உள்ளடக்கத்துக்குச் செல்

எலும்புத்தீவு

ஆள்கூறுகள்: 7°45′12″N 81°41′24″W / 7.75333°N 81.69000°W / 7.75333; -81.69000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலும்புத்தீவு
Bone Island
என்புத்தீவு
தீவு
எலும்புத்தீவு
நாடு  இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம்
பகுதி மட்டக்களப்பு வாவி
ஆள்கூறு 7°45′12″N 81°41′24″W / 7.75333°N 81.69000°W / 7.75333; -81.69000
அருகிலுள்ள நகர் மட்டக்களப்பு

எலும்புத்தீவு அல்லது போன் தீவு (ஆங்கில மொழி: Bone Island) என்பது மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள பல தீவுகளில் ஒன்றாகும். மிகச் சிறிய தீவான இது மட்டக்களப்பு வாவி கடலில் கலக்கும் முகத்துவாரத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.[1][2] உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் இது உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை சிறிது கவரும் இடமாக உள்ளது. படகு மூலம் இதை சுற்றிப்பார்க்க சிறு தொகை அறவிடப்படுகிறது. மீனவர்கள் இதனை தற்காலிகமாக பாவிப்பதும் உண்டு.

உதவி அரசாங்க அதிபர் ஜே. ஏ. போன் (1833 - 1837),[3] இத்தீவில் ஒர் சிறிய வளமனையைக் கட்டியிருந்தார்.[4] அவருடைய பெயரை நேரடியாக என்புத் தீவு (எலும்புத்தீவு) என மொழிபெயர்த்ததால், பின்னர் இப்பெயரே நிலைத்துவிட்டது.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Batticaloa - Geography". Archived from the original on 2014-03-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-04.
  2. Bone Island, in North Eastern, Sri Lanka
  3. "List of Former Government Agent". Ministry of Public Administration & Home Affairs (Sri Lanka). Archived from the original on 20 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
  4. "Our Vision". Ministry of Public Administration & Home Affairs (Sri Lanka). Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்புத்தீவு&oldid=4123360" இலிருந்து மீள்விக்கப்பட்டது