வங்காலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வங்காலை
Gislanka locator.svg
Red pog.svg
வங்காலை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - மன்னார்
அமைவிடம் 8°53′45″N 79°55′58″E / 8.895833°N 79.932696°E / 8.895833; 79.932696
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)

வங்காலை மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச சபையில் உள்ள ஓர் மீனவக் கிராமம் ஆகும். இங்கு பெரும்பான்மையானவர்கள் கிறித்தவர்கள் ஆவர். இங்கு மன்னார் மாவட்டத்தில் பிரபலமான புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயமும் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

‘வங்காலை’ – பிரதேச ரீதியாக மட்டுமல்ல, தேசிய ரீதியிலும் உன்னத நிலையில் இருந்து வந்துள்ள தூய கத்தோலிக்க, தமிழ் கிராமம் ஆகும். இக்கிராமத்தின் வளர்ச்சியில் புனித ஆனாள் ஆலயத்தின் பங்கும் பணியும் அளப்பரியது. ஆன்மீக வழியில் ஒரு கட்டுக்கோப்பான சமூகமாகவும், கல்வி, கலை, கலாச்சாரம், விளையாட்டு ஆகிய துறைகளிலும் சாதனை படைத்து வீறு நடை போடுவதற்கும் உறுதுணையாக இருந்துவருவதும் இவ் ஆலயமே. ஏமக்கு வாழ்வளித்து 125ஆவது நிறைவு ஆண்டை மிடுக்குடன் கொண்டாடும் புனித ஆனாள் ஆலயத்திற்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

வரலாற்று ரீதியாக மாதீர்த்த என அழைக்கப்படும் மாந்தை துறைமுகம் முக்கியத்துவம் பெற்றிருந்த காலத்தில் இக்கிராமம் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. சேர்.கந்தையா வைத்தியநாதன் அவர்கள் தமது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “பாலாவியின் முகத்துவாரத்தில் மாந்தை துறைமுகம் இருந்தது. இதற்கு உதவியாக களஞ்சிய கூடகங்களும், பாலத்துறையும் பாலாவியின் தென் கரையோரத்தில் அமைந்து விளங்கின. அவ்விடம் இன்றும் “வங்காலை” (வங்கம்: கப்பல், காலை: கப்பல் தங்கும் இடம்) என்ற பெயரும் நிலவக் காணலாம். மாந்தை துறைமுகத்தின் வடக்கில் திருக்கேதீஸ்வரம் ஆலயம் அமைந்திருந்தது”. ஆகவே இதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு என்பது புலனாகின்றது.

கடலும், கடல் சார்ந்த பகுதியில் வாழும் நெய்தல் நில மக்களாக பரதவர் குறிக்கப்படுகின்றனர். தலைமன்னார் முதல் - முள்ளிக்குளம் வரையி;ல் பரந்து வாழும் இவ் இன மக்களே இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையினர் ஆவர். பரதவர்களுக்கு நீண்ட வரலாற்றுப் பின்னணி உண்டு. கப்பல் ஓட்டுவதிலும் கடல்வள வாணிபத்திலும் - சிறப்புற்று விளங்கிய இவ்வினம் பற்றி – பல வரலாற்று ஆசிரியர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அத்தகைய ஆய்வுகளை ஒன்று திரட்டி யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் கலாநிதி ப.புஸ்பரட்டினம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளை திரட்டி “நெய்தல் நிலத்து மன்னர்கள்” என்ற தலைப்பில் இக்கட்டுரை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.

