கொழும்பு மாவட்டம்
கொழும்பு மாவட்டம்
Colombo District කොළඹ දිස්ත්රික්කය | |
---|---|
இலங்கையில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 06°52′N 80°01′E / 6.867°N 80.017°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
தலைநகர் | கொழும்பு |
பி.செயலகம் | |
அரசு | |
• மாவட்டச் செயலாளர் | பிரதீப் யசரத்தின |
பரப்பளவு | |
• மொத்தம் | 699 km2 (270 sq mi) |
• நிலம் | 676 km2 (261 sq mi) |
• நீர் | 23 km2 (9 sq mi) 3.29% |
• பரப்பளவு தரவரிசை | 25-ஆவது (மொத்தப் பரப்பளவில் 1.07%) |
மக்கள்தொகை (2012 census)[2] | |
• மொத்தம் | 23,09,809 |
• தரவரிசை | 1-ஆவது (மொத்த மக்கள்தொகையில் 11.40%) |
• அடர்த்தி | 3,300/km2 (8,600/sq mi) |
இனப்பரம்பல் (2012)[2] | |
• சிங்களவர் | 1,771,319 (76.69%) |
• சோனகர் | 242,728 (10.51%) |
• இலங்கைத் தமிழர் | 231,318 (10.01%) |
• மலையகத் தமிழர் | 27,336 (1.18%) |
• ஏனையோர் | 37,108 (1.61%) |
சமயம் (2012)[3] | |
• பௌத்தர் | 1,631,999 (70.66%) |
• இசுலாம் | 271,719 (11.76%) |
• கிறித்தவம் | 220,711 (9.56%) |
• இந்து | 182,342 (7.89%) |
• ஏனையோர் | 3,038 (0.13%) |
நேர வலயம் | ஒசநே+05:30 (Sri Lanka) |
அஞ்சல் குறியீடு | 00000-10999 |
தொலைபேசிக் குறியீடு | 011, 036 |
ஐஎசுஓ 3166 குறியீடு | LK-11 |
வாகனப் பதிவு | WP |
அதிகாரபூர்வ மொழிகள் | சிங்களம், தமிழ் |
இணையதளம் | கொழும்பு மாவட்ட செயலகம் |
கொழும்பு மாவட்டம் (Colombo District) என்பது இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் இலங்கை அரசினால் நியமிக்கப்படும் மாவட்டச் செயலாளரின் தலைமையில் கொழும்பு மாவட்ட செயலகத்தினால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தின் தலைநகரம் கொழும்பு ஆகும். 2016 இல் கொழும்பு மாவட்டம் அதிகாரபூர்வமாக ஒரு குடும்பத்திற்கு சராசரியாக அதிக வருமானம் கொண்ட மாவட்டமாகப் பதிவு செய்யப்பட்டது.[4]
வரலாறு
[தொகு]கொழும்பு மாவட்டம், ஐரோப்பியக் குடியேற்றத்திற்கு முந்தைய கோட்டை இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் இந்த மாவட்டம் முதலில் போர்த்துக்கேயர் ஆட்சியிலும், பின்னர் இடச்சு ஆட்சியிலும், பின்னர் பிரித்தானியர் ஆட்சியிலும் இருந்து வந்தது. 1815 இல் பிரித்தானியர் இலங்கைத் தீவை முழுவதுமாகக் கைப்பற்றினர். அவர்கள் தீவை கீழ்நாட்டு சிங்களவர், கண்டிய சிங்களவர், தமிழர் என மூன்று இன அடிப்படையிலான நிர்வாகக் கட்டமைப்புகளாகப் பிரித்தனர். கொழும்பு மாவட்டம் கீழ்நாட்டு சிங்கள நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1833 இல், கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, இன அடிப்படையிலான நிர்வாகக் கட்டமைப்புகள் ஐந்து புவியியல் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட ஒரே நிர்வாகமாக ஒருங்கிணைக்கப்பட்டன.[5] கொழும்பு மாவட்டமானது களுத்துறை, புத்தளம், ஏழு கோரளைகள் (இன்றைய குருணாகல் மாவட்டம்), மூன்று கோரளைகள், நான்கு கோரளைகள், கீழ் புலத்கமை (இன்றைய கேகாலை மாவட்டம்) ஆகியன இணைந்து புதிய மேல் மாகாணத்தை உருவாக்கியது.[6] இலங்கை விடுதலை பெற்ற போது, கொழும்பு மாவட்டம் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள இரண்டு மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது. மாவட்டத்தின் சில பகுதிகள் 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிதாக உருவாக்கப்பட்ட கம்பகா மாவட்டத்திற்கு மாற்றப்பட்டன.
புவியியல்
[தொகு]கொழும்பு மாவட்டம் இலங்கையின் தென்மேற்கே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 699 சதுரகிமீ ஆகும்.[1]
நிருவாக அலகுகள்
[தொகு]கொழும்பு மாவட்டம் 13 பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் பிரதேச செயலாளரினால் (முன்னர் துணை அரச அதிபர்) நிருவகிக்கப்படுகிறது.[7] பிரதேச செயலகங்கள் மேலும் 566 கிராம சேவையாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[7]
பிரதேச செயலகம் | முக்கிய நகரம் | கிராம சேவையாளர் பிரிவுகள் [7] |
பரப்பளவு (கிமீ2) [8] |
---|---|---|---|
கொழும்பு | கொழும்பு | 35 | 18 |
தெகிவளை | தெகிவளை-கல்கிசை | 15 | 8 |
ஹோமகமை | ஹோமகமை | 81 | 121 |
கடுவெலை | கடுவெலை | 57 | 88 |
கெசுபாவை | கெசுபாவை | 73 | 64 |
கொலன்னாவை | கொலன்னாவை | 46 | 28 |
மகரகமை | மகரகமை | 41 | 38 |
மொரட்டுவை | மொரட்டுவை | 42 | 20 |
பாதுக்கை | பாதுக்கை | 46 | 110 |
இரத்மலானை | தெகிவளை-கல்கிசை | 13 | 13 |
சீதாவக்கை | அவிசாவளை | 68 | 150 |
சிறீ செயவத்தனபுர கோட்டை | சிறீ ஜெயவர்தனபுர கோட்டை | 20 | 17 |
திம்பிரிகசாய | கொழும்பு | 29 | 24 |
மொத்தம் | 566 | 699 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2012-11-13.
- ↑ 2.0 2.1 "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2017-04-28. பார்க்கப்பட்ட நாள் 2013-03-22.
- ↑ "A3 : Population by religion according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2013-03-22.
- ↑ "What is the wealthiest city in Sri Lanka? (Official 2016 Dataset)". Archived from the original on 2019-10-20. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
- ↑ Mills, Lennox A. (1933). Ceylon Under British Rule (1795–1932). London: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 67–68.
- ↑ Medis, G. C. (1946). Ceylon Under the British (2nd (revised) ed.). Colombo: The Colombo Apothecaries Co. pp. 39–40.
- ↑ 7.0 7.1 7.2 "Grama Niladhari Divisions". Colombo District Secretariat. Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ "Land area by province, district and divisional secretariat division" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.
வெளி இணைப்புகள்
[தொகு]- Colombo District Secretariat பரணிடப்பட்டது 2018-08-14 at the வந்தவழி இயந்திரம்
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |