உள்ளடக்கத்துக்குச் செல்

புனித அந்தோனியார் ஆலயம் கறுக்காக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனித அந்தோனியார் ஆலயம் இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் கறுக்காக்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். பல ஆண்டுகள் பழமையான இத்தேவாலயம் கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. ஆனி மாதத்தில் இடம்பெறும் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பல மக்கள் கலந்து கொள்வர். ஈழப்போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயம் தொடர்ச்சியாக பலத்த எறிகணை வீச்சினால் பலத்த சேதத்துக்குள்ளாகியது. இதனால் அங்கு மக்கள் அனைவரும் வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். தற்போது இவ்வாலயம் மீண்டும் கட்டப்படு புதுப்பொலிவுடன் விளங்குகின்றது.