உள்ளடக்கத்துக்குச் செல்

ரேகா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரேகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரேகா

{{Infobox actor ) (cropped).jpg | caption =ரேகா | birthdate = 10 அக்டோபர் 1954 (1954-10-10) (அகவை 69) | location = சென்னை, (அப்போது மதராஸ்), தமிழ் நாடு, இந்தியா | yearsactive = 1966 – இன்று | occupation = திரைப்பட நடிகை | birthname = பானுரேகா கணேசன் | othername = | parents = ஜெமினி கணேசன், புஷ்பவல்லி | homepage = }} ரேகா (Rekha) என்ற திரைப் பெயரால் அனைவராலும் அழைக்கப்படும் பானுரேகா கணேசன் (பிறப்பு: 10 அக்டோபர் 1954) இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.

இவர் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து பெயர் பெற்றார். ரேகா குறிப்பாக பெண்மையை-மையமாகக்கொண்ட பாத்திரங்களில் நடித்துப் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றார். இவர், குப்சூரத் திரைப்படத்தில் பள்ளி சிறுமியாகவும், கூன் பாரி மாங் கில், தெளிவான முடிவெடுக்கும் பழிவாங்கும் பாத்திரமாகவும் நடித்து பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார். இவருடைய உம்ரௌ ஜான் திரைப்படத்தில் பண்டைய விலைமகள் பாத்திரம், சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத்தந்தது. இவர், சுமார் 1970கள் முழுவதும் இந்திய ஊடகத்தில் ஒர் பாலியல் சின்னமாக தோன்றினார்.[1][2]

ரேகா திரைப்படத் துறையில் 40 வருட காலம் வரை சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் தனது தொழில் வாழ்க்கையில் பல முறை மறுபிறப்பெடுத்துள்ளார், மேலும் தனது நிலையை தக்கவைத்துக்கொண்டதற்காக அதிகமாக அறியப்பட்டவராவார்.[3] இந்தியாவில் கலைத் திரைப்படம், எனப்படும் இந்திய கலைத் திரப்படத் துறையிலும் பங்களித்து, இவர் வணிகரீதியான வெற்றியையும் பெற்றுள்ளார். அதே சமயம் ஆண்டுதோறுமான இவரது நடிப்புக்காக விமர்சன ரீதியான பல பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு 2010, ஆண்டு இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கபட்டது.[4]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இவர், இந்தியாவில் சென்னையில், புகழ்மிக்க தமிழ்த் திரைப்பட நடிகர் ஜெமினி கணேசனுக்கும், தெலுங்கு நடிகை புஷ்பவல்லிக்கும் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு நடிகராக மிகப் பெரிய வெற்றியை அடைந்தவர். ரேகா அவருடைய வழியையே பின்பற்றினார். வீட்டில்[5] இவர் தமிழ் மொழியிலேயே பேசினார்.

இவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை, மேலும் இவருடைய தந்தை இவருடைய குழந்தைப் பருவத்தில் அவருடைய தந்தைமையை ஒப்புக்கொள்ளவில்லை.[5] 1970 இல் இவர் பாலிவுட்டில் கால்வைக்க முயற்சித்த போது தனது பூர்வீகத்தை வெளிப்படுத்தினார். பிறகு, இவருடைய தொழிலின் உச்சக்கட்டத்தில், என்றும் கூறினார்.[5]

திரைப்படத்துறை வாழ்க்கை

[தொகு]

1970கள்

[தொகு]

