உள்ளடக்கத்துக்குச் செல்

வட மாகாண விவசாய திணைக்களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு மாகாணசபையின் ஒரு திணைக்களமாகக் காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு மாகாண சபையிலுருந்து பிரிந்து 01.01.2007 ம் திகதி தொடக்கம் செயற்பட்டு வரும் வட மாகாண சபையின் விவசாய அமைச்சின் கீழ் இது காணப்படுகின்றது. இதன் செயற்படு பரப்பு வட மாகாண எல்லையாகும். இதன் தற்போதய பணிப்பாளராக திரு.கே.சுப்பிரமணியம் அவர்கள் வட மாகாண சபை உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் பணியாற்றிவருகின்றார்.

உப அலுவலகங்கள்

[தொகு]

இவ் திணைக்களமானது மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு உப அலுவலகத்தை கொண்டு காணப்படுகின்றது. இவ் உப அலுவலகங்கள் பிரதி விவசாயப் பணிப்பாளர்(விரி)அலுவலகம் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பொறுப்பாக பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் காணப்படுவார்கள். இவர்களினால் மாவட்டத்தின் விரிவாக்கச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இவ் உப அலுவலகங்களில் உதவி விவசாயப் பணிப்பாளர்கள், விவசாய உத்தியோகத்தர்கள், பாட விதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரயர்கள் மற்றும் நிர்வாகங்களினை மேற்கொள்ளும் இணைந்த சேவையினை கொண்ட உத்தியோகத்தர்ளும் தொழிலாளிகளும் காணப்படுகின்றனர்.

பிரதி விவசாயப் பணிப்பாளர்கள்

[தொகு]
  • யாழ்ப்பாணம் - திரு.எஸ்.சிவகுமார்.
  • கிளிநொச்சி - திருமதி.எஸ்.ஆனந்தராஜா.
  • முல்லைத்தீவு - திரு.கே.சிவபாதசுந்தரம்.
  • மன்னார் - திரு.எம்.ஜெகநாதன்.
  • வவுனியா - திருமதி.ஜெ.ஜெகநாதன்.

பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் காணப்படும் அலுவலகங்கள்

[தொகு]

வவுனியா
வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் இரண்டு தொழிற்பாட்டு அலுவலகங்கள் இயங்கின்றன.
01. அரச விதை உற்பத்திப் பண்ணை.(தாண்டிக்குளம்)
02. மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் (எல்லப்பர்மருதங்குளம்)
இவற்றுடன் மாவட்ட விரிவாக்க அலுவலகமும் இணைந்ததாக வவுனியா மாவட்ட விவசாய செயற்பாட்டை மேற்கொண்டுவருகின்றன.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் விவசாயப் பயிற்சி நிலையம்(ஆட்காட்டி வெளி) மாத்திரம் காணப்படுகின்றது. அத்துடன் விதை உற்பத்திப் பண்ணைக்காக வெள்ளாங்குளம் எனுமிடத்தில் பண்ணை ஆரம்பிக்கப்பட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி எனுமிடத்தில் விவசாயப் பயிற்சி நிலையத்துடன் இணைந்ததாக விவசாய விரிவாக்க நிலையம் காணப்படுகின்றது. அத்துடன் யாழ்ப்பாண விவசாயச் செயற்பாட்டுக்கு மிகவும் சிறப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டதில் விவசாயப் விரிவாக்க நிலையம் மாத்திரம் காணப்படுகின்றது.எனினும் ஏனைய கட்டமைப்புங்களும் உருவாக்க முயற்சிகள் இடம்பெறுகின்றது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயப் பயிற்சி நிலையம் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாய விரிவாக்க நிலையம் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்திருக்கின்றது,

செயற்பாடுகள்

[தொகு]

நிர்வாக ரீதியான செயற்பாடுகளை தலைமையலுவலகம் செயற்படுத்துவதுடன் உப அலுவலகங்களின் செயற்பாடுகளை நேரடியாகவும் நெறிப்படுத்துகின்றது. அத்துடன் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து வட மாகாண விவசாய செயற்பாட்டுக்கு பேருதவி புரிகின்றது.