கட்டுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுவன் (Kadduvan) என்பது இலங்கையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இது யாழ்நகரின் வடக்கே 12 மைல் தொலைவில் தெல்லிப்பழைக்கு அண்மிய சிற்றூர். இது நீர்வளம், நிலவளம், எனப் பல வளங்களைத் தன்னகத்தே கொண்ட செம்மண் நிலப்பரப்பாகும்.

கட்டுவன் மேற்கே காங்கேசன்துறை வீதி, கிழக்கே பலாலி வீதி ஆகிய இரு பிரதான வீதிகளை அண்டியுள்ளது. மயிலிட்டி, குப்பிளான், குரும்பசிட்டி, புன்னாலைக்கட்டுவன், சுன்னாகம், மல்லாகம் என அயலூர்களை எல்லையாக கொண்ட ஊராகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுவன்&oldid=2651971" இருந்து மீள்விக்கப்பட்டது