கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 46 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்கால், அளம்பில், அம்பலவன்பொக்கணை, செம்மலை, கள்ளப்பாடு, கணுக்கேணி, கருநாட்டுக்கேணி,களிக்காடு, கேப்பப்புலவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கோவில்குடியிருப்பு, குமாரபுரம், குமுழமுனை, மாமூலை, மணல்குடியிருப்பு, மாதவாலசிங்கன்குளம், முல்லைத்தீவு, முள்ளியவளை, நீராவிப்பிட்டி, புதாரிக்குடா, செல்வபுரம், சிலாவத்தை, தண்ணிமுறிப்பு, தண்ணீரூற்று, உப்புமாவெளி, வண்ணான்குளம், வற்றாப்பளை ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு என்பவற்றோடு வவுனியா மாவட்டமும்; தெற்கில் திருகோணமலை மாவட்டமும்; கிழக்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 789 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்[தொகு]

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]