இலங்கை கடற்கரைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்கொழும்பு கடற்கரை

பின்வருவன இந்திய பெருங்கடலில் இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள இலங்கை தீவில் உள்ள கடற்கரைகளின் பட்டியல் ஆகும்.

நீர்கொழும்பு[தொகு]

நீர்கொழும்பு ஒரு கடற்கரை நகரம் ஆகும். இது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 7 கி.மீ (4.3 மைல்) தூரத்திலும் மற்றும் இலங்கையின் வணிகத் தலைநகரான கொழும்பில் இருந்து சுமார் 37 கி.மீ (23 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. இது நீர்கொழும்புக் கடல் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இந்நகரின் பொருளாதாரம், பெரும்பாலும் சுற்றுலா மற்றும் மீன்பிடித் தொழிலினை அடிப்படையாகக் கொண்டது. இது பரந்த கடற்கரைகளையும் மற்றும் ஒரு அமைதியான கடலுக்குமான ஒரு இடமாகும்.

கல்கிசை[தொகு]

கல்கிசை நகரமானது இலங்கை வணிகத் தலைநகரான கொழும்பில் இருந்து 12 கி.மீ. (7.5 மைல்) தூரத்தில் அமைந்துள்ளது.இது ஒரு நடுத்தர வர்க்க மற்றும் கொழும்பை அண்டிய பெரும்பாலானவர்கள் வசிக்கும் குடியிருப்பு புறநகராக கருதப்படுகிறது. இந்த நகரமானது “கோல்டன் மைல்"  என அறியப்படுவதோடு, இது  இலங்கையின் ஒரு பிரபலமான சுற்றுலா இடமாகிறது.மவுண்ட் லவினியா (கல்கிசை) என்ற பெயர் இலங்கையில் 1805 இல் இருந்து 1811 வரை மகாதேசாதிபதியாக இருந்த சர் தாமஸ் மெயிட்லாந்து என்பவரால் வைக்கப்பட்டது ஆகும். அவர் தனது வரவேற்பு நிகழ்வொன்றில்  உள்ளூர் மச்டிஜோ (mestizo) நடன கலைஞரான லோவினாவின்  மீது காதல் வயப்பட்டார். இறுதியில்  குறுகிய காலம் வரை அவருடன்  ஒரு இரகசிய உறவு வைத்திருந்தார்.

களுத்துறை[தொகு]

களுத்துறை நகரமனது இலங்கையின் வணிகத் தலைநகரான கொழும்பில் இருந்து 43 கி.மீ. (27 மைல்) தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு வெப்பமண்டல காலநிலை உடைய இடமாவதோடு பனை மரங்கள் வரிசையாக காணப்படுகின்றதும்  பலருடன் கூடிச் சேர்கின்ற நகரமாகவும் அமைகின்றது. இந்த இடமானது ஆட்சி காலத்தின் போது ஒரு முக்கிய மசாலா வர்த்தக மையமாகப் பயன்படுத்தப்பட்டதோடு இன்றும்  இவ் வரலாற்று இயல்பை பேணிக் காக்கின்றது. இங்குதான் உலகின் ஒரே உள்ளீடில்லாத புத்த மதக் கோயில் மற்றும் ரிச்மண்ட் கோட்டை, பண்ணை மாளிகை என்பன உள்ளன.

பேருவளை[தொகு]

பேருவளை நகரமானது கொழும்புக்கு தெற்கே 55 கி.மீ (34 மைல்) தூரத்திலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 92 கி.மீ (57 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது.இது தென் மேற்கு கரையோர முதல் முக்கிய பலருடன் சென்று கூடும் கடற்கரை மற்றும் இதனை கொழும்பு காலி பிரதான மோட்டார் சாலை (ஏ2), அதே போல் தெற்கு கடலோர புகையிரதம் மூலமும் அடையலாம். இது ஒரு இலங்கையில் மிகப்  பெரிய மீன்பிடி மையமும் ஆகும்.

