மன்னார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மன்னார்
ஒரு தோற்றம்.
மன்னார் நகரில் உள்ள பெருக்க மரம்
Gislanka locator.svg
Red pog.svg
மன்னார்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - மன்னார்
அமைவிடம் 8°58′21″N 79°53′39″E / 8.972627°N 79.894195°E / 8.972627; 79.894195
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 0-40 மீட்டர்

கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)
அரச அதிபர் திரு விஷ்வலிங்கம்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 41000
 - +023, 060223
 - NP
மன்னார் மாவட்டப் படம்
மன்னாரின் தோற்றம்

மன்னார் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமும், மன்னார் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் எல்லைகளாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஆகியன அமைந்துள்ளன.

சுற்றுலாப் பிரதேசங்கள்[தொகு]

மன்னார் நகரப் பகுதியில் நகரத்தில் உள்நுளைகையில் அல்லது வெளியேறும் இடத்தில் பாலத்திற்கு அருகில் மூர்வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் சித்திவிநாயகர் கல்லூரிக்கு சற்றே அப்பால் பெருக்க மரம் ஒன்றுள்ளது. இது பருமனில் பெருத்தவண்ணமுள்ளது. இதை அருகில் உள்ள தேவாலயம் ஒன்று பராமரித்து வருகின்றது. இதைவிடத் தேவரத்தில் இடம்பெற்ற திருக்கேதீஸ்வரம் யாத்திரீகள் வந்துபோகின்றனர். அங்கே யாத்திரீகர் மடங்கள் பல உள்ளன.

அதே போல் மன்னாரில் உள்ள மாடு ஆலயம் மிகப் பிரபனமான திருத்தலம் ஆகும். இங்கு இலங்கையில் உள்ள மக்கள் வருகை தந்து வழிபடுகின்றார்கள். அத்துடன் குஞ்சிகுலம் தொங்கு பாலமும் மக்கள் தமது பொழுதைக் கழிக்க செல்லும் இடமாகும்.

போக்குவரத்து[தொகு]

புகையிரத சேவை[தொகு]

தலை மன்னாரில் இருந்து மன்னார் மற்றும் மதவாச்சி வழியாக தொடருந்துப் போக்குவரத்து கொழும்பு வரை உள்ளது. ஆனாலும் மதவாச்சி வரையிலுமான பாதைகள் யாவும் போர் காரணமாகச் சேமடைந்துள்ளமையால் மன்னார் மாவட்டத்தில் புகையிரத சேவைகள் எதுவும் தற்போது இல்லை. அனால் மன்னார் மதவாச்சி புகையிரத பாதை திருத்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றது

பேருந்துச் சேவைகள்[தொகு]

கொழும்பிற்கு மன்னாரிலிருந்தும் வவுனியா ஊடாகவோ அல்லது நேரடியாக மதவாச்சியூடாகவோ பயணிக்கலாம்.

மன்னார் - (கொழும்பு)   மன்னாரிலிருந்து சிலாவத்துறை, மறிச்சிக்கட்டி,
எழுவன்குலம், புத்தளம்,சிலாபம், நீர்கொழும்பு, ஊடாக  கொழும்பை சென்றடையும்.
மன்னார் - (கல்பிட்டி)   மன்னாரிலிருந்து சிலாவத்துறை, மறிச்சிக்கட்டி,
எழுவன்குலம், புத்தளம், பாலாவி, நுறைச்சோளை,  ஊடாக
கல்பிட்டியை சென்றடையும்.
மறிச்சிக்கட்டியில் இருந்து பாலைகுளி,
ஊடாக சென்று வில்பத்து வழியாக சென்று அநுராதபுர மாவட்டத்தின் வெள்ளச்சி கிராத்தை சென்டடைய முடியும்.

மன்னாரிலுள்ள பாடசாலைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்&oldid=1832499" இருந்து மீள்விக்கப்பட்டது