ஏழாலை
Jump to navigation
Jump to search
ஏழாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் தெல்லிப்பழை, கட்டுவன், குப்பிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் குப்பிளான், புன்னாலைக்கட்டுவன் ஆகிய ஊர்களும், தெற்கில் சுன்னாகம், ஊரெழு ஆகிய ஊர்களும், மேற்கில் மல்லாகமும், உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்களில் ஒன்றான இவ்வூர் ஏழாலை வடக்கு, ஏழாலை மேற்கு, ஏழாலை கிழக்கு, ஏழாலை தெற்கு, ஏழாலை மத்தி, ஏழாலை தெற்மேற்கு என ஆறு கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஏழாலையில் ஏழு ஆலயங்கள் இருந்ததனால் ஏழாலை எனப் பெயர் ஏற்பட்டதாக மக்கள் கருதுகின்றனர்.