கம்பகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பகா
நகரம்
நாடு இலங்கை
மாவட்டம்கம்பகா மாவட்டம்
அரசு
 • வகைமாநகர சபை
 • மேயர்எரங்க சேனநாயக்க
மக்கள்தொகை (2011[1])
 • மொத்தம்9,900
நேர வலயம்இலங்கை சீர்தர நேரவலயம் (ஒசநே+5:30)
 • கோடை (பசேநே)not observed (ஒசநே)
தொலைபேசி குறியீடு033

கம்பகா (Gampaha, சிங்களம்: ගම්පහ, கம்பஹ); என்பது இலங்கை, மேல் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஒன்றான கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கொழும்பிற்கு வடக்கே 40 கிலேமீற்றர் தூரத்தில், கொழும்பு-கண்டி பெருந்தெருவிலிருந்து மூன்று கிலோமீற்றர் உள்ளாக அமைந்த ஒரு பெருநகராகும். முற்று முழுதும் சிங்கள மக்களே வாழும் அந்நகரில் ஏனைய இனத்தவர்களைக் காண்பது மிக அரிது. கம்பகா நகரத்தைத் தலைநகராகக் கொண்டு கொழும்பு மாவட்டத்திலிருந்து களனி ஆற்றால் பிரிக்கப்பட்ட மாவட்டம் கம்பகா மாவட்டம் ஆகும். கம் அல்லது கம என்ற சிங்களச் சொல்லின் பொருள் கிராமம் என்பதாகும். பஹ என்பது சிங்களத்தில் ஐந்து எனப் பொருள்படும். எனவே கம்பஹா என்பதன் பொருள் ஐந்து கிராமங்கள் என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பகா&oldid=3851876" இலிருந்து மீள்விக்கப்பட்டது