1966 ஆம் ஆண்டில் ரங்குலா ரத்னம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றினார். 1969 இல் ரேகா ஆபரேசன் ஜாக்பாட் நல்லி சிஐடி 999 என்ற கன்னட வெற்றிப்படத்தில் ராஜ்குமாருடன் கதாநாயகியாகத் தோன்றினார்.[5] அதே வருடத்தில், அஞ்சனா சாஃபர் (பிறகு டு ஷிகாரி'யாக' பெயர் மாற்றம் செய்யப்பட்டது) என்ற அவருடைய முதல் இந்தி திரைப்படத்தில் நட்சத்திரமாகத் தோன்றினார். இந்த இந்திப் படத்தின் முன்னனி நட்சத்திரமான பிஸ்வாஜித்துடன் நடித்தார்.[6] படப்பிடிப்பில் ரேகாவின் முகத்தை கையிலேந்தி உருக்கமான காட்சியில் நடித்துக்கொண்டிருந்த நாயகன் பிஸ்வாஜி எதிர்பாராத தருணத்தில் நீண்ட முத்தம் ஒன்றை பதித்தார். இது ரேகாவுக்கு தெரிவிக்காமல் சூழ்ச்சியாக எடுக்கபட்ட காடசியாகும். மேலும் இந்த முத்தக்காட்சி "லைஃப்" பத்திரிக்கையின் ஆசியப் பதிப்பில் [7] வெளியிடப்பட்டதாகவும் கூறினார். இந்த திரைப்படம் தணிக்கை உள்ளிட்ட சிக்கலில் சிக்கிக்கொண்டு,[8] பல ஆண்டுகள் தாமதமாகவே திரைப்படம் வெளிவந்தது. 1970 இல் இவரது இரு திரைப்படங்கள் வெளியிடப்பட்டன: தெலுங்கு திரைப்படம், அம்ம கோசம் மற்றும் இந்தி திரைப்படமான ஸ்வான் பதான் ஆகியவை, இதில் பின்னது இவரை பாலிவுட் நடிகையாக அரங்கேற்றியது. இவர் தமிழ் மொழி பேசுபவராக இருந்ததால், இந்தி மொழியை கற்கவேண்டியதாயிற்று. ஸ்வான் பதான் திரைப்படம் வெற்றிபெற்றது. மேலும் ரேகா ஒரே நாளில்[5] சிறந்த நட்சத்திரமானார். இவர் உடனே பல வாய்ப்புகளைப் பெற்றார் ஆனால் ஒன்றும் சிறப்பானதாக அமையவில்லை. இவருடைய பாத்திரங்கள் பெரும்பாலும் ஓர் கவர்ச்சியான பெண்ணாகவே இருந்தன. இவர் நடித்த கஹானி கிஸ்மத் , ராம்பூர் கா லக்ஷ்மன், ப்ரான் ஜாயே பர் வாசன் நா ஜாயே உள்ளிட்ட பல திரைப்படங்கள் வணிக அளவில் வெற்றிப்படங்களாக இருந்தாலும், இவரது நடிப்புத் திறமை எடுத்துக்காட்டப்படவில்லை.[5]

1976 ஆம் ஆண்டில் இவரது நடிப்புத் திறனை வெளிக் காட்டக்கூடிய ஒரு சிறந்த திரைப்படமாக தோ அஞ்சானே வெளியிடப்பட்டது, இதில் அமிதா பச்சனுடன் துணை-நட்சத்திரமாக ஓர் இலட்சியப் பெண்ணாக நடித்தார். இந்த திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் இவரது சிறந்த நடிப்பிற்காக இவர் பெரிதும் பாராட்டப்பட்டார்.[5]

1978 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கார் என்ற திரைப்படத்தில் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தது, இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இவர் நடித்த ஆர்த்தி என்ற பாத்திரத்தில், புதுமணமாகிய பெண் பகைவர்களினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு துணிச்சலுடன் இவருடைய அன்பான கணவரின் உதவி கொண்டு அதிலிருந்து மீண்டும் போராடி மீண்டு வருவதே இவருடைய கதாப்பாத்திரமாகும், இதில் இவரது கணவராக வினோத் மெஹ்ரா நடித்தார். இந்த திரைப்படம் இவரது முதல் மைல் கல்லாகக் கருதப்பட்டது, மேலும் இதில் இவருடைய நடிப்பானது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என இருதரப்பினராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. முதன்முதலில் இவர் பிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றார்[5]. அதே வருடத்தில், முகாதர் கா சிகந்தர் என்ற திரைப்படத்தில் மீண்டும் அமிதாப் பச்சனுடன் நடித்து புகழ் பெற்றார். இந்த திரைப்படம் அந்த வருடத்தின் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, மேலும் அந்த பத்தாண்டு காலவரையில் மிகப் பெரிய வெற்றிப்படமாக இருந்ததால், ரேகா அந்த கால கட்டத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நடிகையாகக் கருதப்பட்டார்.[9] இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் ரேகாவின் விலைமகள் பாத்திரம் இவருக்கு பிலிம்ஃபேரில்[5] சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது.

