சீமா பிஸ்வாஸ்
சீமா பிஸ்வாஸ் | |
---|---|
2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 40 ஆவது தேசிய திரைப்பட விழாவில் சீமா பிஸ்வாஸ் பேட்டி. | |
பிறப்பு | 14 சனவரி 1965 நல்பரி, அசாம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1988 – தற்பொழுது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாண்டிட் குயின் |
சீமா பிஸ்வாஸ் (Seema Biswas, பிறப்பு: 14 சனவரி, 1965): ஓர் இந்திய திரைப்பட மற்றும் அசாமிய நாடக நடிகையும் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு சேகர் கபூர் இயக்கத்தில் வெளிவந்த பாண்டிட் குயின் என்ற படத்தில் பூலான் தேவியாக நடித்துப் புகழ்பெற்றார். இப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் மிகவும் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் புகழ்பெற்றவர். இவர் 2000 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி விருதும், 2005 இல் தீபா மேத்தா இயக்கத்தில் வெளிவந்த "வாட்டர்" திரைப்படத்தில் சகுந்தலாவாக நடித்தமைக்காக, 2006 இல் சிறந்த நடிகைக்கான ஜெனி விருதும், பெற்றார். 1996 இல் இவர் முக்கிய வேடத்தில் நடித்து வெளிவந்த படமான "கொமோஷி தி மியூசிக்கல்" என்ற படத்தில் சிறந்த துணை நடிக்கைக்கான திரைவிருதையும் பெற்றார். மேலும் "பூட்" (2003), விவாஹ்(2006), ஹாஃப் கேர்ள் பிரண்ட் (2017) ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாகும். திரைப்படத்தில் மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிஸ்வாஸ் நடித்துள்ளார்.
இளமையும் கல்வியும்
[தொகு]இவர் அசாமில் உள்ள நல்பரி என்ற இடத்தில் ஜகதீஸ் பிஸ்வாஸ் - மீரா பிஸ்வாஸ் என்ற வங்காள இணையருக்கு மகளாகப் பிறந்தார்.[1] இவரது தாயார் அக்காலத்தில் அசாமில் புகழ்வாய்ந்த நாடக நடிகையும் ஒரு வரலாற்று ஆசிரியரும் ஆவார். சீமா பிஸ்வாஸ் தன் சிறுவயதில் திரைக்கலைஞர்களான பூபேன் அசாரிகா, பானி சர்மா, பிஷ்ணுபிரசாத் ராபா ஆகியோருடன் நட்புகொண்டிருந்தார். இவர் நல்பரி கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்தார். பின்பு புதுடில்லியில் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு பட்டம் பெற்ற பின் தேசிய நாடகப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
தொழில்
[தொகு]சீமா பிஸ்வாஸ் நடிப்பில் வெளிவந்த கிருஷ்ணன் கர்த்தா என்பவரது இயக்கத்தில் வெளிவந்த இந்திப்படமான அம்ஷினி 1988 ஆம் ஆண்டிற்கான திரைப்படவிழாவில் (பிலிமோத்சவ் 1988) காட்சிப்படுத்தப்பட்டது. ஆனாலும் தேசிய நாடகப் பல்கலைக்கழகத்தில் இவரது பங்களிப்பைக் கவனித்து வந்த சேகர் கபூர் தனது பாண்டிட் குயின் படத்தில் பூலான் தேவி கதாபாத்திரத்தில் ஒரு வாய்ப்பு வழங்கினார். அதன் பின்னரே சீமா பிஸ்வாஸ் தேசிய அளவில் பேசப்பட்டார். இவர் மிக முன்னதாகவே அசாமிய திரைப்படங்களில் நடித்து வந்திருந்தாலும் இந்தப்படமே இவருக்கு இந்தித் திரையுலகில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னர் சீமா பிஸ்வாரஸ் மிகத்தீவிரமாக இந்தித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1996 இல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த கமோஷி தி மியூசிகல் என்ற படத்தில் காதுகேளாத, வாய்பேசவியலாத இவர், நானே படேகரை எதிர்க்கும் பிளேவி என்ற பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்றார்.
தனது துறையில் நாடகங்களில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் மட்டுமே நடிப்பதை மறுத்து[2] பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் பல மராத்தியத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிந்தாஸ்ட், தியாஸ் பர்வா, லால்பாக் பரேல் ஆகியவை இவர் நடித்து வெளிவந்த மராத்தியப் படங்களாகும்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான ஆசிய அகாதமியின் இயக்குநர் சந்தீப் மார்வால் தேசிய திரை மற்றும் தொலைக்காட்சிக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகக் சிறப்புப் படுத்தப்பட்டுள்ளார்.
2011 இல் இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் -சீசன் 5 தொடரில் பங்குகொள்வதாக வதந்தி பரப்பப்பட்டது.[3]
2014, நவம்பர் 20 முதல் நவம்பர் 30 வரை கோவாவில் நடைபெற்ற நாற்பத்தைந்தாவது இந்தியத் திரைப்படவிழாவில் (IFFI) பெருமைபெறத்தக்க ஐந்து நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[4]
விருதுகள்
[தொகு]தேசியத் திரை விருதுகள்
[தொகு]- 1995: பாண்டிட் குயின் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது
பிலிம்பேர் விருதுகள்
[தொகு]- 1997: சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது (பாண்டிட் குயின்)
திரை நட்சத்திர விருதுகள்
[தொகு]- 1997: சிறந்த துணை நடிகைக்கான திரை நட்சத்திர விருது (கொமோஷி தி மியூசிகல்)
- 2003: (பரிந்துரை): சிறந்த துணை நடிகைக்கான திரை நட்சத்திர விருது (கம்பெனி)
- 2004:(பரிந்துரை): சிறந்த துணை நடிகைக்கான திரை நட்சத்திர விருது (பூட்)
சங்கீத நாடக அகாதமி விருதுகள்
[தொகு]- 2001 - சங்கீத நாடக அகாதமி விருது
ஜீனி / கனடீய திரை விருதுகள்
[தொகு]- 26 ஆவது ஜீனி விருது, 2006: வாட்டர் திரைப்படத்தில் முன்னனிக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தமைக்காக கனடீய திரை மற்றும் தொலைக்காட்சி அகாதமி வழங்கிய சிறந்த நடிகைக்கன விருது.
- கனடீயத் திரை விருதுகள், 2013: மிட்நைட்ஸ் சில்ரன் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான கனடீய திரை மற்றும் தொலைக்காட்சி அகாதமி விருது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vasisht, Divya: "Seema Biswas: Beyond the limelight" The Times of India (online), 24 June 2003. Retrieved 21 March 2007.
- ↑ Kumar, Anuj: "Beyond the image பரணிடப்பட்டது 2012-11-07 at the வந்தவழி இயந்திரம்", தி இந்து, Metro Plus Mangalore edition, 3 March 2007. Retrieved 22 March 2007.
- ↑ Team, Tellychakkar. "Seema Biswas in Bigg Boss 5?". Tellychakkar.com (in ஆங்கிலம்).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Pranjal Borah (21 November 2014). "Seema Biswas as Jury in 45th International Film Festival of India". KothaSobi இம் மூலத்தில் இருந்து 10 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160410112021/http://www.kothasobi.com/news/seema-biswas-jury-45th-international-film-festival-india/. பார்த்த நாள்: 22 November 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்
- வாழும் நபர்கள்
- வங்காள மக்கள்
- 1965 பிறப்புகள்
- இந்தித் திரைப்பட நடிகைகள்
- அசாமியத் திரைப்பட நடிகைகள்
- மராத்தியத் திரைப்பட நடிகைகள்
- பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
- தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்