அம்பாறை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அம்பாறை மாவட்டம்
அம்பாறை தேர்தல் மாவட்டம்
அம்பாறை மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் கிழக்கு மாகாணம்
தலைநகரம் அம்பாறை
மக்கள்தொகை(2001) 589344
பரப்பளவு (நீர் %) 4415 (4%)
மக்களடர்த்தி 140 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 2
பிரதேச சபைகள் 14
பாராளுமன்ற தொகுதிகள் 4
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
19
வார்டுகள் 9
கிராம சேவையாளர் பிரிவுகள்

அம்பாறை மாவட்டம் (Ampara District) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. அம்பாறை நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றார் தூரத்தில் அமைந்துள்ளது. முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர், ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கின்றனர். அம்பாறை மாவட்டம், கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அம்பாறை ஆகிய நான்கு பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 504 கிராமசேவகர் பிரிவுகளையும் 19 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கு வாழும் மொத்தச் சனத்தொகையில் முஸ்லிம்கள் 44.0 வீதம், சிங்களவர்கள் 37.5 வீதம், இலங்கைத் தமிழர்கள் 18.3 வீதம், ஏனையோர் 0.2 வீதமாகவும் உள்ளனர்.

வரலாறு[தொகு]

Sri Lanka Ampara District.png

1961 ஆம் ஆண்டு வரை அம்பறை,மட்டக்களப்பு மாவட்டத்துடன் இனைந்த ஒரே மாவட்டமாகக் காணப்பட்டது. 10.04.1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், பாணமை,அம்பாறை, உகன, தமன ஆகிய பிரதேசங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இவற்றுடன் பதுளை மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மகா ஓயா, பதியத்தலாவை என்பவற்றுடன் இணைத்து அம்பாறை எனும் மாவட்டம் உருவக்கப்பட்டது.[1]


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை

ஆதாரம்[தொகு]

  1. செய்தி, வீரகேசரி வாரவெளியீடு,10.04.2011 பக்கம்11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாறை_மாவட்டம்&oldid=2223789" இருந்து மீள்விக்கப்பட்டது