கிழக்கு மாகாணம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிழக்கு மாகாணம்
Eastern Province
නැගෙනහිර පළාත
மாகாணம்
Flag of கிழக்கு மாகாணம்
Flag
இலங்கையில் அமைவிடம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 07°55′N 81°30′E / 7.917°N 81.500°E / 7.917; 81.500ஆள்கூற்று : 07°55′N 81°30′E / 7.917°N 81.500°E / 7.917; 81.500
நாடு  இலங்கை
அமைப்பு 1 அக்டோபர் 1833
மாகாணம் 14 நவம்பர் 1987
Seat திருக்கோணமலை
முன்னாள் தொகுதி திருகோணமலை
Boroughs
Government
 • ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ
 • முதலமைச்சர் அகமது நசீர் செய்னுலாப்தீன்
பரப்பளவு[1]
 • மொத்தம் 9
 • Land 9
 • Water 635  6.35%
Area rank 2வது (15.24%)
மக்கள்தொகை (2007)[2][3][4]
 • மொத்தம் 1
 • தரவரிசை 6வது (6.7%)
 • அடர்த்தி 150
இனம்
 • ஏனையோர் 4,849 (0.33%)
சமயம்
 • ஏனையோர் 8,367 (0.86%)
நேர வலயம் Sri Lanka (ஒசநே+05:30)
அஞ்சல் குறியீடு 30000-32999
தொலைபேசிக் குறியீடு 026, 063, 065, 067
ISO 3166 code LK-5
வாகனப் பதிவு EP
அதிகாரபூர்வ மொழிகள் தமிழ், சிங்களம்
இணையத்தளம் Eastern Provincial Council
பெரு வெள்ளத்தின் போது மட்டு வாவி

இலங்கையின் கிழக்கு மாகாணம் (Eastern province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் தலைநகர் மட்டுமாநகரம் ஆகும். இதுவே கிழக்கு மாகாணத்தின் பெரிய நகர் ‌ஆகும். தமிழீழத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இம் மாகாணமானது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. வடக்கே, வட மாகாண எல்லையிலிருந்து, தெற்கே, தென் மாகாண எல்லைவரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது.

இலங்கை பிரித்தானியரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசுசார்புக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த கீழ் மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு 2006 அக்டோபர் 16 ஆம் நாள் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.

இந்த மாகாணம் தொடர்பில் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணமே விளங்குவதாலும், மாகாணத்தின் சனத்தொகையில் அண்ணளவாக 30% முஸ்லிம்களாக இருப்பதாலும் தீர்வு விடயத்தில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது.

புவியியல்[தொகு]

கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட 9.996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1] இது வடக்கே வட மாகாணம், கிழக்கே வங்காள விரிகுடா, தெற்கே தென் மாகாணம், மற்றும் மேற்கே ஊவா மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

இம்மாகாணத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் கடற் காயல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் மட்டக்களப்பு வாவி, கொக்கிளாய் வாவி, உப்பாறு, உல்லைக்கழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நிருவாக அலகுகள்[தொகு]

கிழக்கு மாகாணம் 3 மாவட்டங்களாகவும், 45 பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகவும், 1,085 கிராமசேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரம்
மாவட்டம் பி.செ பிரிவுகள் கி.சே
பிரிவுகள்
பரப்பளவு[1]
(கிமீ2)
மக்கள்தொகை[2][3][4]
மொத்தம்
(2007 அண்.)
அடர்த்தி
(/கிமீ2)
அம்பாறை 20 507 4,415 610,719 138.33
மட்டக்களப்பு 14 348 2,854 515,857 180.75
திருகோணமலை 11 230 2,727 334,363 122.61
மொத்தம் 45 1,085 9,996 1,460,939 146.15

முக்கிய நகரங்கள்[தொகு]

நிலை நகரம் மாவட்டம் மக்கள்தொகை
(2012 அண்.)[6]
1 கல்முனை அம்பாறை மாவட்டம் 106,783
2 திருக்கோணமலை திருகோணமலை மாவட்டம் 99,135
3 மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டம் 92,332
4 காத்தான்குடி மட்டக்களப்பு மாவட்டம் 40,883
5 ஏறாவூர் மட்டக்களப்பு மாவட்டம் 25,582
6 வாழைச்சேனை மட்டக்களப்பு மாவட்டம் 21,209
7 அம்பாறை அம்பாறை மாவட்டம் 20,309
8 செங்கலடி மட்டக்களப்பு மாவட்டம் 19,604

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Department of Census & Statistics Statistical Abstract 2007 (Area & Climate)
  2. 2.0 2.1 2.2 Department of Census & Statistics Special Enumeration 2007, Ampara
  3. 3.0 3.1 3.2 Department of Census & Statistics Special Enumeration 2007, Batticaloa
  4. 4.0 4.1 4.2 Department of Census & Statistics Special Enumeration 2007, Trincomalee
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; religion என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. "Sri Lanka: largest cities and towns and statistics of their population". World Gazetteer. மூல முகவரியிலிருந்து 2012-06-19 அன்று பரணிடப்பட்டது.


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை