கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் | |
---|---|
![]() | |
பிறப்பு | 17 அக்டோபர் 1992 சென்னை, தமிழ்நாடு, ![]() |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1992–2002, 2013–தற்போது வரை |
பெற்றோர் | சுரேஷ்குமார் மேனகா |
கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1] 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். இவருடைய தந்தை மலையாளம், தாயார் தமிழ் ஐயங்கார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
திரை வாழ்க்கை
[தொகு]நடித்த திரைப்படங்கள்
[தொகு]![]() |
திரைப்படங்கள் இன்னமும் வெளியாகவில்லை |
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | இயக்குநர் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2000 | பைலட்ஸ் | ரவி அஞ்சால் | மலையாளம் | குழந்தை நட்சத்திரமாக | |
2001 | அச்சனே எனக்கு இஷ்டம் | சுரேஷ் கிருஷ்ணா | மலையாளம் | குழந்தை நட்சத்திரமாக | |
2002 | குபேரன் | சுந்தர் தாஸ் | மலையாளம் | குழந்தை நட்சத்திரமாக | |
2013 | கீதாஞ்சலி | கீதா / அஞ்சலி | பிரியதர்சன் | மலையாளம் | |
2014 | ரிங் மாஸ்டர் | கார்த்திகா | ரபி | மலையாளம் | |
2015 | இது என்ன மாயம் | மாயா | ஏ. எல். விஜய் | தமிழ் | |
2016 | நேனு சைலசா | சைலசா | கிஷோர் திலக் | தெலுங்கு | |
ரஜினி முருகன் | கார்த்திகா | பொன்ராம் | தமிழ் | ||
தொடரி | சரோஜா | பிரபு சாலமன் | தமிழ் | ||
ரெமோ | காவ்யா | பாக்கியராஜ் கண்ணன் | தமிழ் | ||
2017 | பாம்பு சட்டை | ஆதம் தாசன் | தமிழ் | ||
பைரவா | பரதன் | தமிழ் | |||
நேனு லோக்கல் | கீர்த்தி | தெலுங்கு | |||
2018 | தானா சேர்ந்த கூட்டம் | மது | விக்னேஷ் சிவன் | தமிழ் | |
சாமி 2 | தியா விசுவநாதன் | ஹரி | தமிழ் | ||
சர்கார் | நிலா | தமிழ் | |||
சண்டக்கோழி 2 | செம்பருத்தி | தமிழ் | |||
சீமராஜா | சீமராஜா, கடம்பவேல் ராஜா | தமிழ் | |||
மகாநதி | சாவித்திரி | தெலுங்கு | |||
அக்ன்யாதவசி | சுகுமாரி | தெலுங்கு | |||
2019 | மன்மதுடு 2 | சுமா | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
2020 | பென்குயின் | - | தமிழ் | ||
மிஸ் இந்தியா | மானஸா சம்யுக்தா | தெலுங்கு | |||
2021 | ஜாதி ரத்னலு | வனஜாக்ஷி | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
ரங் தே | அனுபமா | தெலுங்கு | |||
அண்ணாத்த | தங்க மீனாட்சி | தமிழ் | |||
மரக்கர்: அரபிகடலின் சிம்மம் | அர்ச்சா | மலையாளம் | |||
2022 | குட் லக் சகி | சகி | தெலுங்கு | ||
சாணி காயிதம் | பொன்னி | தமிழ் | |||
சர்க்காரு வரி பாட | கலாவதி | தெலுங்கு | |||
வாஷி | மாதவி மோகன் | மலையாளம் | |||
2023 | தசரா | வெண்ணிலா | தெலுங்கு | ||
மாமன்னன் | லீலா | தமிழ் | |||
போலா சங்கர் | மகாலெக்ஷ்மி | தெலுங்கு | |||
2024 | சைரன் | நந்தினி | தமிழ் | ||
ரகுதாதா + | கயல்விழி | தமிழ் | (படப்பிடிப்பு) | ||
ரிவால்வர் ரீட்டா + | ரீட்டா | தமிழ் | (படப்பிடிப்பு) | ||
கன்னி வெடி + | - | தமிழ் | (படப்பிடிப்பு) | ||
குழந்தை ஜான் + | - | ஹிந்தி | (படப்பிடிப்பு) |
பெற்ற விருதுகள்
[தொகு]- சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது - கீதாஞ்சலி (2014)[2]
- சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014)
- சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014)
- சிறந்த துணை நடிகைக்கான வயலார் திரைப்பட விருது - கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர் [3]
- 2018 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது - மகாநதி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் (தமிழில் - நடிகையர் திலகம்) பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பாத்திரத்தில் நடித்தமைக்காக வழங்கப்பட்டது.[4]
சொந்த வாழ்க்கை
[தொகு]15 வருடக் காதலுக்குப் பிறகு, கீர்த்தி தனது நீண்டகாலக் காதலரான அந்தோணி தட்டிலை 2024 டிசம்பர் 12 ஆம் தேதி கோவாவில் பாரம்பரிய தமிழ் பிராமண மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.[5][6] அவரது குடும்பம் கேரளாவின் கொச்சியைச் சேர்ந்தது.[7] அவர் ஒரு பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார், கேரளாவில் உல்லாச விடுதிகளை சொந்தமாக வைத்திருப்பவர். மேலும் அஸ்பெரோஸ் விண்டோ சொல்யூஷன்ஸ் கட்டுப்பாடு வரையறுக்கப்பட்ட நிறுமத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Characters Which Has Scope To Perform Excites Me, Says Keerthi Menaka". www.filmibeat.com. Archived from the original on 21 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "16th Asianet Film Award 2014 Winners List". kerala9.com. Archived from the original on 7 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.
- ↑ "Vayalar Samskarika Vedi Awards". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.
- ↑ "சாவித்திரி கேரக்டர் சவாலாக இருந்தது...! தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்". நியூஸ் 18 தமிழ். 10 ஆகத்து 2019. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2019.
- ↑ "Keerthy Suresh-Antony Thattil wedding first photos out: Vijay attends grand Goa ceremony". Indian Express.
- ↑ "Keerthy Sureshs Fairytale Wedding With Boyfriend Antony Thattil: Dated For 15 Years, Got Married To Dubai-Based Businessmen In Goa - In Pics". Zee News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-13.
- ↑ "Keerthy Suresh’s Antony Thattil: Everything to know about her soon-to-be husband". The Times of India. 19 November 2024. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/keerthy-sureshs-antony-thattil-everything-to-know-about-her-soon-to-be-husband/articleshow/115439395.cms.
- ↑ "Keerthy Suresh's husband Antony Thattil's educational qualifications and business ventures". The Economic Times. 12 December 2024. https://economictimes.indiatimes.com/magazines/panache/keerthy-sureshs-husband-antony-thattils-educational-qualifications-and-business-ventures/articleshow/116253801.cms?from=mdr.