உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைத்தீவு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முல்லைத்தீவு மாவட்டம்
Mullaitivu District
මුලතිවු දිස්ත්‍රික්කය
இரணைமடு நீர்த்தேக்கம்
இரணைமடு நீர்த்தேக்கம்
இலங்கையில் அமைவிடம்
இலங்கையில் அமைவிடம்
முலைத்தீவு மாவட்டத்தின் பிசெ, கிசே பிரிவுகள், 2006
முலைத்தீவு மாவட்டத்தின் பிசெ, கிசே பிரிவுகள், 2006
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
அமைப்புசெப்டம்பர் 1978
தலைநகர்முல்லைத்தீவு
பிசெ பிரிவு
அரசு
 • மாவட்டச் செயலர்கே. விமலநாதன்
 • நாஉ
 • மாசஉ
பட்டியல்
பரப்பளவு
 • மொத்தம்2,617 km2 (1,010 sq mi)
 • நிலம்2,415 km2 (932 sq mi)
 • நீர்202 km2 (78 sq mi)  7.72%
 • பரப்பளவு தரவரிசை11வது (மொத்தப்பரப்பில் 3.99%)
மக்கள்தொகை
 (2012 கணக்கெடுப்பு)[2]
 • மொத்தம்91,947
 • தரவரிசை25வது (மொத்த மக்கள்தொகையில் 0.45%)
 • அடர்த்தி35/km2 (91/sq mi)
இனம்
(2012 கணக்கெடுப்பு)[2]
 • இலங்கைத் தமிழர்79,081 (86.01%)
 • சிங்களவர்8,851 (9.63%)
 • இந்தியத் தமிழர்2,182 (2.37%)
 • சோனகர்1,760 (1.91%)
 • ஏனையோர்73 (0.08%)
சமயம்
(2012 census)[3]
 • இந்து69,628 (75.73%)
 • கிறித்தவர்11,989 (13.04%)
 • பௌத்தர்8,155 (8.87%)
 • இசுலாம்2,013 (2.19%)
 • ஏனையோர்162 (0.18%)
நேர வலயம்ஒசநே+05:30 (இலங்கை)
அஞ்சல் குறியீடு
42000-42999
ஐஎசுஓ 3166 குறியீடுLK-45
வாகனப் பதிவுNP
அதிகாரபூர்வ மொழிகள்தமிழ், சிங்களம்
இணையதளம்முல்லைத்தீவு மாவட்ட செயலகம்

முல்லைத்தீவு மாவட்டம் (Mullaitivu District) இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் முல்லைத்தீவு நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 6 பிரதேச செயலர் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பெரும்பகுதியையும், மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களின் சிறு பகுதிகளையும் கொண்டு 1978 இல் உருவாக்கப்பட்ட புது மாவட்டமாகும். வன்னி இராச்சியம் என்று அழைக்கப்பட்ட பெரும்பகுதி முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அமைந்துள்ளது.

வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நிலப்பரப்பு அளவில் முதலிடத்தில் இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும்.

அமைவிடம்[தொகு]

வடக்கே கிளிநொச்சியையும் கிழக்கே இந்துசமுத்திரத்தையும், மேற்கே மன்னாரையும், தெற்கே திருகோணமலை மற்றும் வவுனியாவையும் எல்லைகளாக கொண்ட ஒரு மாவட்டமாகும்.

தரைத்தோற்றம்[தொகு]

சங்க கால நிலக்கூறுகளின் பண்பை ஒத்த நானிலத்தன்மை கொண்டதாக முல்லைத்தீவு காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

 • குறிஞ்சி - குருந்தூர்மலை, வாவட்டிமலை, தென்னங்கல்லு மலை, வெள்ளை மலை
 • முல்லை - மாவட்ட பெரும்பகுதி காடுகளால் நிறைந்தவை.
 • மருதம் - அனேகமான நிலங்கள் வயல்களும் குளங்களும்
 • நெய்தல்- கிழக்கு பகுதி முழுமையாக் வங்கக் கடல்

கூறலாம்.

காலநிலை[தொகு]

உலர் வலயத்தில் அமைந்துள்ளதால் மிதமான வெப்ப நிலை காணப்படும். வடகீழ் பருவக்காற்றின் மூலம் அதிகளவிலும், தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் குறைந்தளவிலும் மழைகிடைப்பதால், ஒக்டோபர் முதல் ஜனவரி வரையான காலம், வெப்பநிலை குறைவாக காணப்படும்.

