மன்னார் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்னார் மாவட்டம்
மன்னார் மாவட்டம்
மன்னார் மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் வட மாகாணம்
தலைநகரம் மன்னார்
மக்கள்தொகை(2001) 151,577*
பரப்பளவு (நீர் %) 1279 (6%)
மக்களடர்த்தி 81 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 0
பிரதேச சபைகள் 4
பாராளுமன்ற தொகுதிகள் 1
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
5
வார்டுகள் 0
கிராம சேவையாளர் பிரிவுகள்
* கணிக்கப்பட்டவை

மன்னார் மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கைத் தீவின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டமும், வடகிழக்கே முல்லைத்தீவு மாவட்டமும் கிழக்கே வவுனியா மாவட்டமும், தென்கிழக்கே அனுராதபுர மாவட்டமும், தெற்கே புத்தளம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கே மன்னார் குடாக்கடல் எல்லையாக அமைந்துள்ளது.

இதன் தலைநகரம் மன்னார் நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 5 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்[தொகு]

கி.பி. 1650 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் படையெடுத்து வரும் வரை மன்னார் பிரதேசம் சகல வளங்களும் பொருந்தியதாக யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியதாக வரலாறு கூறுகின்றது.

கிமு 5ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜயன் உட்பட எழுநூறு பேர் இலங்கையில் கரையொதுங்கியதாக மகாவம்சம் கூறுகிறது. விஜயனுடன் ஒதுங்கிய எழுநூறு பேரில் உபதிஸ்ஸன் என்ற பிராமணனொருவன் இருந்ததாகவும் அவன் மன்னாரில் திருக்கேதீஸ்வரத்திற்கு சென்று வழிபட்டதாக மகாவசம்சத்தில் பதியப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் பழம் பெருமைக்குச் சான்றாக மாதோட்டத் துறைமுகம் கொள்ளப்படுகின்றது. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய காலத்திலேயே இந்தியா உட்பட பிறநாட்டு வணிகர்கள் வந்து சென்ற துறைமுகமாக விளங்கிய பெருமை மாதோட்டத்திற்கு உள்ளது. மன்னார் என்பதன் இயற்பெயர் மண்ணாறு ஆகும், பழங்காலத்தில் மன்னாரில் ஓடும் அருவி ஆறு மண்ணாறு எனவும் கதம்ப நதி எனவும் அழைக்கப்பட்டது.

சைவாலயங்கள்[தொகு]

 • திருக்கேதீஸ்வரம்
 • பாலம்பிட்டி முத்துமாரியம்மன் கோயில்
 • தலைமன்னார் முத்துமாரியம்மன் கோயில்
 • மன்னார் சித்தி விநாயகர் கோயில்
 • சிலாவத்துறை அம்மன் கோயில்
 • சின்னக்கரிசல் பிள்ளையார் கோயில்
 • வட்டக் கண்டல் சித்தி விநாயகர் கோயில்
 • இலுப்பைக்கடவை முத்துமாரியம்பாள் கோயில்
 • இலுப்பைக்கடவை சித்தி விநாயகர் கோயில்
 • இலுப்பைக்கடவை முனீஸ்வரர் கோயில்
 • கள்ளியடி கற்பகவிநாயகர் ஆலயம்

இவற்றை விட தலைமன்னார், மன்னார், நானாட்டான், உப்புக்குளம் திருவானைக் கூடம், பாலம்பிட்டி, பேசாலை, சின்னக்கரிசல் சிறுநாவற்குளம், பறப்பாங்கண்டல், முள்ளிப்பள்ளம், எழுந்தூர், ஆலடி, கீரி, மாந்தை, உயிலங்குளம், தாராபுரம், வண்ணாமோட்டை, சின்னப் பண்டிவிரிச்சான், பூம்புகார், முள்ளிக்குளம், பெரிய பண்டிவிரிச்சான், இரணை இலுப்பைக் குளம், தட்சணா மருதமடு, ஆவரங்குளம், கல்மடு, முருங்கன், செம்மண்தீவு, கட்டுக்கரை, கட்டையடம்பன், விடத்தல் தீவு, ஆத்திமோட்டை, சீது விநாயகர் குளம் உட்பட பல இடங்களில் இந்துக் கோயில்கள் அமைந்துள்ளன.

கிறிஸ்வத ஆலயங்கள்[தொகு]

 • மடு மாதா தேவாலயம்
 • தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயம்
 • வங்காலை புனித ஆனாள் தேவாலயம்
 • பள்ளிமுனை புனித லூசியா தேவாலயம்
 • மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயம்
 • மன்னார் மரியன்னை தேவாலயம்
 • பேசாலை வெற்றிநாயகி ஆலயம்
 • புனித அந்தோனியார் ஆலயம் கறுக்காக்குளம்
 • பறப்பான்கண்டல் கத்தர்கோவில்
 • மாந்தை லூர்து மாதா கெவி
 • தள்ளாடி புனித அந்தோனியார் தேவாலயம்
 • பெரியகட்டு புனித அந்தோனியார் தேவாலயம்
 • தோட்டவெளி வேதசாட்சிகள் தேவாலயம்
 • எழுத்தூர் அடைக்கலமாதா தேவாலயம்
 • விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயம்
 • என் இரட்சகா் ஆலயம் சாவட்கட்டு

இசுலாமியப் பள்ளிவாயல்கள்[தொகு]

மன்னாரிலுள்ள பாடசாலைகள்[தொகு]

 • மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை
 • மன்னார் சேவியர் பெண்கள் பாடசாலை
 • மன்னார் புனித ஆன் மத்திய மகா வித்தியாலயம், வங்காலை
 • வங்காலை மத்திய மகா வித்தியாலயம்
 • இலுப்பைக்கடவை அ.த.க .பாடசாலை
 • கள்ளியடி அ.த.க .பாடசாலை
 • இலந்தைமோட்டை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை
 • புதுக்குடியிருப்பு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை
 • மன்னார் முசலி தேசிய பாடசாலை.
 • மன்னார் பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலயம்.
 • மன்னார் சிலாபத்துரை முஸ்லிம் மகா வித்தியாலயம்.

வெளி இணைப்புகள்[தொகு]


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்_மாவட்டம்&oldid=3480809" இருந்து மீள்விக்கப்பட்டது