உள்ளடக்கத்துக்குச் செல்

பானுப்ரியா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானுப்ரியா கவுசல்
பிறப்புசனவரி 15, 1966 (1966-01-15) (அகவை 58)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வாழ்க்கைத்
துணை
ஆதர்ஷ் கவுசல்

பானுப்ரியா (தெலுங்கு: భానుప్రియ ) ஓர் இந்திய நடிகை. இவர் 1980 முதல் - 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர் 1990-களில் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]

ஆரம்ப காலம்

[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் ஜனவரி 15, 1966 வருடம் பிறந்த இவர், இளமைக் காலம் முதல் சென்னையில் வசித்து வருகிறார்.

இவருடைய தங்கை நிஷாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிஷாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் (1988) திரைப்படம் மூலமாக பிரபலமானார். நிஷாந்தி 2002-ம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான்-லும், நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

பானுப்ரியா பல மொழிகளில் சுமார் 111-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் 55 திரைப்படங்களிலும், தமிழில் 40-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களிலும், 14 இந்தித் திரைப்படங்களிலும் மற்றும் சில மலையாள மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா (1983).

பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்டது. இவர் தற்போது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார். அதன்காரணமாக இவருடைய ஐ-டெக்ஸ் (Eyetex) விளம்பரமானது மிகவும் பிரபலம்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.

திரைப்படங்கள்

[தொகு]

தமிழ்

[தொகு]
வ. எண் ஆண்டு திரைப்படம் நடிப்பு இயக்கம் குறிப்புகள்
1 1983 மெல்ல பேசுங்கள் வசந்த் பாரதிவாசு அறிமுகம்
2 1985 தென்றல் தொடாத மலர் ராஜீவ் ஜி. பி. பாலன்
3 1989 ஆராரோ ஆரிராரோ பாக்யராஜ் பாக்யராஜ்
4 1990 சிறையில் பூத்த சின்ன மலர் விஜயகாந்த் அமிர்தம்
5 1991 புது மனிதன் சத்யராஜ்
6 1991 கோபுர வாசலிலே கார்த்திக் பிரியதர்சன்
7 1991 சத்ரியன் விஜயகாந்த் கே. சுபாஷ்
8 1991 பொன்டாட்டி சொன்னா கேட்கனும் சந்திரசேகர்
9 1991 அழகன் மம்முட்டி கே. பாலசந்தர்
10 1991 பிரம்மா சத்யராஜ் கே. சுபாஷ்
11 1991 தளபதி ரஜினிகாந்த் மணிரத்னம்
12 1991 தைப்பூசம் நாசர்
13 1992 மகுடம் சத்யராஜ் பிரதாப் போத்தன்
14 1992 பரதன் விஜயகாந்த் சபாபதி தக்ஷினாமூர்த்தி
15 1992 தெற்கு தெரு மச்சான் சத்யராஜ்
16 1992 சுந்தர காண்டம் பாக்யராஜ் பாக்யராஜ்
17 1992 பங்காளி சத்யராஜ் கே. சுபாஷ்
18 1992 அமரன் கார்த்திக் கே. ராஜேஸ்வர்
19 1992 காவிய தலைவன் விஜயகாந்த்
20 1992 வானமே எல்லை ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன் கே. பாலசந்தர் சிறப்புத் தோற்றம்
21 1992 நீங்க நல்லா இருக்கனும் நிழல்கள் ரவி விசு
22 1993 கட்டளை சத்யராஜ் லியக்வத் அலி கான்
23 1993 பொறந்த வீடா புகுந்த வீடா சிவகுமார்
24 1993 மகராசன் கமல்ஹாசன் ஜி. என். ரங்கராஜன்
25 1993 முற்றுகை அருண் பாணடியன், ரஞ்சிதா மனோபாலா
26 1993 கோகுலம் அர்ஜுன் விக்ரமன்
27 1993 உழவன் பிரபு கதிர்
28 1993 ராஜ துரை விஜயகாந்த் எஸ். ஏ. சந்திரசேகர் சிறப்புத் தோற்றம்
29 1995 சக்ரவர்த்தி கார்த்திக் எம். பாஸ்கர்
30 1998 தலைமுறை ராஜ்கிரன் ராஜ்கிரன்
31 1998 ஆஹா ரகுவரன் சுரேஷ் கிருஷ்ணா
32 1999 என்றென்றும் காதல் விஜய் மனோஜ் பத்நகர்
33 1999 ஆனந்த பூங்காற்றே கார்த்திக் ராஜ் கபூர் சிறப்புத் தோற்றம்
34 2000 Annai
35 2001 ஸ்ரீ ராஜராஜேஷ்வரி ரம்யா கிருஷ்ணன்
36 2001 தாலி காத்த காளியம்மன் பிரபு ஆர்.சோமசுந்தர் சிறப்புத் தோற்றம்
37 2002 நைனா ஜெயராம் மனோபாலா
38 2004 ஜெய் பிரசாந்த், தியாகராஜன் எஸ். நாராயணன்
39 2004 ஜோர் சத்யராஜ், சிபிராஜ், கஜாலா செல்வா
40 2004 செல்லமே விஷால், ரீமா சென் காந்தி கிருஷ்ணா சிறப்புத் தோற்றம்
41 2007 ஒரு பொன்னு ஒரு பையன்
42 2007 பொல்லாதவன் தனுஷ் வெற்றிமாறன்
43 2008 தீக்குச்சி
44 2012 என் பெயர் குமாரசாமி ரத்தன் சந்திரசேகர்
45 2012 3 தனுஷ் ஐஸ்வர்யா ஆர். தனுஷ்

