பூமிகா சாவ்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமிகா சாவ்லா
பிறப்புரச்னா சாவ்லா
21 ஆகத்து 1978 (1978-08-21) (அகவை 45)
புது தில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்குடியா
பூமிகா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2000–நடப்பு
வாழ்க்கைத்
துணை
பரத் தாகூர் (2007–நடப்பு)

பூமிகா (பஞ்சாபி: ਭੂਮਿਕਾ ਚਾਵਲਾ) ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். 2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் இந்தி திரைப்படம் 2003 இல் வெளியான தேரே நாம் ஆகும். தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமிகா_சாவ்லா&oldid=3734055" இருந்து மீள்விக்கப்பட்டது