1980கள்

[தொகு]

இவருடைய வெற்றிப்படமான முகாதர் கா சிகந்தர் வெற்றியைத் தொடர்ந்து, பச்சனுடன் இன்னும் பல திரைப்படங்களிள் இணைந்து நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிப்படங்களாகவே அமைந்தன. இவர் பச்சனுடன் திரைப்படத்தில் மட்டும் காதல் ஜோடியாக இருக்கவில்லை, நிஜ வாழ்க்கையில் இவர்களுடைய உறவு அந்நியோன்யம் கொண்டதாக இருந்தது, பச்சன் திருமணமானவராக இருந்ததால், பத்திரிக்கைகள் இவர்களுடைய உறவை மிகவும் தீவிரமாக விமர்சித்தன.[10] 1981 இல் யாஷ் சோப்ராவின் நாடகப் படமான சில்சிலாவில் நடித்தபோது, இந்த உறவு துண்டிக்கபட்டு ஓர் முடிவிற்கு வந்தது.[10] இந்த படத்தில் ஜெய பாதுரி பச்சனுடைய மனைவியாகவும் ரேகா பச்சனுடைய காதலியாகவும் நடித்திருந்தனர். இந்த படம் இவர்களுடைய நிஜ உறவை தோய்த்து படமாக்கபட்டிருந்த படமாக அமைந்திருந்ததால் மிகுந்த அவதூறுக்குள்ளாகியது. இதுவே இவர்களுடைய கடைசி திரைப்படமாக ஆனது. அதன் பிறகு மீண்டும்[10] இவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை.

இந்த திரைப்படத்தைப் பற்றிய வதந்தி இவருக்கு வெற்றியை வழங்கியது. இருப்பினும், இவரது இந்தி மொழி மற்றும் நடிப்பு ஆகிய இரண்டிலும் சிறப்பாக விளங்க மிகவும் கடினமாக உழைத்தார் என்பதை விமர்சகர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மேலும் 1970களில் தனது "பருமனான" உடலை "அன்னம்" போன்ற உருவத்திற்கு மாற்றியிருந்தார் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். யோகா, ஊட்டச்சத்து கொண்ட உணவுக்கட்டுப்பாடு உடலோம்பல், வாழ்க்கையில் ஒழுங்கான ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவை ரேகாவுக்கு இந்த மாற்றத்தைக் கொடுத்தது.

1981 இல், ரேகாவை முன்னிறுத்தி எடுக்கபட்ட உம்ரே ஜான் என்ற உருது திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் கதையானது, அமிரன் என்ற இளம் பெண் கடத்தப்பட்டு விபச்சார விடுதியில் விற்கப்படுகிறாள். அவளுடைய வாழ்க்கைப் பற்றிய கதையாக உம்ரௌ படத்தின் கதையாக இருந்தது. இந்த திரைப்படத்தில், இவருடைய உணர்வுமிக்க விலை மகள் கதாப்பாத்திரத்தில் இவருடைய நடிப்பு, இவருடைய திரைப்படத்துறையிலேயே சிறந்திருந்ததாகக் கருதப்பட்டது. இது ஒரு அமர காவியமாக ஆனது. மேலும் இந்த படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். எல்லாவற்றுக்கும் மேல், முகாதர் கா சிகந்தர் மற்றும் உம்ரே ஜான் ஆகிய பல படங்களில் நல்ல மனமுள்ள விலை மகளாக ஒரே மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

பச்சன் விவகாரத்திற்குப் பிந்தைய ரேக்காவின் தொழில்வாழ்க்கையில் இது ஒரு புதிய நிலையாக இருந்தது; இந்த சமயத்திலேயே இவர் தனது தொழில் வாழ்க்கையை தொழில்முறை ரீதியிலானதாக மாற்றினார். இவர் சுயசார்புள்ள மற்றும் கலைத் திரைப்பட இயக்குநர்களுடனும் பணிபுரிய விரும்பினார். 1980களில் இவர், கலைத் திரைப்படங்களில் தொடர்ந்து பணிபுரிந்தார். அந்த குறிப்பிட்ட காலம் இந்திய சினிமாவில் ஓர் புதிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய இந்த துணிவான -முயற்சி உம்ரே ஜான் திரைப்படத்திலிருந்து தொடங்கியது, மேலும் 1981ல் அடுத்ததாக ஷ்யாம் பெங்காலின் விருது பெற்ற கல்யுக் என்ற படத்தில் நடித்தார், ரமேஷ் தல்வாருடைய பசேரா, என்ற திரைப்படத்தில் இவர் தங்கையின் கணவனை மணம் செய்துகொண்டு பிறகு பெரிய இழப்புக்கு பிறகு மனவளர்ச்சி பாதித்த பெண்ணாக நடித்தார்; மேலும் ஜீதேந்திராவுடன் ஏக் ஹை பூல் என்ற திரைப்படத்தில் கணவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டு சென்ற மனைவியாக நடித்தார். இத்திரைப்படங்களில் இவருடைய நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 1980களின் போது, வெளியிட்ட குறிப்பிடத்தக்க புகழ் பெற்ற திரைப்படங்கள் ஜீவன் தாரா, உத்சவ் மற்றும் ல்ஜாசட் ஆகியனவாகும்.