பெந்தோட்டை[தொகு]

காலி டச்சு கோட்டை

பெந்தோட்டை நகரம் கொழும்புக்கு தெற்கில் 64 கி.மீ (40 மைல்) தூரத்தி அமைந்துள்ளது. இது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 101 கி.மீ (63 மைல்) தெற்காக  உள்ளது. இது ஒரு உயரமான தென்னை பனை மரங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற பெரும்பாலும் ஒரு கிராமப்புற பகுதியியாகும்.இதனை கொழும்பு-காலி பிரதான சாலை (A2) மூலமும் அத்துடன் கொழும்பு-காலி-மாத்தறை தெற்கு புகையிரதம்  மூலமும் அடையலாம்.

பாசிக்குடா மற்றும் கல்குடா[தொகு]

கல்குடா மற்றும் பாசிக்குடா இரண்டு கடற்கரைகளும் மட்டக்களப்பின் வடக்கில்  34 கி.மீ (21 மைல்) தூரத்தில் அமைந்துள்ளது.  பாசிக்குடா ஆனது ஏராளமான ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஆழமற்ற கடற்கரை கொண்ட பரபரப்பான ஒரு சுற்றுலாத்தளம் ஆகும். இதற்கு மாறாக, கல்குடா கடற்கரையானது உள்நாட்டுப் போர் மற்றும் 2004ல் ஏற்பட்ட சுனாமி காரணமாக பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்படும்.

உணவாண்டுன[தொகு]

உணவாண்டுன நகரமானது கொழும்புக்கு தெற்கில் 140 கி.மீ (87 மைல்) தூரத்தில் அமைந்துள்ளது. இக் கடற்கரையானது சுமார் ஒரு கிலோமீட்டர் நீண்ட அரை வட்ட வடிவமானது ஆகும். உணவாண்டுன ஆனது கடல் ஆமைளுக்காக அறியப்பட்டதாகும் .மற்றும் ஆண்டில் பல்வேறு நேரங்களில் கடற்கரையை ஒட்டி முட்டைகள் காணப்படுவது இதற்கான சுற்றுலா பயணிகளுக்கு சாட்சியாக அமைகிறது. இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகள் 2004 ல் இந்தியப் பெருங்கடல் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் இந்த கடலோர சமூகம் விரைவில் மீழ்கட்டப்பட்டு, சுற்றுலா நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

மிரிஸ்ஸ[தொகு]

மிரிஸ்ஸ கடற்கரையின்  பனோரமா காட்சி 

மிரிஸ்ஸகடற்கரையானது இலங்கையின் தென்முனைக்கு நெருக்கமாகவும் பூமத்திய ரேகையில் இருந்து சுமார் 200 கி.மீ. (120 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு பிறை வடிவம் உடையதும் தனிமைப்படுத்தப்பட்டதும் ஆகும் . இது வெலிகம தென்கிழக்கில் இருந்து வெறும் 4 கி.மீ. (2.5 மைல்) தூரத்தில் இலங்கையின் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

வெலிகம[தொகு]

வெலிகம நகரம் காலிக்கு கிழக்கே சுமார் 30 கி.மீ (19 மைல்) தூரத்தில் அமைத்துள்ள  சிறிய மீன்பிடி நகரம் ஆகும்.  இது ஒப்பீட்டளவில் அமைதியானதும் மற்றும்  ஒரு பரந்த விரிகுடாவை சுற்றியும் அமைந்துள்ளது.  வெலிகம  என்பது  "மணல் கிராமம்" என மொழிபெயர்க்கப்பட்டு தன்னைச் சுற்றியுள்ள இயற்கை விவரிப்பதாகவும் உள்ளது.  இக் கடற்கரையானது பொய்க்கால் மீனவர்களுக்காக அறியப்பட்டது ஆகும். வெலிகமவை பிரதான A2 கொழும்பு-காலி-மாத்தறை மோட்டார் வீதி , தெற்கு அதிவேக மற்றும் கொழும்பு-மாத்தறை புகையிரதம் மூலமும் அடையலாம். 

பொல்ஹேன[தொகு]

மாத்தறை கடற்கரை

பொல்ஹேன  ஆனது  மாத்தறையில்  அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும். மற்றும் 4 கி.மீ (2.5 மைல்)   நீளமும்  கடலுக்கு அப்பால் 200 மீ  (660 அடி) நீளத்திலும்   பவளப் பாறையைக் கொண்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் அமைதியாகவும் மற்றும் சுற்றுலா பயணிகள் நீந்துவதற்கு பொதுவான இடமாகவும் உள்ளது. பொல்ஹேனவில் பலர் ஆழ்கடல் நீச்சல்,  உலாவித்திரிதல்  மற்றும் குளியல் செய்வதைக் காணலாம்.

