எழுவான்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எழுவான்கரை பிரதேசமானது மட்டக்களப்பு வாவிக்கு கிழக்குத்திசையில் அமைந்துள்ள நிலப்பரப்பாகும்.

அமைவிடம்[தொகு]

மட்டக்களப்பு வாவியானது மட்டக்களப்பு மாவட்டத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளதுடன் அது மட்டக்களப்பு பிரதேசத்தினை இரு பிரிவுகளாக பிரிக்கின்றது. வாவியின் கிழக்கிப் பகுதியிலுள்ள நிலப்பரப்பே எழுவான்கரை பிரதேசம் என அழைக்கப்படுகிறது. கிழக்குப் பகுதியில் சூரியன் உதிப்பதால் (எழுவதால்) எழுவான்கரை என்று அழைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் எழுவான்கரையினுள் அடங்கும். இப்பிரதேசதின் கிழக்கே கடலும், மேற்கே வாவியும் காணப்படுவதால், இயற்கை எழில் நிறைந்த பகுதியாகும்.

வாழ்வாதாரம்[தொகு]

எழுவான்கரை பிரதேசத்தின் அமைவிடம் காரணமாக இங்கு மீன்பிடித்தல் கைத்தொழில் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் மேட்டுநிலப் பயிர்களும் இங்கு பயிரிடப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுவான்கரை&oldid=2061413" இருந்து மீள்விக்கப்பட்டது