கலைத் திரைப்படம் மட்டும் இல்லாமல், ரேகா அதிகப்படியான தீவிரமான சாகசமான பாத்திரங்களிலும் நடித்தார்; முந்தைய நடிகைகளுக்கிடையே, கதாநாயகிகளை மையமாகக் கொண்ட முன்னனி பாத்திரங்களில் நடித்தார். அத்தகைய திரைப்படங்களாவன குப்சூரத், கூன் பாரி மாங் மற்றும் முஜீ இன்சாஃப் சாஹியே ஆகியனவாகும். இவர் குப்சூரத் (1980) மற்றும் கூன் பாரி மாங் (1988) ஆகிய திரைப்படங்களில் நடித்த கதாப்பாத்திரங்களுக்காக பிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்றார். ஒரு விமர்சகர், கூன் பாரி மாங்கில் ரேகாவின் நடிப்புத் திறனைப்பற்றி எழுதும்போது "ரேகா நடித்த ஆர்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் குறையே இல்லாத இவரது நடிப்பு சிறப்பானது, மேலும் இது இதுவரை இவருடைய நடிப்பினிலேயே மிகச்சிறப்பாக இருந்தது. இத்திரைப்படத்தின் முதல் பாதியில் கவர்ச்சியற்ற நாணமிக்க பெண்ணாக இருக்கும் போது சிறப்பாக உள்ளார், பிறகு ஒட்டறுவை சிகிச்சை செய்த பிறகு நவநாகரீகமான அழகான மயக்கியிழுக்கும் பெண்ணாக இருக்கும் போது இன்னும் சிறப்பாக மனதில் பதிகிறார். சில காட்சிகள், நாம் ஓர் உயர்தர திரைப்பட நடிகையை இங்கு[11] பார்ப்பதை உணர்த்தும்.

1990 முதல்

[தொகு]

1990களில் ரேகாவின் வெற்றி சரியத்தொடங்கியது, மேலும் இவர் படிப்படியாக தவரது புகழை இழக்கத்தொடங்கினார். இவர் சவாலாக அமைந்த பல படங்களில் நடித்தபோதிலும் இவர் நடித்த பல படங்கள் வணிக ரீதியிலும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றன. இவருடைய தலைமுறையில் நடித்த ஹேமா மாலினி மற்றும் ராக்கீ போன்ற நடிகைகள், அம்மா, அத்தை, சித்தி போன்ற துணை நடிகை வேடங்களுக்கு நகர்ந்த நிலையில், ரேகா மட்டும் மாதுரீ தீக்ஷித், ரவீனா டண்டன் போன்றோருடன் மல்லுகட்டி முன்னனி நட்சத்திரமாக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.[12]

அந்த பத்தாண்டு காலத்தில் இவர் நடித்து வெளியிடப்பட்ட சில சிறப்பான படங்களில், வெளிநாட்டுப்படமான காம சூத்ரா: ஏ டெல் ஆப் லவ் மற்றும் வணிகரீதியாக வெற்றிப்படமான கில்லாடியன் க கில்லாடி ஆகியவற்றைக் கூறலாம். இவர் மீரா நாயரின் இயக்கத்தில் ஃபார்மர் என்ற திரைப்படத்திலும், காம சூத்ரா ஆசிரியையாக சர்ச்சைக்குரிய திரைப்படங்களில்ல்[3] நடித்ததை அறிந்த சிலர் இதனால் இவர் பெயர் பாதிக்கப்படும் என நினைத்தனர். மற்றொருபுறம், அவ்விரண்டு திரைப்படங்களில் பின்னதில் கொள்ளைக்கூட்ட தலைவியாக நடித்ததற்காக, பிலிம் ஃபேரின் சிறந்த துணை நடிகைக்கான விருது மற்றும் சிறந்த வில்லி நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது ஆகியவை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றார்.