அனைத்து மொழித் திரைப்படங்கள்

[தொகு]
வருடம் திரைப்படம் நடிப்பு மொழி குறிப்புகள்
1983 மெல்ல பேசுங்கள் வசந்த் தமிழ்
Sitara சுமன் தெலுங்கு
1984 Rowdy Krishnam Raju தெலுங்கு
Ramayanamlo Bhagavatham Chandra Mohan தெலுங்கு
Palnati Puli பாலகிருஷ்ணா தெலுங்கு
Jamesbond 999 சுமன் தெலுங்கு
Chadarangam Narehs தெலுங்கு
Gruhalakshmi மோகன் பாபு தெலுங்கு
Illale Devatha Akkineni Nageshwara Rao தெலுங்கு
1985 தென்றல் தொடாத மலர் ராஜீவ் தமிழ்
Jhansi Rani Rajendra Prasad தெலுங்கு
Mogudu Pellalu நரேஷ் தெலுங்கு
Musugu Donga சுமன் தெலுங்கு
Bangaru Chiluka Arjun Sarja தெலுங்கு
Preminchu Pelladu Rajendra Prasad தெலுங்கு
Jwala Chiranjeevi தெலுங்கு
Garjana சுமன் தெலுங்கு
Kutumba Bandham ராஜேஷ் தெலுங்கு
Illaliko Pariksha Mohan Babu தெலுங்கு
Athmabalam Balakrishna Nandamuri தெலுங்கு Filming
America Alludu சுமன் தெலுங்கு
Anveshana கார்த்திக் தெலுங்கு
சிரஞ்சீவி (நடிகர்) Chiranjeevi தெலுங்கு
Vijetha Chiranjeevi தெலுங்கு
1986 Dosti Dushmani Rishi Kapoor, Jeetendra, Rajini Kanth இந்தி
Manchi Manasulu Bhanuchandar தெலுங்கு Filming
Prathibavanthudu கிருஷ்ணா தெலுங்கு Debut Film
Konaseema Kurradu Arjun Sarja தெலுங்கு
Kashmora Rajasekhar, Rajendra Prasad தெலுங்கு
Aalapana மோகன் தெலுங்கு
Apoorva Sahodarulu பாலகிருஷ்ணா தெலுங்கு
Anadiga Aadadi Rajendra Prasad தெலுங்கு
Anasuyammagari Alludu Balakrishna Nandamuri தெலுங்கு
1987 Insaf Ki Pukar Dharmendra, Jeetendra இந்தி
Khudgarz Jeetendra, Shatrughan Sinha இந்தி
Srinivasa Kalyanam Venkatesh தெலுங்கு
Shankaravam கிருஷ்ணா தெலுங்கு
Prema Samrat சுமன் தெலுங்கு
Prema Deepalu Sarath Banu தெலுங்கு
Chakravarthy Chiranjeevi தெலுங்கு
Donga Mogudu Chiranjeevi தெலுங்கு
Jebu Donga Chiranjeevi தெலுங்கு
Allari Krishnayya பாலகிருஷ்ணா தெலுங்கு
1988 Mar Mitenge Jeetendra, Mithun Chakraborty இந்தி
Tamacha Jeetendra, Rajini Kanth இந்தி
Bharathamlo Balachandrudu பாலகிருஷ்ணா தெலுங்கு Special Song
Nyayaniki Siksha Shiva Krishna தெலுங்கு
[[Thiragabadda தெலுங்கு Bidda]] Balakrishna Nandamuri தெலுங்கு
Khaidi No 786 Chiranjeevi தெலுங்கு
Trinetrudu Chiranjeevi தெலுங்கு
Swarnakamalam Venkatesh தெலுங்கு
AgniKeratalu கிருஷ்ணா தெலுங்கு
1989 Dav Pech Jeetendra இந்தி
Garibon Ka Daata Mithun Chakraborty இந்தி Special Song
Kasam Vardi Ki Jeetendra இந்தி
Suryaa : An Awakening Vinod Khanna இந்தி
ஆராரோ ஆரிரரோ K. Bhagyaraj தமிழ்
State Rowdy Chiranjeevi தெலுங்கு
Bhagawan Krishnam Raju தெலுங்கு Special Appearance
Black Tiger Ramesh Babu தெலுங்கு
Gudachari 117 Krishna தெலுங்கு
Asokha Chakravarty Balakrishna Nandamuri தெலுங்கு
1990 Zahreelay Sanjay Dutt, Jeetendra இந்தி
சிறையில் பூத்த சின்ன மலர் விசயகாந்த் தமிழ்
Jayasimha சுமன் தெலுங்கு
1991 Bhabhi Govinda, Juhi chawla இந்தி Special Song
புது மனிதன் சத்யராஜ் தமிழ்
கோபுர வாசலிலே கார்த்திக் தமிழ்
சத்திரியன் விசயகாந்த் தமிழ்
பொண்டாட்டி சொன்ன கேட்டுக்கனும் Chandrasekhar தமிழ்
அழகன் Mammootty தமிழ்
பிரம்மா சத்யராஜ் தமிழ்