பொதுவாக வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் - 39.3 பாகை செல்சியஸ்என்ற வீச்சில் அமைந்திருக்கும்.சராசரி வருடாந்தம் மழைவீழ்ச்சி 1300மிமீ- 2416மிமீ ஆக இருக்கும்.

மண்[தொகு]

இங்கு நிலம் பரவலாக செங்கபில மண்ணும், செம்மஞ்சள் லற்றசோல் வகை மண்ணும் கொண்டதாக காணப்படுகின்றது. ஆனால், கடற்கரைகள் இல்மனைற் கலந்த மணல்மண் பரம்பல் கொண்டதாக அமைந்துள்ளன. மேற்கே புல்மோட்டையின் இல்மனைற் படிவுகளின் தொடர்ச்சிகள் முல்லைத்தீவு கடற்கரைகளில் காணக்கூடியதாக இருக்கும்.

விவசாயம், நீர்ப்பாசனம், மீன்பிடி[தொகு]

இங்கு 4 பிரதான குளங்களும், 15 நடுத்தர குளங்களும், 192 சிறிய குளங்களுமாக 211 குளங்கள் காணப்படுகின்றன. மக்கள் பிரதானமாக விவசாயத்தை தொழிலாக கொண்டதால் மழை நீரைக்கொண்டு 3,893 ஹெக்ரெயரில் பெரும்போகத்தையும், குளத்து நீரைக்கொண்டு 455.5 சிறுபோகத்தையும் ஹெக்ரெயரில் நெற்செய்கையில் ஈடுபடுகின்றனர்.

 • இரணைமடு
 • முத்தையன்கட்டு குளம்
 • தண்ணிமுறிப்பு குளம்

கிழக்கு கடற்கரை 70கி.மீ நீண்டுள்ளது.இதில் கொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல், மாத்தளன் ஆகிய கடனீரேரிகளில் இறால், நண்டு, மீன்பிடி மேற்கொள்ளப்படுகின்றது.

தாவரவகை[தொகு]

இலங்கையிலேயே நிலப்பயன்பாட்டில் பெரும்பகுதி காடுகளால் நிறைந்துள்ள மாவட்டங்களில் முல்லைத்தீவு முக்கியமானது. இங்குள்ள காடுகளில், வைரமரங்களான, முதிரை, பாலை, வீரை, காட்டாமணக்கு, ஒதி முதலிய மரங்கள் இயற்கையாக காணப்படுகின்றன. அவற்றை விட பனைகளும், தென்னைகளும் கொண்ட தோப்புக்கள் நிறைய உள்ளன. தேக்கு மரங்கள் நாட்டப்பட்ட செயற்கை காடுகள் இங்கு நிறைய காணலாம்.(தேராவில் குளம்)

மக்கள்[தொகு]

இன ரீதியாக தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் என மூவின மக்கள் வாழ்கின்ற போதிலும் அதிகப்படியாக தமிழர் வாழ்கின்றனர். சிங்களவர்கள் மணலாறு பிரதசத்திலுள்ள கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய இடங்களிலும், முஸ்லிம்கள் கரைதுறைப்பற்று பிரதேசத்திலும் வாழ்கின்றனர்.

சமயரீதியாக சைவர்கள், இஸ்லாமியர், பௌத்தர்கள், கிறித்தவர்கள் என வாழ்கின்றனர்.

நிர்வாகம்[தொகு]

பிரதேச செயலாளர் பிரிவுகள்[தொகு]

ஏனைய மாவட்டங்கள் போல் மாவட்ட செயலர் (அரச அதிபர்) அவர்களால் நிர்வகிக்கப்படும். மேலும், முல்லைத்தீவு மாவட்டம் 6 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு பிரதேச செயலர்களால் (உதவி அரச அதிபர்) துணை நிர்வாகம் செய்யப்படுகிறது.[4] இந்த ஆறு பிரதேசங்களும் மேலும் 136 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கிராம அலுவலர்களால் நிருவகிக்கப்படுகின்றன.[4]

