இரணைமடுக்குளம்
இரணைமடு குளம் | |
---|---|
இரணைமடுக் குளத்திலிருந்தது மேலதிக நீர் வான் கதவுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது | |
Location within வட மாகாணம் | |
அமைவிடம் | வட மாகாணம் |
ஆள்கூறுகள் | 09°18′50″N 80°26′50″E / 9.31389°N 80.44722°E |
வகை | Reservoir |
ஆற்று மூலங்கள் | கனகராயன் ஆறு |
வடிநிலப் பரப்பு | 227 sq mi (588 km2) |
மேலாண்மை முகமை | Department of Irrigation, வட மாகாண சபை |
கட்டியது | 1921 |
அதிகபட்ச நீளம் | 6 mi (10 km) |
அதிகபட்ச அகலம் | 1 mi (2 km) |
அதிகபட்ச ஆழம் | 34 அடி (10 m) |
நீர்க் கனவளவு | 106,500 acre⋅ft (131,365,816 m3) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 101 அடி (31 m) |
இரணைமடுக்குளம் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம் ஆகும். இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடுப் படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன.
வரலாறு
[தொகு]ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா-பிரித்தானிய அதிகாரியான சேர் ஹென்றி பாட் 1885 இல் அப்போதைய பிரித்தானிய அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார். 1866 இல் பிரித்தானிய நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் என்பவர் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கான திட்டத்தை வரைந்தார். அவரின் திட்டத்தில் இரணைமடுவின்கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1900 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன பிரித்தானியப் பொறியிலாளர் று. பிரவுன் வரும்வரை இரணைமடு கட்டுமானம் வரைவு மட்டத்திலேயே இருந்தது. பொறியிலாளர் பிரவுன் அப்போதிருந்த கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு என்பவரைச் சந்தித்து இரணைமடு படுகை காட்டை முழுமையாக ஆராய்ந்தார்.
இரணைமடு கட்டுமானத்தை மேற்கொள்ள பெரும் மனிதவலு வேண்டும் என்பதற்காக ஒரு குடியிருப்பை நிறுவும் முயற்சியில் முதலில் பிரவுன் ஈடுபட்டார். இவர் தற்போதுள்ள கிளிநொச்சி நகரிலுள்ள 'ரை' ஆறு குளம் என்ற தேக்கத்தை உருவாக்கி அதன் கீழ் மக்கள் குடியிருப்பை உருவாக்கினார். இந்த 'ரை' ஆறு குடியிருப்பு குஞ்சுப்பரந்தன் மக்களைக் கொண்டே இரணைமடு கட்டுமானம் ஈழத்தமிழரின் முழுமையான வியர்வையால் கட்டப்படத் தொடங்கியது 1902 இல் ஆகும்.
1920 இல் 19 லட்சத்து 4 ஆயிரம் ரூபா செலவில் இரணைமடு முதல் கட்டமாக முழுமையாக்கப்பட்டது. அப்போது இரணைமடுவின் கொள்ளளவு 44 ஆயிரம் ஏக்கர் அடி, ஆழம் 22 அடி. 1954ல் இரண்டாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்பு நடைபெற்றது. அப்போது கொள்ளளவு 82 ஆயிரம் ஏக்கர் அடியாகும். இதன்மூலம் குளத்தின் நீர்மட்ட ஆழம் 30 அடியாக உயர்த்தப்பட்டது. 3 ஆம் கட்டமாக கொள்ளளவு அதிகரிப்பு 1975ல் நடைபெற்றது. 1977ல் முழுமையடைந்த அக்கொள்ளளவு அதிகரிப்பின்போது இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடியாக அதிகமானது. ஆழம் 34 அடியாகும்.
1977 இல் முடிவடைந்த இந்தப்பணிக்குப்பின் இரணைமடு முழுப் புனரமைப்புக்கு இதுவரை உட்படுத்தப்பட்டவில்லை. 1977ல் தான் இப்போதுள்ள வான் கதவுகள் கொண்ட தோற்றத்தை இரணைமடு பெற்றது. 227 சதுரமைல்கள் நீரேந்து பரப்புக்கொண்ட இரணைமடு கனகராயன் ஆறு, கரமாரி ஆறு என இரு ஆறுகளின் மூலம் நீரைப் பெறுகின்றது. 9 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. இதன் அணை 2 கிலோ மீற்றர் நீளமுடையது. இதன்மூலம் 20 882 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெற்றுள்ளது.
மொத்தம் 32.5 மைல்கள் நீள வாய்க்கால்கள் மூலம் இரணைமடு கிளிநொச்சியை வளப்படுத்துகின்றது. இரணைமடு மூலமே கிளிநொச்சியில் பெருமளவில் குடியேற்றங்கள் நடந்தன.
போர்க்காலத்தில்
[தொகு]இடதுகரை வலதுகரை என இரு வாய்க்கால்களைக் கொண்ட இரணைமடுவின் வலதுகரையில் ஊரியான்குளம் அதன் ஊட்டக்குளமாக உள்ளது. இடதுகரையில் ஊட்டக்குளமாக கிளிநொச்சிக்குளம் அல்லது ரை ஆறு குளம் உள்ளது. இதிலிருந்துதான் கிளிநொச்சி நகருக்கான குடிநீர் வழங்கல் முன்னர் நடைபெற்றது. இதைவிட திருவையாறு என்ற மேட்டுநீர் பாசன குடியிருப்பு பயிர்செய் நிலங்களுக்கான ஏற்றுப்பாசன பம்பி இடது கரையில் இருக்கின்றது.
1980கள் முதல் 2009 வரை இடம்பெற்ற போர்ச் சூழ்நிலை கிளிநொச்சி மக்களின் இடம்பெயர்வுக்குக் காரணமானது. யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இருந்து மக்கள் கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் இரணைமடுக் குளத்தின் சிதைவடைந்தன. இருக்கும் வளங்களைக் கொண்டே இயலுமான பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. 1990 அளவில் சிதைவடைந்த இந்நீர்த்தேக்கம் மீளவும் இயங்கவில்ல
உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- கிளிநொச்சி மண்ணை மேலும் வளமாக்க தயாராகிறது இரணைமடுக் குளம் பரணிடப்பட்டது 2010-10-27 at the வந்தவழி இயந்திரம், சாரதா மனோகரன், தினகரன், அக்டோபர் 23, 2010