்ரதா தத்
பிரியா தத்

நர்கிஸ் தத் (Nargis Dutt, நர்கிஸ் தத், உருது: نرگس‎, இந்தி: नर्गिस; 1 சூன் 1929 – 3 மே 1981), ஒரு புகழ் பெற்ற பாலிவுட் (இந்தி) நடிகை ஆவார். இவர் பிரபல இந்தி நடிகர் அன்வர் ஹுசைனின் சகோதரி ஆவார். 1935 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் கதாநாயகியாக அறிமுகமான படம் தமன்னா. முதன் முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான மதர் இந்தியா படத்தில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார். நடிகர் சுனில் தத்தை மணந்த இவர் திருமணத்திற்குப் பிறகு நடித்து வெளிவந்த ராத் ஆர் தின் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார்.[1] கணையத்தில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1981 தஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.[1] இந்திய அரசு இவருக்கு பத்மஶ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.[2] நர்கிஸை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அரசு "சிறந்த ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை 'நர்கிஸ் விருது' என இவர் பெயரில் வழங்கி வருகிறது.[3]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Dhawan, M. (27 April 2003). "A paean to Mother India". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 2013-05-09.
  2. Dutt, Nargis (1929-1981) பரணிடப்பட்டது 2007-02-10 at the வந்தவழி இயந்திரம் The National Resource Centre for Inclusion, The Spastics Society of India.
  3. "PM's remarks at the Release of Book "Mr. & Mrs. Dutt" on Late Sunil and Nargis Dutt". Prime Minister of India. Archived from the original on 18 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நர்கிசு&oldid=4114796" இலிருந்து மீள்விக்கப்பட்டது