சமீபத்திய ஆண்டுகளில் இவர், சில படங்களில், கவர்ச்சி பாத்திரத்துக்கு பதிலாக வழக்கமாக நடிக்கும் அம்மாவா அல்லது விதவை பாத்திரங்களிலும் நடித்துவருகிறார். இவருடைய பலதரப்பட்ட நடிப்புத்திறனுக்காக பாராட்டப்பட்டார். 2001 இல் ராஜ்குமார் சந்தோஷியின் லஜ்ஜா திரைப்படத்தில், மனீஷா கொய்ராலா, மாதுரீ டீக்ஷித் மற்றும் அணில் கபூர் ஆகியோர் இணைந்த குழுவில் ரேகா ராம்துலாரியாக நடித்தார். ரேகா பல படங்களுக்கு நடிப்புக்கான விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார்; தரன் ஆதர்ஷ் என்ற விமர்சகர், "...ரேகா தற்போதைய[13] இந்திய திரைப்படத்துறையில் அழகாகவும் மிகச்சிறந்த நடிப்புத்திறனுள்ள நடிகையாகாவும் வெற்றிநடை போடுகிறார்" என்று எழுதியுள்ளார். அதே வருடத்தில் இவர், கரிஷ்மா கபூருடன் ஷ்யாம் பெனிகள்ளின் சுபெய்தா என்ற திரைப்படத்தில் நடித்தார். ரேகாவின் வியக்கத்தக்க அழகான திறமையுடன் கூடிய நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள், திரைத்துறையில் இவருடைய முத்திரையை பதிக்க வைத்தது என்று Upperstall.com எழுதியது.[14] பிறகு இவர் குண்டன் ஷாவின் பிரீத்தி ஜிந்தாவுடன் தில் ஹாய் துமாரா என்ற திரைப்படத்தில் சரிதா என்ற கதாப்பாத்திரத்தில், தன்னுடைய கணவனின் முறைதவறி பிறந்த பெண்ணை கடத்தி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்ணாக நடித்தார். 2003 ல் ஹிருதிக் ரோஷன்னின் தாயாக ராகேஷ் ரோஷனின் கோய்... மில் கயா என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் இவருடைய நடிப்பால் சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் திரை விருதினைப் பெற்றார். இந்த திரைப்படம் அந்த வருடத்தின் பெரிய ஹிட்டாக இருந்தது.[15]

பிறகு இவர், பரினீடா போன்ற பல படங்களில் நடித்தார். 2006 இல் இவர், கோய்... மில் கயா திரைப்படத்தின் தொடர்ச்சியாக கிரிஷ் என்னும் அந்த வருடத்தின்[16] பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தில் நடித்தார். 2007 ல் கௌதம் கோஷின் யாத்ரா என்ற திரைப்படத்தில் மீண்டும் இவர் விலைமகள் பாத்திரத்தில் நடித்தார். முன்பு இவர் நடித்த இத்தகைய கதாப்பாத்திரங்கள் வெற்றி அடைந்தது, வழக்கத்திற்கு மாறாக இந்த முறை இத்திரைப்படம் தோல்வியைத் தழுவியது.

சொந்த வாழ்க்கை

[தொகு]

அமிதாப் பச்சன், வினோத் மெஹ்ரா உட்பட பல பாலிவுட் நடிகர்களுடன் ரேகாவிற்கு தோல்வியடைந்த காதல் இருந்தது. மேலும் 1990ல் இவர் முகேஷ் அகர்வால் என்ற டெல்லியைச் சேர்ந்த - தொழிலதிபரை மணந்தார், முகேஷ் அகர்வால் 1991 இல் தற்கொலை செய்துகொண்டார். 1973ல் ரேகா வினோத் மெஹ்ராவை மணக்கப்போவதாக வதந்தி வந்தது, ஆனால் 2004 ல் ரேகா சிமி கேர்வெல்லுடன் நடந்த ஓர் தொலைக்காட்சிப் பேட்டியில் இவர், வினோத் மெஹ்ராவை தனது நலன் விரும்பி என்றும், திருமணம் செய்துகொள்வதாக வெளிவந்த செய்திகள் வதந்திகள் என்றும் கூறினார். ரேகா தற்போது அவருடைய காரியதரிசி ஃபர்சானாவுடன் மும்பையில் உள்ள பாந்த்ரா இல்லத்தில் வசிக்கிறார்.[17]

விருதுகள்

[தொகு]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட வரலாறு

[தொகு]

ரேகா 180க்கும் மேலான இந்தி திரைப்படங்களில் நடித்தார், இந்திய முக்கிய திரைப்படங்கள் மற்றும் கலைத் திரைப்படங்கள் இரண்டிலும் நடித்துள்ளார்.

