பேச்சு:கம்பகா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராமம் - தமிழ்ச்சொல் என்ன? சிற்றூர் என வேண்டுமா? இல்லை, ஊர் என்றாலே போதுமா? சிற்றூர் என்ற சொல் அண்மைக்காலத்தில் வந்ததாக இருக்குமோ? ஊர் என்றால் பெரிய ஊர்களையும் குறிக்கிறது. புதுக்கோட்டைப் பக்கத்தில் நிறைய சிற்றூர்கள் பட்டி என்றே வரும். எனவே அவற்றைச் சிற்றூர் என அறியலாம். பாக்கம், குறிச்சி போன்ற ஊர்பெபயர்களுக்கெல்லாம் தமிழ் இலக்கணத்தில் பொருள் இருப்பது போல், அளவில் சிறிய ஊரைக் குறிக்கவும் ஏதாவது இருக்கிறதா?--ரவி 17:02, 24 மே 2008 (UTC)[பதிலளி]

ஊர் என்பதுதான் கிராமம். சிற்றூர் என்பது குக்கிராமம். பட்டி,தொட்டி என்பதும் குப்பம் என்பதும் பொதுவாக சிறிய ஊர்களைக் குறிக்கும் சொற்கள், ஆனால் பொதுப்பெயராக சிற்றூருக்கு வழங்குவது பொருந்தாது. வாழ்க்கை மெள்ள நடக்கும் வாழிடம் ஊர். சற்று விரைவாக நடக்கும் வாழிடம் நகரம். "நகரு, நகரு" என்று கூறுவதும் விரைந்து நகரப் பயன்படுத்தும் சொல்லாட்சி. பாக்கம் என்பது கடற்கரையோரம் இருக்கும் ஊர். சிற்றூருக்கு "உட்கிடை" என்று ஒரு பெயருண்டு. ஏந்தல், நத்தம், ஊர்நத்தம், சேரி, பேடு, பட்டு, வாடி, வாடை, தாங்கல், வலசை என்பனவும் பள்ளி என்பதும் கூட சிற்றூர்களைக் குறிக்கும் சொற்கள்தாம். ஏம்பல் என்னும் ஒரு சொல்லும் சிற்றூரைக்குறிக்க கல்வெட்டுகளில் ஆளப்பட்டுள்ளது. --செல்வா 17:16, 24 மே 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கம்பகா&oldid=2041319" இலிருந்து மீள்விக்கப்பட்டது