முல்லைத்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முல்லைத்தீவு
ஒரு தோற்றம்.
ஊற்றங்கரை சித்திவிநாயகர் கோவில்
Gislanka locator.svg
Red pog.svg
முல்லைத்தீவு
மாகாணம்
 - மாவட்டம்

 - முல்லைத்தீவு
அமைவிடம் 9°16′13″N 80°48′49″E / 9.270308°N 80.813665°E / 9.270308; 80.813665
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 0-30 மீட்டர்

கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)
அரச அதிபர் திருமதி றூ. கேதீஸ்வரன்[1]
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 42000
 - +021
 - NP

முல்லைத்தீவு (Mullaittīvu) இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இதன் எல்லைகளாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகியன விளங்குகின்றன. இலங்கையில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாக இது உள்ளது. ஈழப்போரின்போது மிகுந்த சொத்தழிவுகளையும், உயிரிழப்புக்களையும் சந்தித்த மாவட்டமாக இது உள்ளது. தண்ணீரூற்றுப் பகுதியில் நிலத்தினூடாகத் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்வது காணுவதற்கரிய காட்சியாகும்.

காலநிலை மற்றும் பௌதீகத் தன்மைகளும்[தொகு]

காலநிலை[தொகு]

உலர்வலயம் - பருவகால மழைவீழ்ச்சி முறைமை வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1300 - 2416 வெப்பநிலை 23.00oC - 39.30oC ஆகும்.

பௌதீகத் தன்மை[தொகு]

முல்லைத்தீவு மாவட்டம் பொதுவாக தட்டையான நிலப்பரப்பினைக் கொண்டதாகும். நிலமானது பொதுவாக கிழக்கு வடக்காக சீராக சரிந்து செல்வதோடு மேற்குப்பகுதி மேற்கு மற்றும் தெற்காக நாய்ந்தும் செல்கின்றது. இந்த மாவட்டமானது 70கிலோமீற்றர் நீளமான கடற்கரையினை கொண்டுள்ளதோடு இறால் உற்பத்தியாகும் கொக்கிளாய், நாயாறு, ந்ந்திக்கடல் மற்றும் மாத்தளன் ஆகிய நான்கு கடல்நீரேரிகளையும் தன்னகத்தே கொண்டதாகும். இதன் நில உயரமானது கடல்மட்டத்திலிருந்து 36.5 மீற்றர் வரை வேறுபட்டுக்காணப்படுகின்றது. மண்ணின் தன்மையானது விவசாயத்திற்கு உகந்த செங்கபில மற்றும் செம்மஞ்சளாக இருபெரும் இருவாட்டி மணற்பிரிவுகாளாக அமைந்துள்ளது.

காணிப்பயன்பாடு[தொகு]

எமது மாவட்டத்தில் காட்டுநிலம், பற்றைக்காணிகள், தெங்குப்பயிர்நிலங்கள், விவசாயநிலங்கள், நீர்நிலைகள் போன்றவாறு மாவட்டத்தின் காணிப்பயன்பாடு 251,690 கெக்டேயர் பரப்பைக் கொண்ட பகுதி வித்தியாசமான பொருளாதார வளங்களை கொண்டுள்ளது. இவற்றில் காட்டுப்பகுதி 167,850 கெக்டேயரும் மாவட்டத்தில் 64.1 வீதம் கொண்டது. நீர்நிலைகளும் தரவைக்காணியும் 21,390 கெக்டேயரும் மாவட்டத்தில் 5.2 வீதம் கொண்டதும், விவசாய நிலமாக 44,040 கெக்டேயரும் மாவட்டத்தில் 5.1 வீதமும் ஆகும். மற்றும் மக்கள் வசிப்பிடங்களாக கொண்டுள்ளது.

