மட்டக்களப்பு வாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மட்டக்களப்பு வாவி
அமைவிடம்மட்டக்களப்பு மாவட்டம், இலங்கை
ஆள்கூறுகள்7°34′N 81°41′E / 7.567°N 81.683°E / 7.567; 81.683ஆள்கூறுகள்: 7°34′N 81°41′E / 7.567°N 81.683°E / 7.567; 81.683
வகைவாவி
முதன்மை வெளிப்போக்குஇந்து சமுத்திரம்
Surface area141.18 சதுர கி.மி (54.51 சதுர மைல்)
அதிகபட்ச ஆழம்4 மீட்டர் (13 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்கடல் மட்டம்
Islandsபுளியந்தீவு, எருமைத்தீவு, மாந்தீவு, எலும்புத்தீவு, சல்லித்தீவு, பெரிய தீவு, சிறிய தீவு, சிறு தீவு
Settlementsமட்டக்களப்பு

மட்டக்களப்பு வாவி (Batticaloa lagoon) இலங்கையின் மட்டக்களப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள வாவியாகும். மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமான இவ்வாவி ஏறத்தாழ 27,527 ஏக்கர் பரப்பினைக் கொண்டது. இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உவர்நீரையும் ஏனைய பகுதிகளில் நன்னீரையும் கொண்டுள்ளது. உப்புநீர்ப் பகுதியில் மீன்பிடித்தலும் நன்னீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நடைபெறுவதால் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு இன்றியமையாததாக உள்ளது. மட்டக்களப்பு வாவியின் கிழக்குப் பகுதிகள் சூரியன் எழுவதால் எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் படுவதால் (மறைவதால்) படுவான்கரை என்றும் அழைக்கப்படுகின்றன.

இதனையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டக்களப்பு_வாவி&oldid=3350942" இருந்து மீள்விக்கப்பட்டது