கடற்காயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கடற் காயல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காயல் இங்கு வழிமாற்றப்படுகிறது. காயல் என்ற நகர் பற்றி அறிய காயல்பட்டினம் கட்டுரையைப் பார்க்க.
துருக்மெனிசுதானில் உள்ள ஓர் கடற்காயல்.

கடற்காயல் அல்லது வாவி அல்லது களப்பு (lagoon) எனப்படுவது காயல்[1] அல்லது உப்பங்கழி [2] எனப்படும் கடல் சார்ந்த ஏரி ஆகும்.

கடலிலிருந்து சிலவகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள உவர் நீர்ப் பரப்பு ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பிட வழிகாட்டல் இதனை "கடலிலிருந்து முழுமையாகவோ பகுதியாகவோ மணல்திட்டுக்கள், பெருவெட்டுக் கூழாங்கல் அல்லது மிகக்குறைவாக கற்களால் பிரிக்கப்பட்டுள்ள , பல்வேறு அளவுகளில் நீர் கொள்ளளவு மற்றும் உப்புத்தன்மை கொண்ட, தாழ்ந்த கடற்கரை உப்புநீர் பரப்பு. இந்தப் பரப்பில் உள்ள உப்புத்தன்மை மழை, ஆவியாதல், வெள்ளநீர் வரத்து, கடலலை ஏற்றிறக்கத்தால் அல்லது குளிர்காலங்களில் கடல்நீர் ஏற்றம் போன்றவைகளால் வேறுபடும்" என வரையறுத்துள்ளது.

படிமங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Reid, George K. (1961). Ecology of Inland Waters and Estuaries. New York: Van Nostrand Reinhold Company. 
  • Aronson, R.B. (1993). "Hurricane effects on backreef echinoderms of the Caribbean". Coral Reefs. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்காயல்&oldid=2186021" இருந்து மீள்விக்கப்பட்டது