விஜயசாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயசாந்தி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னையவர்ஏ. நரேந்திரா
பின்னவர்காலி
தொகுதிமேதக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 சூன் 1966 (1966-06-24) (அகவை 57)
சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
துணைவர்எம்.வி. சீனிவாச பிரசாத்
வாழிடம்(s)ஐதராபாத்,  இந்தியா
வேலைதிரைப்பட நடிகை, அரசியல்வாதி

விஜயசாந்தி (Vijayashanti பிறப்பு: 24 சூன் 1966) இந்திய திரைப்பட நடிகையும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2004-இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். 1991-இல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார். சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ஐந்து முறையும், ஆந்திர மாநில அரசின் நந்தி விருதினை நான்கு முறையும் வென்றுள்ளார். மேலும் தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சிறுவயதில்[தொகு]

விஜயசாந்தி 1966 சூன் 24 அன்று சென்னையில் பிறந்தார்.[1] இவரது பெற்றோர் வரலட்சுமி, சீனிவாச பிரசாத் இருவரும் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தின் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர்கள். ஆயினும் இவர்கள் ஆந்திராவின் வாராங்கல் மாவட்டத்தில் ராமாங்குடம் பகுதியில் (தற்போது தெலங்கானா) வாழ்ந்து வருகின்றனர்.[2] இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு சென்னையில் ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பத்தாம் வகுப்பு கல்வியை பூர்த்தி செய்தார்.[3]

திருமண வாழ்க்கை[தொகு]

விஜயசாந்தி ஆந்திராவைச் சேர்ந்த எம். வி. சீனிவாச பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[3]

விருதுகள்[தொகு]

இந்திய தேசிய திரைப்பட விருதுகள்
  • சிறந்த நடிகைக்கான விருது - கர்த்தவ்யம் (1990).
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
  • வாழ்நாள் சாதனையாளர் விருது (2003).
  • சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது - ஓசே ரமுலம்மா (1997).
  • சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது - போலீஸ் லாக்-அப் (1993).
  • சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது - கர்த்தவ்யம் (1990).
  • சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது - பாரதனாரி (1989).[4]
  • சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது - பிரதிகதனா (1985).

திரைப்பட விபரம்[தொகு]

நடித்த தமிழ் திரைப்படங்களில் சில[தொகு]

தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

  1. கர்த்தவ்யம்
  2. தேஜாஸ்வினி 1994) — இந்தி
  3. அதாவி சக்கா (1999) — தெலுங்கு

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-17. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.
  4. http://books.google.com/books/about/Vidura.html?id=_JZZAAAAMAAJ. C. Sarkar., 1990

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயசாந்தி&oldid=3752759" இலிருந்து மீள்விக்கப்பட்டது