இலங்கையின் மாகாணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கையின் மாகாண பிரிவுகள்
Coat of arms of Sri Lanka, showing a lion holding a sword in its right forepaw surrounded by a ring made from blue lotus petals which is placed on top of a grain vase sprouting rice grains to encircle it. A Dharmacakra is on the top while a sun and moon are at the bottom on each side of the vase.
இக்கட்டுரை
இலங்கை அரசியலும் அரசும்
தொடரின் ஒரு பகுதி

இலங்கையின் மாகாணங்கள் என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இதன் படி இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 9 மாகாணங்களும் தனித்தனி மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறன.

தோற்றம்[தொகு]

பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை அடைந்த பின், நடைமுறையிலிருந்த அரசியல் அதிகாரங்களை மையப்படுத்திய ஆட்சிமுறை இலங்கை மக்களின் அரசியல் தேவைகளை நிறைவு செய்யமுடியாமல் போகவே. 1955 ஆண்டு தொடக்கமே அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இம் முறைகள் பலனற்று போனபோது புதிய பரவலாக்க முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் சில

 • 1973/74 மாவட்ட அரசியல் அதிகார சபை முறை
 • 1979/80 மாவட்ட அபிவிருத்தி சபை/மாவட்ட அமைச்சர் முறை
 • 1987/88 மாகாணசபை முறை

சட்டம்[தொகு]

1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் 13ஆவது அரசியல் அமைப்புச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது மாகாணசபைகளை அமைத்தல், மாகாணசபைகளுக்கு ஆளுனர்களை நியமித்தல், மாகாணசபை அமைச்சர் நியமனம், மாகாணசபையின் அதிகாரங்கள், மாகாணசபைகள் சட்டத்தை மீறும் போது எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள், மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைப்பு, மாகாண நிதி ஆனைக்குழு போன்றவற்றுக்கான அடிப்படைச் சட்டமாகும். இதன் பிறகு பாராளுமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாணசபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை, மாகாணசபைக் கூட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள், நிதிச் செயற்பாடுகள், பொதுச் சேவைகள் அமைத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

நிர்வாகம்[தொகு]

மாகாணசபையானது பின்வரும் நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்.

 1. ஆளுனர்
 2. மந்திரி சபை
 3. முதலமைச்சர்
 4. 4 மாகாணசபை அமைச்சர்கள்
 5. மாகாணசபை பொதுப் பணிகள் ஆணைக்குழு
 6. தலைமை செயலாளர்

தகவல்கள்[தொகு]

மாகாணம் தலைநகர் பரப்பளவு
(ச.கி.மீ.)
மாவட்டங்கள்
மத்திய கண்டி 5,584 3
கிழக்கு திருகோணமலை 9,951 3
வட-மத்திய அனுராதபுரம் 10,724 2
வடக்கு யாழ்ப்பாணம் 8,882 5
வடமேற்கு புத்தளம் 7,812 2
சபரகமுவா இரத்தினபுரி 4,902 2
தெற்கு காலி 5,559 3
ஊவா பதுளை 8,488 2
மேற்கு கொழும்பு 3,709 3

மாகாணத் தரவுகள்[தொகு]

2012 கணக்கெடுப்பின் படி, இலங்கையின் மாகாண ரீதியாக மக்கள்தொகை தரவுகள்:

மாகாணம் Area map மாகணத்
தலைநகரம்
உருவாக்கப்பட்ட
திகதி
நிலப்
பரப்பு
கிமீ2 (மை2)[1]
உள்ளூர்
நீர்ப்
பரப்பு
கிமீ2 (மை2)[1]
மொத்தப்
பரப்பு
கிமீ2 (மை2)[1]
மக்கள்
தொகை
(2012)[2]
மக்கள்
அடர்த்தி
/கிமீ2
(/மைல்2)[lower-alpha 1]
மத்திய மாகாணம், இலங்கை Area map of Central Province of Sri Lanka கண்டி 1 அக்டோபர் 1833 70035575000000000005,575 (2,153) 700199000000000000099 (38) 70035674000000000005,674 (2,191) 2,571,557 7002461000000000000461 (1,190)
கிழக்கு மாகாணம், இலங்கை Area map of Eastern Province of Sri Lanka திருக்கோணமலை 1 அக்டோபர் 1833 70039361000000000009,361 (3,614) 7002635000000000000635 (245) 70039996000000000009,996 (3,859) 1,555,510 7002166000000000000166 (430)
வடமத்திய மாகாணம், இலங்கை Area map of North Central Province of Sri Lanka அனுராதபுரம் 1873 70039741000000000009,741 (3,761) 7002731000000000000731 (282) 700410472000000000010,472 (4,043) 1,266,663 7002130000000000000130 (340)
வடக்கு மாகாணம், இலங்கை Area map of Northern Province of Sri Lanka யாழ்ப்பாணம் 1 அக்டோபர் 1833 70038290000000000008,290 (3,200) 7002594000000000000594 (229) 70038884000000000008,884 (3,430) 1,061,315 7002128000000000000128 (330)
வடமேல் மாகாணம், இலங்கை Area map of North Western Province of Sri Lanka குருணாகல் 1845 70037506000000000007,506 (2,898) 7002382000000000000382 (147) 70037888000000000007,888 (3,046) 2,380,861 7002317000000000000317 (820)
சப்ரகமுவா மாகாணம் Area map of Sabaragamuwa, Sri Lanka இரத்தினபுரி 1889 70034921000000000004,921 (1,900) 700147000000000000047 (18) 70034968000000000004,968 (1,918) 1,928,655 7002392000000000000392 (1,020)
தெற்கு மாகாணம், இலங்கை Area map of Southern Province of Sri Lanka காலி 1 அக்டோபர் 1833 70035383000000000005,383 (2,078) 7002161000000000000161 (62) 70035544000000000005,544 (2,141) 2,477,285 7002460000000000000460 (1,200)
ஊவா மாகாணம் Area map of Uva, Sri Lanka பதுளை 1886 70038335000000000008,335 (3,218) 7002165000000000000165 (64) 70038500000000000008,500 (3,300) 1,266,463 7002152000000000000152 (390)
மேற்கு மாகாணம், இலங்கை Area map of Western Province of Sri Lanka கொழும்பு 1 அக்டோபர் 1833 70033593000000000003,593 (1,387) 700191000000000000091 (35) 70033684000000000003,684 (1,422) 5,851,130 70031628000000000001,628 (4,220)
Total 700462705000000000062,705 (24,211) 70032905000000000002,905 (1,122) 700465610000000000065,610 (25,330) 20,359,439 7002325000000000000325 (840)

இவற்றையும் பார்க்க[தொகு]


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
 1. 1.0 1.1 1.2 "Table 1.1: Area of Sri Lanka by province and district". Statistical Abstract 2014. இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.
 2. "Census of Population and Housing of Sri Lanka, 2012 - Table A1: Population by district,sex and sector". Department of Census & Statistics, Sri Lanka.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found, or a closing </ref> is missing