அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை | |
மாகாணம் - மாவட்டம் |
- அம்பாந்தோட்டை |
அமைவிடம் | 6°07′00″N 81°07′00″E / 6.1167°N 81.1167°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 0-15 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை (2001) - நகரம் (2001) |
46777 - 11213 |
அம்பாந்தோட்டை இலங்கையின் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள நகரசபை ஆகும். இது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.[1][2][3]
புவியியலும் காலநிலையும்
[தொகு]அம்பாந்தோட்டை கரையோரச் சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-15 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். இலங்கையின் இரண்டு பருவபெயர்ச்சிக் காற்றுகளிலும் மழைவீழ்ச்சியைப் பெறாத அம்பாந்தோட்டை குறைவரல் வலயத்தில் அமைந்துள்ளது. 1950 மி.மீ. ஆண்டுச் சராசரி மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.
மக்கள்
[தொகு]இது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 46777 | 37839 | 805 | 54 | 2830 | 52 | 5197 |
நகரம் | 11213 | 5642 | 505 | 29 | 1653 | 22 | 3324 |
கிராமம் | 35564 | 32197 | 300 | 25 | 1177 | 30 | 1832 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 46777 | 37769 | 590 | 8092 | 169 | 141 | 16 |
நகரம் | 11213 | 5646 | 395 | 5015 | 86 | 55 | 16 |
கிராமம் | 35564 | 32123 | 195 | 3077 | 83 | 86 | 0 |
கைத்தொழில்
[தொகு]அம்பாந்தோட்டை உப்பு உற்பத்திக்கு பிரசித்தமான பிரதேசமாகும். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தைப் பெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hambantota". Hambantota District Chamber of Commerce. Archived from the original on 5 April 2018. பார்க்கப்பட்ட நாள் 30 April 2011.
- ↑ "Hambantota District. Hambantota: Sri Lanka's Deep South". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-25.
- ↑ The Asiatic annual register, or, A View of the history of ..., Volume 8, Issue 1, p.74.