  • ஸ்வான் பதான் (1970) ... சந்தா
  • ராம்பூர் கா லக்ஷ்மன் (1972)
  • கோரா ஔர் கலா (1972) ... ஃபூல்வா
  • தர்மா (1973)
  • கஹானி கிஸ்மத் கி (1973) ... ரேகா
  • நாமக் ஹாரம் (1973) ... ஷ்யாமா
  • ப்ரன் ஜயே பர்வச்சான் நா ஜாயே (1974) ... ஜான்னியா
  • தரம் காரம் (1975) ... பாசந்தி
  • தர்மாத்மா (1975) .... அனு
  • ஆக்ரமன் (1975)
  • தோ அஞ்சானே (1976) ... ரேகா/சுனிதா தேவி
  • சந்தன் (1976)
  • கபீலா (1976)
  • அலாப் (1977) ... ரதியா
  • கூன் பசினா (1977)
  • ஆப் கி காதிர் (1977)
  • இம்மான் தாரம் (1977)
  • கங்கா கி சௌகந்த் (1978) ... தானியா
  • கார் (1978) ... ஆர்த்தி சந்திரா
  • முகாதர் கா சிகந்தர் (1978) ... சொஹ்ரபாய்
  • ப்ரேம் பந்தன் (1979)
  • கர்தவ்யா (1979)
  • சுஹாக் (1979) ... பாசந்தி
  • மிஸ்டர் நட்வர்லால் (1979)
  • ஜானி துஷ்மன் (1979)
  • ஆன்ச்சல் (1980)
  • ஜுடாய் (1980) ... கௌரி
  • காலி காடா (1980) ... ரேகா/ராஷ்மி
  • ஜால் மஹால் (1980)
  • குப்சூரத் (1980)
  • அக்ரீமென்ட் (1980) ... மல மதுர்
  • கல்யுக் சுப்ரியா (1980)
  • சில்சிலா (1981) ... சாந்தினி

  • உம்ரே ஜான் (1981) ... அமிரன்/உம்ரௌ ஜான்
  • பசீரா (1981) ... பூர்னிமா "நிமா" கொலீ
  • ஏக் ஹை பூல் (1981) ... சாதானா ஸ்ரீவத்சவ்
  • விஜீதா (1982) ... நீலிமா
  • ஜீவன் தாரா (1982) ... சங்கீதா ஷ்ரிவத்சவ்
  • நிஷான் (1983)
  • முஜே இன்சாப் சாஹியே (1983)
  • அகர் தும் நா ஹொடே (1983) ... மிஸஸ் நீனா மெஹ்ரா/மிஸஸ் ராதா பேடி
  • பிந்தியா சம்கேஜி (1984) ... பிந்தியா
  • உத்சவ் (1984) ... வசந்த்சேனா
  • ஃபாஸ்ளே (1985) ... மாயா
  • முசாஃபிர் (1986)
  • லாக்கெட் (1986) ... ஷாலு
  • ப்யார் கி ஜீத் (1987) ... சோனி
  • சூர்மா போபலி (1988) ... சிறப்புத் தோற்றம்
  • கூன் பாரி மாங் (1988) ... ஆர்த்தி வெர்மா/ஜோதி
  • இஜ்ஜாசத் (1988) ... சுதா
  • பிவி ஹொ து அய்சி (1988) ... ஷாலு மெஹ்ரா
  • பரஷ்டாச்சர் (1989) ... பவானி
  • பூல் பானே அங்கரே (1991) ... நம்ரதா
  • மேடம் X (1994) ... சோனு/மேடம் X
  • கில்லாடியன் க கில்லாடி (1996) ... மாயா
  • காம சூத்ரா: எ டேல் ஆஃப் லவ் (1996) ... ராசா தேவி
  • புலாந்தி (2000) ... லக்ஷ்மி
  • சுபெய்தா (2001) ... மஹராணி மந்திரா தேவி
  • லஜ்ஜா (2001) ... ராம்துல்லாரி
  • தில் ஹை தும்ஹாரா (2002) ... ஸரிதாஜி
  • பூட் (2003) ... சரிதா
  • கோயி... மில் காயா (2003) ... சோனியா மெஹ்ரா
  • பரினீதா (2005) ... மௌலின் ரௌன்ங் சிங்கர்
  • கிரிஷ் (2006)  ... சோனியா மெஹ்ரா
  • யாத்ரா (2007) ... லஜ்வந்தி
  • ஓம் ஷாந்தி ஓம் (2007) சிறப்புத் தோற்றம்