 1. கரைதுறைப்பற்று
 2. மணலாறு (வெலி ஓயா)
 3. ஒட்டுசுட்டான்
 4. புதுக்குடியிருப்பு
 5. மாந்தை கிழக்கு
 6. துணுக்காய்
பிசெ பிரிவு முக்கிய நகரம் பிரதேச செயலர் கிசே
பிரிவுகள்
[4]
பரப்பளவு
(கிமீ2)
[4][5]
மக்கள்தொகை (2012)[6] மக்கள்தொகை
அடர்த்தி
(/கிமீ2)
இலங்கைத்
தமிழர்
சிங்களவர் இந்தியத்
தமிழர்
சோனகர் ஏனையோர் மொத்தம்
மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் ரி. பிருந்தாகரன் 15 490 6,277 10 634 8 0 6,929
கரைதுறைப்பற்று முல்லைத்தீவு பி. குகநாதன் 46 789 25,976 1,071 150 1,678 34 28,909
ஒட்டுசுட்டான் ஒட்டுசுட்டான் ரி. திரேஷ்குமார் 27 14,158 626 792 51 31 15,658
புதுக்குடியிருப்பு புதுக்குடியிருப்பு ஐ. பிரதாபன் 19 1,009 23,480 50 215 19 6 23,770
துணுக்காய் துணுக்காய் இ.பிரதாபன் 20 329 9,180 157 391 2 2 9,732
மணலாறு
(வெலி ஓயா)
? 9 10 6,937 0 2 0 6,949
மொத்தம் 136 2,617 79,081 8,851 2,182 1,760 73 91,947 35

பிரதேச சபைகள்[தொகு]

உள்ளூராட்சி நிர்வாக அலகுகளான நகரசபை, பட்டின சபை ஆகியவை முல்லைத்தீவில் இல்லை. இவற்றிற்கு அடுத்த நிலையில் உள்ள பிரதேச சபைகள் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் உள்ளன. பிரதேச சபைகள் அரசியல் கட்சி சார்ந்த தலைவராலும், அரச பிரதிநிதியான செயலாளராலும் நிர்வகிக்கப்படும். தற்போதய நிலையில், உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறாததால் செயலாளர் மட்டுமே நிர்வகிக்கின்றார்.

கல்வி[தொகு]

முல்லைத்தீவு மாவட்டம் கல்வி நிர்வாகத்திற்காக துணுக்காய், முல்லைத்தீவு என 2 கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவை ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுக்கென 5 கல்விக்கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

அரச புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கையின்படி இங்கு 104 அரச பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 1AB தரத்தில் 6 பாடசாலைகளும், 1C தரத்தில் 12 பாடசாலைகளும், வகை 2 இல் 39 உம், வகை 3 இல் 47 உம் என அவை உள்ளன. இவற்றுள், தேசியபாடசாலை தரத்தில் முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி தரமுயர்த்தப்பட்டுள்ளது.

வழிபாட்டிடங்கள்[தொகு]

முல்லைத்தீவு மாவட்டத்தில் 209 பதிவு பெற்ற இந்துக்கோயில்கள் உள்ளன.[7][8] அவற்றுள் சில:

 • ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம்
 • வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில்
 • முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்
 • தீர்த்தக்கரை அம்மாளாச்சி ஆலயம்
 • புதுக்குடியிருப்பு கந்த சுவாமி ஆலயம்
 • புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் ஆலயம்
 • புதுக்குடியிருப்பு புதுநகர் சிவன் ஆலயம்
 • ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம்
 • குமாரபுரம் சித்திர வேலாயுதர் ஆலயம்
 • அம்பகாமம் அம்மன் ஆலயம்
 • முத்துஐயன்கட்டு குளக்கட்டு பிள்ளையார் ஆலயம்
 • தட்டையன்மலை தான்தோன்றி நாகாதம்பிரான் ஆலயம்
 • கெருடமடு பிள்ளையார் ஆலயம்
 • மம்மில் பிள்ளையார் ஆலயம்
 • கற்சிலைமடு சம்மளந்துளாய் விநாயகர் ஆலயம்
 • பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம்
 • வட்டுவாகல் பிள்ளையார் ஆலயம்
 • வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயம்
 • செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
 • சிலாவத்தை காயாமோட்டை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
 • கொக்குத்தொடுவாய் பனிச்சையடி முருகன் ஆலயம்
 • முள்ளியவளை வேம்படி நாகபூசணி அம்மன் ஆலயம்
 • முள்ளியவளை மாமூலை மகாவிஷ்ணு ஆலயம்
 • முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயம்
 • குமுழமுனை கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயம்
 • முள்ளியவளை கணுக்கேணி கற்பக விநாயகர் ஆலயம்
 • வற்றாப்பளை ஞானமூர்த்திப் பிள்ளையார் ஆலயம்
 • குமுழமுனை ஆதி நாகதம்பிரான் ஆலயம்
 • குமுழமுனை குன்றின் மேல் குமரன் ஆலயம்
 • குமுழமுனை கற்பக விநாயகர் ஆலயம்
 • வன்னிவிளாங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயம்
 • புதுக்குடியிருப்பு கோம்பாவில் காட்டாமணக்கு பிள்ளையார் கோவில்
 • முள்ளிவாய்க்கால் ஸ்ரீ குமாரகணபதிப் பிள்ளையார் ஆலயம்
 • விசுவமடு மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
 • விசுவமடு அதிசய விநாயகர் ஆலயம்[9][10]
 • விசுவமடு தொட்டியடி சித்தி விநாயகர் ஆலயம்
 • பனங்காமம் சிவன் கோவில்
 • புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கை அம்மன் ஆலயம்
 • கல்லிருப்பு கண்ணகை அம்மன் ஆலயம்
 • நட்டாங்கண்டல் முத்துமாரி அம்மன் ஆலயம்[11]
 • ஒட்டுசுட்டான் பெரிய இத்திமடு நாகதம்பிரான் ஆலயம்
 • புதுமாத்தளன் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்
 • வள்ளிபுனம் ஸ்ரீ பொன்னம்பல ஞானவேலாயுத சுவாமி ஆலயம்
 • விசுவமடு வள்ளுவர்புரம் முத்துமாரி அம்மன் கோவில்
 • முள்ளிவாய்க்கால் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்
 • வெள்ளா முள்ளிவாய்க்கால் ஶ்ரீ குருந்தடி சிலிங்க விநாயகர் ஆலயம்
 • உண்ணாப்பிலவு வேல்முருகன் ஆலயம்
 • வேணாவில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
 • பனிக்கன்குளம் ஞானவைரவர் ஆலயம்
 • பனிக்கன்குளம் சித்திவிநாயகர் ஆலயம்
 • சுதந்திரபுரம் சித்தி விநாயகர் ஆலயம்
 • உடையார்கட்டு குரவில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
 • உடையார்கட்டு வடக்கு ஆலடிப் பிள்ளையார் ஆலயம்
 • மல்லாவி புகழேந்திநகர் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலயம்
 • கருநாட்டுக்கேணி கற்பக விநாயகர் ஆலயம்
 • கள்ளப்பாடு ஆதிவைரவர் ஆலயம்
 • அளம்பில் முருகன் ஆலயம்
 • கொக்குத்தொடுவாய் முத்துமாரி அம்மன் கோவில்
 • கருவேலங்கண்டல் விநாயகர் ஆலயம்[12]

சுற்றுலா[தொகு]

 • முல்லைத்தீவு நகர் கடற்கரை
 • வட்டுவாகல் பாலம்
 • செம்மலை கடற்கரை
 • முறிகண்டி காச்சன் சந்தை

மேற்கோள்கள்[தொகு]

 1. "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.
 2. 2.0 2.1 "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2017-04-28. பார்க்கப்பட்ட நாள் 2014-01-03.
 3. "A3 : Population by religion according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka.
 4. 4.0 4.1 4.2 4.3 "Statistical Information 2012". வட மாகாண சபை.
 5. "Land area by province, district and divisional secretariat division" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.
 6. "A6 : Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2016-11-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.
 7. "Salt on Old Wounds: The Systematic Sinhalization of Sri Lanka’s North, East and Hill Country (2012) - Annex III (Destruction of Hindu Temples)". https://sivasinnapodi.files.wordpress.com/2012/03/86040164-salt-on-old-wounds-the-systematic-sinhalization-of-sri-lanka_s-north-east-and-hill-country.pdf. 
 8. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
 9. "SLA intensifies artillery attacks on civilian targets, hospital targeted". TamilNet. January 16, 2009. https://tamilnet.com/art.html?catid=13&artid=27999. 
 10. "Humanitarian tragedy in Vanni enters deadlier phase". TamilNet. January 13, 2009. https://tamilnet.com/art.html?catid=13&artid=28034. 
 11. "ஈழநாதம்-2003.07.03.pdf". https://tamileelamarchive.com/article_pdf/article_8a95150012ad2ebe80718f0ced5003a1.pdf. 
 12. "Ittik-kaṇṭal, Karuvēlaṅ-kaṇṭal, Kaṇṭal-kāṭu, Kaṇṭal-kuṭā". TamilNet. September 16, 2007. https://tamilnet.com/art.html?catid=13&artid=23281. இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லைத்தீவு_மாவட்டம்&oldid=3998327" இலிருந்து மீள்விக்கப்பட்டது