தளபதி Rajinikanth தமிழ்
தைப்பூசம் நாசர் தமிழ்
Sri Yedu Kondala Swamy Arun Govil தெலுங்கு
People's Encounter Srikanth தெலுங்கு
Ramudu Kadu Rakshasudu சுமன் தெலுங்கு
1992 Rajashilpi Mohanlal மலையாளம்
மகுடம் சத்யராஜ் தமிழ்
பரதன் விசயகாந்த் தமிழ்
தெற்கு தெரு மச்சான் சத்யராஜ் தமிழ்
சுந்தர காண்டம் K. Bhagyaraj தமிழ்
பங்காளி சத்யராஜ் தமிழ்
அமரன் கார்த்திக் தமிழ்
காவிய தலைவன் விசயகாந்த் தமிழ்
வானமே எல்லை Anand Babu, Ramya Krishnan தமிழ்
நீங்க நல்லா இருக்கனும் Nizhalgal Ravi தமிழ்
1993 கட்டளை சத்யராஜ் தமிழ்
பொறந்த வீடா புகுந்த வீடா Sivakumar தமிழ்
மகராசன் Kamalhassan தமிழ்
முற்றுகை Arun Pandiyan, Ranjitha தமிழ்
கோகுலம் Arjun Sarja தமிழ்
உழவன் Prabhu Ganesan தமிழ்
ராஜ துரை விசயகாந்த் தமிழ்
Bhagath Suman தெலுங்கு
Kirayi Gunda Krishna தெலுங்கு
1994 Rasika Ravichandran கன்னடம்
Ish Gup Chup Varun Kumar தெலுங்கு
Bangaru Mogudu சுமன் தெலுங்கு
1995 நெடுஞ்சாலை Suresh Gopi மலையாளம்
சக்கரவர்த்தி Karthik தமிழ்
Pedharayudu Mohan Babu தெலுங்கு
1996 Azhakiya Ravanan Mammotty மலையாளம்
1996Amma Durgamma Sasikumar, Ooha தெலுங்கு
1997 Kulam Suresh Gopi மலையாளம்
Rishyasringan Krishna, Shyjudev மலையாளம்
Mama Bagunnava Rajendra Prasad, Naresh தெலுங்கு
அன்னமாச்சாரியார் Akkineni Nagarjuna, Suman தெலுங்கு
1998 தலைமுறை Rajkiran தமிழ்
ஆஹா Raghuvaran தமிழ்
Aaha Jagapati Babu தெலுங்கு
1999 என்றென்றும் காதல் Vijay தமிழ்
ஆனந்த போர்க்களமே Karthik தமிழ்
2000 Kochu Kochu Santhoshangal Jayaram, Lakshmi Gopalaswamy மலையாளம் Nandi Award for Best Actress
தேவர்மகள் Shivrajkumar, Ambareesh கன்னடம்
அன்னை தமிழ்
February 14, Necklace Road Suman தெலுங்கு
Jayam Manadera Venkatesh தெலுங்கு
Ayodhya Ramaiah Srihari தெலுங்கு
2001 சிறீ ராஜ ராஜேசுவரி Ramya Krishnan தமிழ்
தாலி காத்த காளியம்மன் Prabu தமிழ்
2002 Simhadriya Simha Vishnuvardan கன்னடம்
நைனா Jayaram தமிழ்
Lahiri Lahiri Lahirilo HariKrishna, Suman தெலுங்கு
2004 Manjupoloru Penkutti Amrutha Prakash, Suresh Krishna மலையாளம்
Kadamba Vishnuvardan கன்னடம்
[[ஜெய் (2004 தமிழ் film)|ஜெய்]] Prashanth, Thyagarajan தமிழ்
ஜோர் சத்யராஜ், Sibiraj, Gajala தமிழ்
செல்லமே Vishal Krishna, Reema sen தமிழ்
Sravanamasam Harikrishna, Krishna, Gajala தெலுங்கு
2005 Hridayathi Sookshikkaan Kunchako Boban, Bhavana மலையாளம்
Orey Pandu Sachin தெலுங்கு
Chatrapathi Prabhas, Shriya தெலுங்கு
2006 Gautam S.S.C Navadeep, Sindhu Tolani தெலுங்கு
2007 ஒரு பொன்னு ஒரு பையன் தமிழ்
பொல்லாதவன் தனுஷ் தமிழ்
2008 Theekuchi தமிழ் Nandi Award for Best Supporting Actress
Mahayagnam Nazer தெலுங்கு
pelliayindhikani Allari Naresh, Kamalini Mukherjee தெலுங்கு
2009 Meshtru Devaraj கன்னடம்
2010 My Name is Amrutha Bhanuchander தெலுங்கு Nandi Award for Best Supporting Actress
2012 Kattu Paranja Katha மலையாளம்
Chatrapati கன்னடம்
Devathalu Rishi தெலுங்கு
2012 என் பெயர் குமாரசாமி தமிழ் படப்பிடிப்பில்
Dammu Junior NTR தெலுங்கு படப்பிடிப்பில்
1980s Shravana Meghaalu Muralimohan, Lakshmi தெலுங்கு