மாவட்ட மக்களின் வாழ்க்கைமுறைகள்[தொகு]

இம்மாவட்டத்தின் பொருளாதாரம் பிரதானமாக விவசாயம், மீன்பிடி என்பவற்றில் தங்கியுள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பு, காடுவளர்ப்பு என்பனவும் பங்குவகிக்கின்றன. ஏறக்குறைய 4850 குடும்பங்களை சேர்ந்த 22,963 அங்கத்தவர்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயம்[தொகு]

இம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான வருமானத்தை ஈட்டித்தரும் வளமாக காணப்படுகின்றது. மொத்தமாக 80% விவசாயத்தில் தங்கியுள்ளனர். நெற்செய்கைக்கு சாதகமான 16,737 ஏக்கர் நிலத்தை இம் மாவட்டம் கொண்டுள்ளது. 3 பெரிய குளங்களும் 16 நடுத்தர அளவிலான குளங்களும் 7,109 ஏக்கர் பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுவதுடன் 220 சிறிய குளங்கள் 11,749 பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுகின்றன.

மீன்பிடி[தொகு]

மாவட்டத்தின் 70 கி.மீ நீளமான வளமான கடற்கரை படுக்கையும் நான்கு ஏரிகளான மாத்தளன், ந்ந்திக்கடல், நாயாறு, கொக்கிளாய் ஆகியவை மீன்பிடி அபிவிருத்திக்கு மிகவும் உகந்த்தாகவுள்ளன. இந்த ஏரிகள் இறால், நண்டு உற்பத்திக்கு பிரசித்திபெற்றவையாகும். பெரிய குளங்களில் நன்னீர் மீன்பிடியினை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான குடும்பங்களின் ஜீவனோபாய முயற்சியாக மீன்பிடித்தல் உள்ளதோடு அவர்களின் வாழ்வாதார முயற்சியினையும் வருமான வழிகளையும் பெருக்க இது பெரிதும் உதவும்.

மாவட்ட நீர்ப்பாசனத் தொகுதி[தொகு]

இம் மாவட்டம் விவசாய அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய நீர்வளங்களைக் கொண்டுள்ளது. நீர்ப்பாசன பயிர்ச்செய்கைக்கு கிளை பரப்பக்கூடிய நிலையாகப் பாய்கின்ற நதியெதுவும் காணப்படவில்லை. இம் மாவட்டத்தில் 03 பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் 16 நடுத்தர குளங்களும் 198 சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் காணப்படுகின்றன. மழைநீரே விவசாயத்திற்கான பிரதான நீர்வளமாகும்.

மக்கள் தொகை[தொகு]

முல்லைத்தீவு மாவட்டம்

39,135 குடும்பங்களைச் சேர்ந்த 1, 584, 499 மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மிகப் பெரும்பான்மையாகத் தமிழர்களும் சிறு அளவில் முஸ்லிம்களும் உள்ளனர். தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரழிவால் முல்லைத்தீவு நகரம் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது இலங்க்ஜையில் சனத்தொகை குறைந்த மாவட்டம் முல்லைத்தீவே ஆகும்.

நிர்வாகம்[தொகு]

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளூடாக நிர்வாகிக்கப்படுகின்றது. அவையாவன:

 1. கரைதுறைப்பற்று
 2. புதுக்குடியிருப்பு
 3. ஒட்டிசுட்டான்
 4. துணுக்காய்
 5. பாண்டியன் குளம் / மாந்தை கிழக்கு
 6. வெலிஓயா

வழிபாடுகள்[தொகு]

இந்து ஆலயங்கள்[தொகு]

கிறித்தவ ஆலயங்கள்[தொகு]

 1. முள்ளியவளை புனித திரேசாள் ஆலயம்
 2. மாமூலை அந்தோணியார் ஆலயம்
 3. புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலயம்
 4. அளம்பில் புனித அந்தோனியார் யாத்திரை ஸ்தலம்

பாடசாலைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Mullaitivu District Secretariat". பார்த்த நாள் 6 டிசம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லைத்தீவு&oldid=2540728" இருந்து மீள்விக்கப்பட்டது