படுவான்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

படுவான்கரை பிரதேசமானது மட்டக்களப்பு வாவிக்கு மேற்குத்திசையில் அமைந்துள்ள நிலப்பரப்பாகும்.

அமைவிடம்[தொகு]

மட்டக்களப்பு வாவியானது மட்டக்களப்பு மாவட்டத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளதுடன் அது மட்டக்களப்பு பிரதேசத்தினை இரு பிரிவுகளாக பிரிக்கின்றது. வாவியின் மேற்குப் பகுதியிலிள்ள நிலப்பரப்பே படுவான்கரை பிரதேசம் என அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதியில் சூரியன் படுவதால் (மறைவதால்) படுவான்கரை என்று அழைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

வாழ்வாதாரம்[தொகு]

படுவான்கரைப் பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினைக் கொண்ட பகுதியாகும். அதனால் இப்பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் அதிகமாக விவசாயத்தினையே தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இங்கு அதிகமாக நெல் பயிரிடப்படுகிறது. மேலும் நிலக்கடலை, சோளம், பயறு போன்ற தானியங்களும், பல மரக்கறி வகைகளும் இப்பிரதேசத்தில் பயிரிடப்படுகின்றன.

மந்தை வழர்ப்பும் இப்பிரதேசத்தில் காணப்படும் சிறப்பம்சமாகும். இங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவான காணிகள் இலங்கை அரசினால் மேய்ச்சல் நிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, மந்தை வழர்ப்பிற்கு அரச அங்கீகாரமளிக்கப் பட்டுள்ளது.

படுவான்கரை பிரதேசம் வாவியினால் எல்லையிடப் பட்டுள்ளதுடன், பல ஆறுகளும் ஏரிகளும் படுவான்கரை பிரதேசத்தினூடாக வந்து வாவியில் கலப்பதால் விவசாயத்திற்கு அடுத்ததாக இங்கு மீன்பிடித்தல் கைத்தொழில் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருவாய் ஈட்டுவதில் படுவான்கரை பிரதேசத்தின் பங்கும் பெரியது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படுவான்கரை&oldid=2425239" இருந்து மீள்விக்கப்பட்டது