சுஜாதா (நடிகை)
சுஜாதா | |
---|---|
பிறப்பு | விஜயலட்சுமி திசம்பர் 10, 1952 இலங்கை |
இறப்பு | ஏப்ரல் 6, 2011 | (அகவை 58)
செயற்பாட்டுக் காலம் | 1968–2011[1] |
பெற்றோர் | தந்தை : சங்கர மேனன் தாயார் : சரஸ்வதி |
வாழ்க்கைத் துணை | ஜெய்கர் |
உறவினர்கள் | கோபி மேனன் (இளைய சகோதரர்) |
சுஜாதா (Sujatha; 10 திசம்பர் 1952 – 6 ஏப்ரல் 2011) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுஜாதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் 1952 திசம்பர் 10 இல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். அக்காலத்தில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றி வந்தார்கள். சுஜாதாவின் தந்தை சங்கரன் மேனன் கேரளத்தில் இருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராக 1956 வரை பணியாற்றினார். பின்னர் தென்பகுதியில் உள்ள காலியில் பணியாற்றினார். சுஜாதாவும் அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். பதினான்காம் வயதில் குடும்பத்துடன் கேரளத்திற்குத் திரும்பினார். அங்கு தனது குடும்பத்தினருடன் குடியேறிய சுஜாதா சிறிது காலம் தையல் வேலை செய்து வந்தார். 1977-ஆம் ஆண்டில் ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யா மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
திரைப்படத்துறையில்
[தொகு]`போலீஸ் ஸ்டேஷன்' என்ற மலையாள நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். 1971-ஆம் ஆண்டில் இயக்குநர் ஜோஸ் பிரகாஷ், `தபஷ்னி' என்ற மலையாள படத்தில், சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ஆம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் `அவள் ஒரு தொடர்கதை' படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.
நடித்த படங்கள்
[தொகு]- அவள் ஒரு தொடர்கதை (1974)
- உறவு சொல்ல ஒருவன் (1975)
- அன்னக்கிளி (1976)
- அவர்கள் (1977)
- அடுக்குமல்லி
- அபிராமி
- அமைதிப்படை
- அருள்
- அவள் வருவாளா (1998)
- அந்தமான் காதலி
- அன்புக்கு நான் அடிமை
- ஆசை மனைவி
- ஆண்பிள்ளை சிங்கம்
- ஆயிரத்தில் ஒருத்தி
- ஆலய தீபம்
- இதயமலர்
- உங்களில் ஒருத்தி
- உத்தமி (1985)
- உயர்ந்தவர்கள்
- உழைப்பாளி
- உயிரே உனக்காக
- உறவுக்கு கை கொடுப்போம்
- உன்னை நான் சந்தித்தேன்
- என்ன தவம் செய்தேன்
- ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
- ஒரு கொடியில் இரு மலர்கள்
- கடல் மீன்கள்
- கண்ணுக்கு மை எழுது
- கண்மணி
- கந்தர் அலங்காரம்
- கர்ணா
- குடும்பம்
- கொடி பறக்குது
- கோயில் காளை
- சந்தித்த வேளை
- சந்திப்பு
- செந்தமிழ் பாட்டு (1992)
- செந்தமிழ்ச்செல்வன்
- சொன்னதைச் செய்வேன்
- ஞானக்குழந்தை
- தாலாட்டு பாடவா
- திருப்பம்
- தீர்ப்பு
- துடிக்கும் கரங்கள்
- துணைவி (1982)
- துணையிருப்பாள் மீனாட்சி
- தென்னங்கீற்று
- தோழர் பாண்டியன்
- நட்புக்காக
- நல்ல காலம் பொறந்தாச்சு
- நினைவிருக்கும் வரை
- நீ ஒரு மகாராணி
- நீர் நிலம் நெருப்பு
- நூல் வேலி (1979)
- நேர்மை
- பலப்பரீட்சை
- பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
- பாபா
- பூந்தளிர்
- பூவரசன்
- மண்ணுக்குள் வைரம்
- மதுரை மீனாட்சி
- மயங்குகிறாள் ஒரு மாது
- மானஸ்தன்
- மீண்டும் பல்லவி
- ராஜகுமாரன்
- ரேவதி
- லலிதா
- வரலாறு
- வாத்தியார்
- வாழ்ந்து காட்டுகிறேன்
- விடிஞ்சா கல்யாணம்
- விதி
- வில்லன்
- விஸ்வரூபம்
- வீட்டுக்கு ஒரு கண்ணகி
- ஸ்ரீராமஜெயம்
- பிரசாது Bhrashtu 1978, மலையாளம்
- தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300-இற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி உள்ளிட்ட வேடங்களில் சுஜாதா நடித்துள்ளார்.
- `வரலாறு' படத்தில், அஜீத்குமாரின் அம்மாவாக நடித்து இருந்தார். அதுதான் அவர் நடித்த கடைசி படம். அதன்பிறகு சுஜாதா நடிக்கவில்லை.
மறைவு
[தொகு]இருதய நோயால் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்ததால் 2011 ஏப்ரல் 6 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் மரணம் அடைந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sujatha, IMDb, பார்க்கப்பட்ட நாள் 2008-10-27
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-04-26. பார்க்கப்பட்ட நாள் 2011-04-06.
வெளி இணைப்புகள்
[தொகு]- அவள் ஒரு தொடர்கதை' படத்தில் நடித்த நடிகை சுஜாதா மரணம், தினத்தந்தி, 7-04-2011