திக்வெல்ல[தொகு]

பெஹம்பிய   மட்டு நிலங்கள், திக்வெல்ல கடற்கரை

திக்வெல்ல கடற்கரையானது மேலும் திக்வெல்ல அல்லது திக்வெல்ல தெற்கு எனவும் அழைக்கப்படுகிறது, இது இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கடற்கரை நகரமாகும். இது மாத்தறைக்கு கிழக்கே 22 கி.மீ (14 மைல்) இல் அமைந்துள்ளது. இலங்கையின் மிகப் பெரிய புத்த சிலையானது திக்வெல்ல பகுதியில்  அமைந்துள்ளது. பலர் திக்வெல்ல கடற்கரையோரங்களில் நீந்துகிறார்கள் ஏனெனில் தண்ணீர் ஆனது   மேட்டு நிலங்கள், பாறைகள் மற்றும் மணல்கட்டிகளால் பாதுகாக்கப்படுகின்றன.

ஹிக்கடுவ[தொகு]

 ஹிக்கடுவ  இலங்கையின் தெற்கு கடற்கரையில் காலிக்கு வடமேற்கில் 14 கி.மீ (8.7 மைல்) தூரத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். இது இலங்கையின் மிகவும் அபிவிருத்தி அடைந்த கடற்கரை ரிசார்ட் ஆகவும்  நன்கு அறியப்பட்ட உலாவித் திரிவதற்கான இடமாகவும் அத்துடன் கடல் ஆமைகளை எளிதாக பார்க்க கூடிய இடமாகவும் உள்ளது. தண்ணீர் ஆனது பவளப் பாறைகள் மூலம் சூழப்பட்டு தூய்மையானதாக காணப்படும். இங்கு  சிறு  சிறு  தீவுகள் சேர்ந்த ஒரு கூட்டம் உள்ளது.

கொக்கல[தொகு]

கொக்கல என்பது சுற்றித் திரிவதற்கு  நன்கு அறியப்பட்ட இலங்கையின் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது கொழும்பிற்கு தெற்கே 130 கி.மீ (81 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பிரதேசத்தில் கொக்கல நதி மற்றும் கொக்கல ஏரி அமைந்துள்ளது. மேலும் இக்  கிராமத்தில் மார்டின் விக்கிரமசிங்க நாட்டுப்புற கலை அருங்காட்சியகமும்  காணப்படுகிறது.

பொய்க்கால் விவசாயம்

தங்காலை[தொகு]

தங்காலை கடற்கரை

தங்காலை நகரமானது மாத்தறைக்கு கிழக்கில் இருந்து 195 கி.மீ (121 மைல்) தூரத்திலும் மற்றும் கொழும்புக்கு தெற்கில் இருந்து 35 கி.மீ. (22 மைல்) தூரத்திலும்   அமைந்துள்ளது. இது கோயம்போக்க, ப ள்ளிக்குடவா, மேடகேடிய போன்ற பல விரிகுடாக்களை கொண்டுள்ளது. தங்காலையானது நீச்சலலுக்கும் மற்றும் முக்குளித்தலுக்குமான பொதுவான ஒரு இடமாகவும் காணப்படுகின்றது.  தங்காலை எனும் பெயரானது ரன்-கல அல்லது பொன்மலை என்பதிலிருந்து இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. 

திருகோணமலை[தொகு]

திருகோணமலையில் ஆழ்கடல்  துறைமுகமாவும், மற்றும் நிலாவெளி,  உப்புவெளிகடல் ,புறா தீவு போன்ற  கடற்கரைகளுக்கு ஒரு பிறப்பிடமாகவும்  காணப்படுகிறது. இது ஒரு திமிங்கிலம் பார்ப்பதற்கான இடமாகவும் ஏழு சூடான கென்னியா நீரூற்றுகளையும்  வெறும்  8 கி.மீ (5.0 மைல்) தூரத்தில் கொண்டதாகவும்  காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டமானது இலங்கையில் ஒரு முக்கிய புத்த கலாச்சார மற்றும் தொல்பொருள் தளமாகக் கருதப்படுகிறது.