குறிப்புதவிகள்

[தொகு]
  • Dhir, Ratnachand (1981). Rekha (in Hindi). Allahabad : Lokbharati. இணையக் கணினி நூலக மைய எண் 59042376.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  • "ரேகா- த பிவிட்ச்சிங் பியூட்டி" பரணிடப்பட்டது 2009-04-05 at the வந்தவழி இயந்திரம், பிரியா தேவி. "OneIndia.com" பயோக்ராஃபி. 2008 ஜூலை 20 அன்று எடுக்கப்பட்டது.
  • "ரேகா: த டிவைன் டிவா", தினேஷ் ரஹேஜா. "Rediff.com", வைடு பயோக்ராஃபி. 2008 ஜூலை 20 அன்று எடுக்கப்பட்டது.
  • "ரேகா, ஃபாரெவர் பியூட்டிஃபுல்" பரணிடப்பட்டது 2009-07-23 at the வந்தவழி இயந்திரம், "indiainfo.com" ரேகா, த 90ஸ். 2008 ஜூலை 20 அன்று எடுக்கப்பட்டது.
  • "அன் எனிக்மா கால்டு ரேகா", "Rediff.com" 47 ஃபேக்ட்ஸ் அபுட் ஹர். 2008 ஜூலை 20 அன்று எடுக்கப்பட்டது.
  • "த ஒன் அண்ட் ஒன்லி... ரேகா". மீரா ஜோஷி. "timesofindia.com" நேர்காணல். 25 ஜூன் 2002. 2008 ஜூலை 20 அன்று எடுக்கப்பட்டது.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Iyer, Meena (21 July 2006). "Rekha's singing a different tune!". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2007-12-04.
  2. Ahmed, Rauf. "The Millennium Special". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2007-12-04.
  3. 3.0 3.1 Rekha.Utsav[DVD].Odyssey Quest.Retrieved on 2009-05-08.Event occurs at Biographies.ISBN ODX20324RD.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 Chopra, Sonia (8 October 2007). "Rekha's journey: The 'ageless' diva over the years". Sify. பார்க்கப்பட்ட நாள் 2008-04-19.
  6. Raaj, Shaheen (12 June 2005). "Rekha: timeless beauty". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  7. "Rekha". Archived from the original on 2008-05-09. பார்க்கப்பட்ட நாள் 2010-02-04.
  8. "Rekha takes movie town by storm". Archived from the original on 2009-04-02. பார்க்கப்பட்ட நாள் 2010-02-04.
  9. "Top Actress". BoxOfficeIndia.Com. Archived from the original on 2012-12-02. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
  10. 10.0 10.1 10.2 "The Rekha story". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2007-12-06.
  11. Shah, Akshay. "Khoon Bhari Maang". Planet Bollywood. Archived from the original on 2012-09-18. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
  12. Verma, Sukanya (10 October 2001). "An enigma called Rekha". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
  13. Adarsh, Taran (29 August 2001). "Lajja review". indiaFM. பார்க்கப்பட்ட நாள் 2007-12-04.
  14. "Zubeidaa - a re-review". Upperstall.com. Archived from the original on 2007-12-12. பார்க்கப்பட்ட நாள் 2007-12-04.
  15. "Box Office 2003". BoxOfficeIndia.Com. Archived from the original on 2012-05-25. பார்க்கப்பட்ட நாள் 2007-01-10.
  16. "Box Office 2006". BoxOfficeIndia.Com. Archived from the original on 2012-05-25. பார்க்கப்பட்ட நாள் 2007-01-10.
  17. "timesofindia.indiatimes.com". Rekha's personal life via Simi Garewal. பார்க்கப்பட்ட நாள் 19 July 2007.

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ரேகா (நடிகை)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_(நடிகை)&oldid=3792105" இலிருந்து மீள்விக்கப்பட்டது