சாரதா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாரதா
பிறப்புசரஸ்வதிதேவி
25 சூன் 1945 (1945-06-25) (அகவை 76)
தெனாலி, குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1959–தற்போது வரை
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பெற்றோர்வெங்கடேஸ்வர் ராவ்
சத்யவதிதேவி
வாழ்க்கைத்
துணை
நடிகர் சலம் (திருமண முறிவானது)
விருதுகள்சிறந்த நடிகைக்கான தேசிய விருது

சாரதா (Sharada) (25 சூன் 1945) மூன்று முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.[1][2] இவர் பல தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.[1][2] இவர் இரண்டு முறை தென்னிந்திய பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். 2010ல் ஆந்திர அரசின் என் டி ஆர் விருதையும் பெற்றுள்ளார். [3] மேலும் ஆந்திர அரசின் நந்தி விருதும் பெற்றுள்ளார்.

தற்போது அரசியல்வாதியான இவர், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக தெனாலி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இளமை வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் குண்டூர் மாவட்டம், தெனாலியில் 25 சூன் 1945 அன்று சரஸ்வதி தேவி எனும் பெயரில் பிறந்த சென்னையிலுள்ள தனது பாட்டி கனகம்மா வீட்டில் வளர்ந்தார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிய காலத்தில் தனது பெயரை சாரதா என மாற்றிக் கொண்டார்.[4] தெலுங்குத் திரைப்பட நடிகர் சலம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் திருமண உறவு முறித்துக் கொண்டு ஐதராபாத் நகரத்தில் வாழ்கிறார்.

இளமைப் பணி[தொகு]

துவக்கத்தில் சாரதா தெலுங்கு நாடக மேடைகளில் சிறு பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார்.[1] பின்னர் தமிழ், தெலுங்கு மொழி மேடை நாடகங்களில் முக்கிய நாயகி பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார்.[4][4]

திரைப்படத் தொழில்[தொகு]

1961ல் அக்கினேனி நாகேஸ்வர ராவ்வுடன் முதன்முறையாக கதாநாயகியாக சாரதா நடித்தார். பின்னர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். 1968ல் மலையாளத்தில் இவர் நடித்த துலாபாரம் எனும் திரைப்படம், சாரதாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.[5]

மேலும் சுயம்வரம் என்ற மலையாள திரைப்படம் மற்றும் 1978ல் நிமஜ்ஜனம் எனும் தெலுங்குத் திரைபப்டத்தில் கதாநாயகியாக நடித்த சாரதா சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

அரசியல் மற்றும் வணிகம்[தொகு]

தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக தெனாலி மக்களவைத் தொகுதியிலிருந்து 1996ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்[6] சாரதா ஐதராபாத் நகரத்தில் லோட்டஸ் சாக்லெட் உற்பத்தி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_(நடிகை)&oldid=2952885" இருந்து மீள்விக்கப்பட்டது