பேச்சு:முல்லைத்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரையின் பின்வரும் உரைக்கு விளக்கம் தேவை:இம்மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மிகப் பெரும்பான்மையாகத் தமிழர்களும் சிறு அளவில் முஸ்லிம்களும் உள்ளனர். தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள்.

இசுலாமிய நெறியை பின்பற்றும் தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள் அல்லர் என்பது போன்ற மயக்கத்தை இது தருகிறது. இதை தவிர்த்தல் அவசியம். நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் தமிழர்களின் சமய ரீதியான பரம்பலைத் தரலாம். தமிழ் பேசாத இசுலாமியர்கள், இசுலாமிய நெறி பின்பற்றும் தமிழர்கள் ஆகியோரை தெளிவாக குறிப்பிட வேண்டும்.--ரவி 15:06, 21 டிசம்பர் 2005 (UTC)

இந்த உட்தலைப்பின் கடைசி பத்தியைப் பார்க்கவும். -- Sundar \பேச்சு 07:33, 22 டிசம்பர் 2005 (UTC)


இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம்கள் தமிழைப்பேசினாலும் அவர்கள் தம்மை தனித்துவமான இனமாகக்கொள்கின்றனர். அரச பதிவேடுகளிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் தென்பகுதி முஸ்லிம்கள் இப்போது தமிழ்ல் இருந்து சிங்களம் பேசத்தொடங்கியிருப்பதும் குறிப்பிடதக்கது.--ஜெ.மயூரேசன் 07:55, 22 டிசம்பர் 2005 (UTC)

- :ரவி நீங்கள் சொல்வது தத்துவரீதியாகச் சரி. முல்லைத்தீவு தண்ணீரூற்றுப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமிழையே தாய் மொழியாக் கொள்வதால் அவர்கள் தமிழர்களாகக் கணிக்கலாம். சில முஸ்லிம்கள் மயூரேசன் குறிப்பிட்டதைப் போன்று சிங்களத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைக் கருத்திகொண்டிம் Sundar தந்த இணைப்பில் குறிப்பிட்டதைப் போன்று இலங்கையில் உள்ள சிலர் தமிழர், முஸ்லிம்கள் என இரண்டாகப் பிரிக்கின்றனர். இலங்கையில் அரச புள்ளிவிபரவியல் திணைக்களங்கள் (Government statistics) தமிழ் முஸ்லிம் என்றே வகைப்படுத்துவதால். இங்கு தமிழ், முஸ்லிம் என்று குறிப்பிடுவதே பொருத்தமென நினைக்கின்றேன. . --உமாபதி 08:10, 22 டிசம்பர் 2005 (UTC)

அனைவரின் விளக்கங்களுக்கும் நன்றி. இலங்கையில் வழமைக்கு மாறாக உள்ள இனப்பகுப்பு முறை புரிகிறது. எனினும் இப்பேச்சுப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள், ஆங்கில விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை ஆகியவற்றை உள்ளடக்கி கட்டுரைப் பக்கத்தில் தெளிவாகத் திருத்தி எழுதப்படவேண்டும். தேவையான அடிக்குறிப்புகள் தரப்பட வேண்டும். இலங்கையின் உள்நாட்டு வழக்கத்தை அறியாத தமிழ் நாட்டு அல்லது சிங்கப்பூர் பள்ளி மாணவன் ஒருவன் அனைத்துலகிலும் இசுலாமிய நெறி பின்பற்றுபவர்கள் தமிழர்கள் அல்லர் என்பது போல் விபரீதமாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பது தான் என் கவலை--ரவி 11:16, 22 டிசம்பர் 2005 (UTC)

கோயில்கள்[தொகு]

வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயம் கல்லூரான் (பேச்சு) 17:08, 27 சனவரி 2017 (UTC)[பதில் அளி]

மாவட்டம் - நகரம்[தொகு]

இக்கட்டுரை மாவட்டம் பற்றியதல்ல. மாவட்டம் பற்றிய தகவல் தேவையற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முல்லைத்தீவு&oldid=2576269" இருந்து மீள்விக்கப்பட்டது