நிலாவெளி[தொகு]

நிலாவெளியானது வெறும்  4 கி.மீ நீளம் கொண்ட  திருகோணமலை பிராந்தியத்தின்  உல்லாசப் பிரதேசமாகும். இது கொழும்பிலிருந்து 276 கி.மீ (171 மைல்) தொலைவிலும், திருகோணமலையிலிருந்து 14  கி.மீ (8.7 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு[தொகு]

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய நகரம் மட்டக்களப்பு ஆகும். இந் நகரமானது இந்தியப் பெருங்கடலுக்கு  கிழக்கில் அமைந்துள்ளதோடும் முகத்துவார கடலேரிகளாலும் சூழப்பட்துள்ள  ஒரு சிறு  நில பரப்பாகும். இங்கு அதிகளவில் பவளங்கள்  கடற்கரையை ஒட்டிக் காணப்படுவதால் ஸ்நோர்கெலிங் மற்றும் ஸ்கூபா முக்குளித்தலுக்கும் பிரபலமாக கருதப்படுகிறது. மட்டக்களப்பு நகரத்தின் மையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லடி பாலமானது "பாடும் மீன்களினால்  "  அறியப்படுகிறது. 

அறுகம்பே  [தொகு]

அறுகம் குடா கடற்கரை

அறுகம்பே கொழும்பிலிருந்து 317 Km தூரத்தில் அமைந்துள்ளது. அத்துடன் பல மீனவ கிராமங்களைக் கொண்ட பரந்த கடற்கரையைக் கொண்டது.இலங்கையின் உலர்வலயத்தில் அமைந்துள்ள தென் கிழக்கு கடற்கரையாகும்.இலங்கையில் இந்தக் கடற்கரை நீந்துவதற்கு மிகச் சிறந்த இடமாகவும் தென் கிழக்கு ஆசியாவின் நான்காவது சிறந்த இடமமாகவும் அடையாளம் கானப்பட்டுள்ளது.லகுகலை தேசியப் பூங்கா மற்றும் யால கிழக்கு தேசியப் பூங்கா என்பன அறுகம்பேயின்  மத்தியிலிருந்து 10-30 கி.மீ  (6.2-18.6 மைல்) சுற்றளவில் அமைந்துள்ளது.இப்பகுதியில் மகுல் மஹா விகாரை (புத்த கோவில்),குடும்பிகல விகாரை (புத்த கோவில்), சாஸ்ரவேல புத்த கோவில் ,உகந்தை இந்துக் கோவில் போன்ற புனித ஸ்தலங்கள் அமைந்துள்ளன.

காரைநகர் கடற்கரை[தொகு]

இக்கடற்கரை வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து 20கி.மீ தொலைவில் உள்ள  காரைநகர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. ஆரம்ப காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாகக் காணப்பட்ட இப்பகுதி பின்னர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் விளைவால் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது.எனினும் மூன்று தசாப்த நீண்ட  காலப்  போர் முடிவுக்கு வந்ததையடுத்து இக்கடற்கரையின் பாதிப்பிற்கு உள்ளாகாத பகுதிகள் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளன. 

கிளாலி கடற்கரை [தொகு]

மேலும் kilali கடற்கரை என அழைக்கப்படும் இக்கடற்கரையானது வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ளது.பிராந்தியத்தில் மிகவும் அமைதியானதும்  மற்றும் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்ற ஒரு கடற்கரைப் பிரதேசமாகும்.

வங்காலை [தொகு]

வங்காலையானது வட மாகாணத்தின் மன்னார் பகுதியின் மிகப் பெரிய மீன்பிடி கிராமம் ஆகும்.இக்கடற்கரையானது நீர்ப் பாவனையற்ற ,மீன்பிடி காரணமாக அடிக்கடி குப்பைக் சிதறிக் காணப்படும் இடமாக காணப்படுகின்றது.

வரிசையாக்கம் செய்யப்படாதவை [தொகு]

மேற்கோள்கள்[தொகு]