விசுவமடு மகா வித்தியாலயம்

ஆள்கூறுகள்: 9°22′34.20″N 80°33′00.60″E / 9.3761667°N 80.5501667°E / 9.3761667; 80.5501667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசுவமடு மகா வித்தியாலயம்
அமைவிடம்
விசுவமடு, முல்லைத்தீவு மாவட்டம், வட மாகாணம் 0094
இலங்கை
அமைவிடம்9°22′34.20″N 80°33′00.60″E / 9.3761667°N 80.5501667°E / 9.3761667; 80.5501667
தகவல்
வகைபொது மாகாணப் பாடசாலை 1AB
சமயச் சார்பு(கள்)இந்து, கிறிஸ்தவம்
பள்ளி மாவட்டம்முல்லைத்தீவு கல்வி வலயம்
ஆணையம்வட மாகாணம்
பள்ளி இலக்கம்1404010
ஆசிரியர் குழு47
தரங்கள்6-13
பால்கலவன்
மொழிதமிழ்
School roll900 மாணவர்களுக்கும் மேல்
Alumniவிசுவமடு பழையமாணவர் சங்கம்

விசுவமடு மகா வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு என்னும் பிரதேசத்தில் அமைந்த பாடசாலையாகும்.[1][2] இப்பாடசாலையானது 1978ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 20ம் திகதி விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினால் வழங்கப்பட்ட காணியில் ஆரம்பிக்கப்பட்டது.

பாடசாலையின் வரலாறு[தொகு]

1978ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் முதல் அதிபராக விசுவநாதர் பதவியேற்றார். அவருடைய ஞாபகர்த்தமாக தரம்1 தொடக்கம் தரம்5 வரைக்கும் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தோற்றமும் வளர்ச்சியும்[தொகு]

வன்னியில் முல்லை மாவட்டத்தின் மேற்குப் புறத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் புறத்திலும் அமைந்திருக்கும் எல்லைக்கிராமம் விசுவமடு ஆகும். நீர்வளமும் நிலவளமும் நிரம்பப் பெற்று வனவளத்தினால் சூழ்ந்திருந்தது இக்கிராமம்.

அதிபர்கள்[தொகு]

  • திரு.ச.விசுவநாதர் - (20. செப்டம்பர் 1978 தொடக்கம் 30. செப்டம்பர் 1983 வரை)
  • திரு.ச.தங்கராஜா - (30.09.1983தொடக்கம் 10. செப்டம்பர் 1987 வரை)
  • திருமதி.ப.விநாயகமூர்த்தி- (10. செப்டம்பர் 1987 தொடக்கம் 14. சனவரி 1988 வரை)
  • திரு.வே.சுந்தரலிங்கம் - (14. சனவரி 1988 தொடக்கம் 15. மார்ச் 1992 வரை)
  • செல்வி.க.சுசீலா - (15. மார்ச் 1992 தொடக்கம் 9. செப்டம்பர் 1992 வரை)
  • திரு.ஜீ.எஸ்.பரமேஸ்வரன்- (9. செப்டம்பர் 1992 தொடக்கம் 1. செப்டம்பர் 1995 வரை)
  • திரு.நா.தியாகராஜா - (1. செப்டம்பர் 1995 தொடக்கம் 16. மே 1997 வரை)
  • திரு.மு.சிவப்பிரகாசம் - (16.05.1997தொடக்கம் 21. மே 1998 வரை)
  • திரு.சி.மாணிக்கவாசகர் - (21. மே 1998 தொடக்கம் 1. அக்டோபர் 2002 வரை)
  • திரு.சு.மோகனராஜன் - (1. அக்டோபர் 2002 தொடக்கம் 10. பெப்ரவரி 2003 வரை)
  • திருமதி.நி.இராமச்சந்திரன்-(10. பெப்ரவரி 2003 தொடக்கம் 7. மார்ச் 2003 வரை)
  • திரு.ஐ.கே.தவரட்ணம் - (1. பெப்ரவரி 2005 தொடக்கம் 22. ஏப்ரல் 2006 வரை)
  • திரு.சி.பாஸ்கரன் - (23. ஏப்ரல் 2006 தொடக்கம் 9. மார்ச் 2009 வரை)
  • திருமதி.தெ.வீரசிங்கம் - (27. செப்டம்பர் 2010 தொடக்கம் 19. அக்டோபர் 2010 வரை)
  • திரு.வி.ஸ்ரீகரன் - (20. அக்டோபர் 2010 தொடக்கம் 22. பெப்ரவரி 2012 வரை)
  • திரு.பெ.பாலகிருஷ்ணன் - (22. பெப்ரவரி 2012 தொடக்கம் இன்று வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. Schools Basic Data as at 01.10.2010. Northern Provincial Council. 2010 இம் மூலத்தில் இருந்து 2013-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203001953/http://notice.np.gov.lk/index.php?option=com_content&view=article&id=85%3Anpc-schools-basic-data-as-on-01102010. பார்த்த நாள்: 2015-04-02. 
  2. "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education. Archived from the original (PDF) on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2015-04-02.