தொலைக்காட்சிகளில்

[தொகு]

விருதுகள்

[தொகு]
  • 1988-ம் வருடத்திற்கான, சுவர்ன கமலம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருது
  • 1988-ம் வருடத்திற்கான, சுவர்ன கமலம் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது
  • 1989-ம் வருடத்திற்கான, ஆராரோ ஆரிராரோ திரைப்படத்திற்காக தமிழ் நாடு மாநில அரசின் சிறப்பு விருது
  • 1991-ம் வருடத்திற்கான, அழகன் திரைப்படத்திற்காக தமிழ் நாடு மாநில அரசின் சிறப்பு விருது
  • 1996-ம் வருடத்திற்கான, பெத்தராயுடு திரைப்படத்திற்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருது
  • 2002-ம் வருடத்திற்கான, லஹிரி லஹிரி லஹிரிலோ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது
  • 2005-ம் வருடத்திற்கான, சத்ரபதி திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "భానుప్రియ-వంశీ కాంబినేషన్ అంటేనే..." Sakshi (in தெலுங்கு). 15 January 2014. Archived from the original on 27 July 2021. பார்க்கப்பட்ட நாள் 23 December 2020.
  2. "సితార - జనవరి 15 (సినీ చరిత్రలో ఈరోజు) - ఈరోజే". సితార (in தெலுங்கு). 15 January 2019. பார்க்கப்பட்ட நாள் 23 December 2020.
  3. Chauhan, Ramesh (7 January 2017). "నాట్య మయూరి భానుప్రియ!". Mana Telangana (in தெலுங்கு). Archived from the original on 30 November 2022. பார்க்கப்பட்ட நாள் 23 December 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானுப்ரியா_(நடிகை)&oldid=4100734" இலிருந்து மீள்விக்கப்பட்டது