உள்ளடக்கத்துக்குச் செல்

தெல்லிப்பழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெல்லிப்பழை
Tellippalai
தெல்லிப்பழை is located in Northern Province
தெல்லிப்பழை
தெல்லிப்பழை
ஆள்கூறுகள்: 9°47′0″N 80°2′0″E / 9.78333°N 80.03333°E / 9.78333; 80.03333
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவலிகாமம் வடக்கு

தெல்லிப்பழை[1] (Tellippalai) என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இது யாழ்ப்பாண நகரில் இருந்து 15 கி.மீ. வடக்கே அமைந்துள்ளது. இது வலிகாமம் வடக்கில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் மாவிட்டபுரம், வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் கட்டுவன், ஏழாலை ஆகிய ஊர்களும், தெற்கில் மல்லாகம், ஏழாலை என்னும் ஊர்களும், மேற்கில் அளவெட்டி, பன்னாலை என்பனவும் உள்ளன. யாழ்ப்பாண நகரில் இருந்து தொடங்கும் காங்கேசன்துறை வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தெல்லிப்பழை நகரம் அம்பனை, கொல்லங்கலட்டி, வீமன்காமம், வறுத்தலைவிளான், மாத்தனை போன்ற கிராமங்களின் நிர்வாக, வணிக மையமாக மாறியது. தெல்லிப்பழை தொடருந்து நிலையம் தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து கிழக்கே ஏறத்தாழ 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் தொண்டைமான் மன்னன் காலத்தில், தெல்லிப்பழையில் சம்பக மாப்பாணன், சந்திரசேகர மாப்மாணன், கனகராயன் ஆகிய குடும்பப் பெயர்களைக் கொண்ட மூன்று குடும்பங்கள் குடியேறியதாகத் தெரிகிறது.[2] இலங்கைத் தமிழர் அரசியலில் நீண்டகாலம் செல்வாக்குச் செலுத்தியவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவியவருமான சா. ஜே. வே. செல்வநாயகம் இவ்வூரைச் சேர்ந்தவர். இவ்வூர் அடங்கியிருந்த காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் நீண்ட காலம் இருந்தவர்.

யாழ் மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் துர்க்கை அம்மன் கோவில் இவ்வூரில் அமைந்துள்ளது.[3]

ஆலயங்கள்

[தொகு]

[4][5][6]

  • ஸ்ரீ மகாமாரி அம்பாள் ஆலயம்
  • ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
  • தோதரையம்மன் ஆலயம்
  • யூனியன் கல்லூரி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம்
  • தம்பையப்புலம் முத்துமாரியம்பாள் ஆலயம்
  • தெல்லிப்பளை கிழக்கு காளியம்பாள் ஆலயம்
  • நாச்சிமார் ஆலயம்
  • கோயிற்புலம் பேச்சியம்பாள் ஆலயம்
  • சித்தியம்புளியடி பேய்ச்சியம்பாள் ஆலயம்
  • கிளானை கண்ணகையம்பாள் ஆலயம்
  • பற்றையம்மன் ஆலயம்
  • கொல்லன்சீமா காளியம்பாள் ஆலயம்
  • சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராசர் ஆலயம்
  • கருணைமிகு காசிவிநாயகர் ஆலயம்
  • குருக்கள்கிணற்றடி விநாயகர் ஆலயம்
  • கன்னிவளவு பிள்ளையார் ஆலயம்
  • அரசனாலடி விநாயகர் ஆலயம்
  • தரைமன்கலட்டி விநாயகர் ஆலயம்
  • தில்லையிட்டி விநாயகர் ஆலயம்
  • முல்லாத்தனை சித்திவிநாயகர் ஆலயம்
  • வீமன்காமம் சித்திவிநாயகர் ஆலயம்
  • குருநாதசுவாமி ஆலயம்
  • அரசினர் மாவட்ட வைத்தியசாலை முருகன் ஆலயம்
  • கவளாவத்தை அருள்மிகு ஞானவைரவர் ஆலயம்
  • பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயம்
  • குடவத்தை அம்பனை ஞானவைரர் ஆலயம்
  • செஞ்சலனை ஞானவைரவர் ஆலயம்
  • சூலாம்பத்தை வயிரவர் ஆலயம்
  • வயலிருப்பைப்பதி ஸ்ரீஞானவைரவர் ஆலயம்
  • புதுத்தோட்ட ஆதிவைரவர் ஆலயம்
  • மகாதனை நரசிங்கவைரவர் ஆலயம்
  • தேரம்பல வயிரவர் ஆலயம் ....
  • முருங்காவத்தை வயிரவர் ஆலயம்
  • இம்பிளிசிட்டி வைரவர் ஆலயம்
  • நல்லை நயினார் கிணற்றடி நரசிங்கவைரவர் ஆலயம்
  • தம்போதனை ஞானவைரவர் ஆலயம்
  • சித்தியம்புளியடி சுடலைவைரவர் ஆலயம்
  • கல்வளவு ஸ்ரீ வைரவர் ஆலயம்
  • புளியடி வைரவர் ஆலயம்
  • வண்ணமாதரை ஞானவைரவர் ஆலயம்
  • கொத்தியாலடி சுடலை வயிரவர் ஆலயம்[7]
  • கிளானை ஞானவைரவர் ஆலயம்
  • வேள்வை சூலாம்பத்தை வைரவர் ஆலயம்
  • கேணியடி வயிரவர் ஆலயம்
  • பளையில் வயிரவர் ஆலயம்
  • புத்திரங்கொண்டான் ஞானவைரவர் ஆலயம்
  • முல்லார்த்தனை வீரபத்திரர் ஆலயம்
  • சித்தியப்புளியடி கட்டுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயம்
  • முடிமன்னர் இராஜ ஆலயம்
  • சுளுவில் பெரியதம்பிரான் ஆலயம்
  • கோயிற்புலம் அண்ணமார் சிவன் ஆலயம்
  • சித்தியம்புளியடி அண்ணமார் ஆலயம்
  • கோவங்கட்டுவளை அண்ணமார் ஆலயம்
  • பொற்கலம்தம்பை ஞானவைரவர் ஆலயம்

தெல்லிப்பழையைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தெல்லிப்பழை பெயர்க் காரணம், தமிழ்நெட் - (ஆங்கில மொழியில்)
  2. யாழ்ப்பாணச் சரித்திரம், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1912
  3. "Tellippalai Thurkkai Amman Temple Official Website".
  4. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  5. "Jaffna District - Temples within High Security Zone in Valikamam North". September 2002. http://www.tchr.net/mili_occ_sep2002/zon_sep2002_jaffna.htm. 
  6. சி. அப்புத்துரை (October 6, 1988). "தெல்லிப்பளைச் சைவாலயங்கள்". https://www.noolaham.org/wiki/index.php/தெல்லிப்பளைச்_சைவாலயங்கள். 
  7. "Kottiyā-vattai, Kottā-vattai/ Koṟṟā-vattai, Mūtiyā-vattai, Toppiḷā-vattai, Ampaṭṭā-vattai". TamilNet. March 14, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=24969. 
  8. "the Memoirs of I.P.Thurairatnam". Tamilnation.org. Retrieved April 2, 2015.
  9. "Thangamma Appakutty". Valai Tamil. Retrieved 6 April 2015.
  10. "Profile: Dr Thangamma Appakutti". Daily News Sri Lanka. Retrieved 6 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெல்லிப்பழை&oldid=4419956" இலிருந்து மீள்விக்கப்பட்டது