கிளிநொச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளிநொச்சி

கிளிநொச்சி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - கிளிநொச்சி
அமைவிடம் 9°23′30″N 80°24′34″E / 9.391762°N 80.409569°E / 9.391762; 80.409569
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 0-50 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(1981)
127,300
மாவட்டச் செயலர் திரு. அருமைநாயகம்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - கொடுக்கப்படவில்லை
 - +கொடுக்கப்படவில்லை; தற்போது (021-228)பாவிக்கப்படுகின்றது.
 - NP

கிளிநொச்சி (Kilinochchi)[1] இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 68 கிலோமீட்டர் தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இது வட மாகாண சபையின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. 2002 தொடக்கம் 2009ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகத் தலைநகரமாக காணப்பட்டது.[2]

இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் இரணைமடு அக்கராயன், புதுமுறிப்பு, வன்னேரி, பிரமந்தனாறு, கல்மடு, புதுஐயன், கரியாலை நாகபடுவான், கனகாம்பிகை ஆகிய குளங்களில் இருந்து பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் கட்டையிலும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகளிற்காக வட மாகாண விவசாய திணைக்களம் அரச அதிபர் விடுதிக்கு அண்மையிலும் மண்வள ஆராய்ச்சி நிலையம் இரணைமடுச் சந்தியிலும் அமைந்துள்ளன. பல்கலைக்கழக விவசாய பீடமும் பொறியியற் பீடங்களும் இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியத் தலைமையகமும் அறிவியல் நகர்ப்பகுதியில் அமைந்திருக்கின்றன. வட்டக்கச்சியில் இயங்கிய விவசாயப் பயிற்சிக் கல்லூரி தற்போது மூடப்பட்டுள்ளது. விதை நெல் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிலையம் கரடிப்போக்கில் இயங்குகின்றது.

கிளிநொச்சியிலுள்ள குளங்கள்[தொகு]

கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகள்[தொகு]

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் பாரதிபுரம் மகா வித்தியாலயம் கனகபுரம் மகா வித்தியாலயம் புனித தெரேசா பெண்கள் பாடசாலை முருகானந்த மத்திய கல்லூரி பளை மத்திய கல்லூரி முழங்காவில் மத்திய கல்லூரி

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kilinochchi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிநொச்சி&oldid=3892900" இலிருந்து மீள்விக்கப்பட்டது