சங்ககாலத்தில் கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த நெய்தல் நில மக்களாகப் பரதவர் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் சில இடங்களில் பரவர் எனவும், பல இடங்களில் பரதவர் எனவும் குறிக்கப்படுகின்றனர். இவற்றில் இருந்து தென்தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில் அமைந்த காவிரி நதிப்படுக்கைக்கும் தாமிரபரணி ஆற்றிட்கும் இடைப்பட்ட பகுதியில் இச்சமூகம் வாழ்ந்ததை அடையாளம் காண முடிகிறது. (ளுநநெஎசையவநெ 1985: 49 – 50) இவை தற்கால திருநெல்வேலி இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி எனக் கூறலாம். தொலமி, சோழ நாட்டிற்கும், பாண்டி நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை பதை எனக் கூறுகிறார். இது பரதவரைக் குறிக்கலாம் (ஏநடரிpடைடயi 1980: 13) பரதவரின் முக்கிய தொழிலாக சங்க இலக்கியத்தில் சங்கு, முத்துக்குளித்தல், மீன்பிடித்தல், வர்த்தகம் என்பனவும் குறிக்கப்படுகின்றன. பாண்டி நாட்டு செல்வமாக இருந்த முத்து பற்றி சங்க இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் பல குறிப்புக்கள் உள்ளன.

புறநானூறு முத்துக்குளித்தலில் ஈடுபட்ட பரதவரை பாண்டிய மன்னன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும் சோழ மன்னருக்கு அவர்கள் சவாலாக விளங்கியதாகக் கூறுகிறது (புறம் 378’1) பெரிபுளஸ் என்ற நூலில் முத்துக்குளித்தலில் ஈடுபட்ட மக்களை பாண்டிய மன்னன் தனது சிறையில் அடைத்ததாகவும், சிறைத்தண்டணை பெற்ற மக்களைப் பாண்டிய மன்னன் முத்துக்குளித்தலில் ஈடுபடுத்தியதாகவும் கூறுகிறது. (ளுஉhழகக 1912: 46) முத்துக்குளித்தலில் பாண்டிய மன்னருக்கும் பரதவருக்கும் பிற்காலத்திலும் பகைமை இருந்ததை நெடுஞ்செழியன் பராந்தகன் வேள்விக்குடிச்செப்பட்டில் வரும் பரவரைப் பாழ்படுத்தும் என்ற சொல் உறுதிப்படுத்துகிறது. (முருகானந்தம் 1990, 3) முத்துக்குளித்தலைப் போல் சங்கு குளித்தலும் முக்கிய தொழிலாக விளங்கியது. பரதவர் சங்குகளுக்காக கடலுக்குள் மூழ்கியதையும் அவற்றை கள்ளுக்காக விற்றது பற்றியும் அக நானூறு கூறுகிறது. (அகம் 296- 8, 9, 350: 11-13) – பாண்டி நாடு நெடுகிலும் சங்கும் முத்தும் விற்பனை செய்யப்பட்டதை மதுரைக்காஞ்சி கூறுகின்றது. பாண்டிய மன்னர் வெள்வளை தரித்ததாக சின்ன மன்னூர் செப்பேடு கூறுகிறது. (ளுஐஐ.3:4)

பரதவரின் இன்னொரு தொழிலாக மீன் பிடித்தலும் வர்த்தகமும் விளங்கியது. முத்து பாண்டியரின் சொத்தாக விளங்கியது போல் மீன் பாண்டியரின் பிரதான உணவாக இருந்தது. சங்க இலக்கியத்தில் மீன் என்ற சொல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறுந்தொகையில் வரும் மீன் வேட்டம். திமில் வேட்டுவர் என்ற சொல்லாட்சி மீன்பிடித் தொழிலின் சிறப்பைக் காட்டுகிறது. (குறு 123)- பரதவர் காய விட்ட மீனை (உப்புக்கண்டம்) விற்பனைக்காக படகுகளில் கொண்டுவந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. வர்த்தகத்தில் குதிரை வெளிநாட்டு வர்த்தகப்பொருளாகவும் திகழ்ந்தன. பட்டினப்பாலையும் (பட்டினப் 185 – 193) மதுரைக்காஞ்சியும் (மதுரை 321. 323) மேலை நாட்டுக் குதிரைகளும் வட இந்தியக் குதிரைகளும் தென்னிந்தியத் துறைமுகங்களுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறுகின்றன.

மதுரைக் காஞ்சி பாண்டி நாடு நெடுகிலும் குதிரை வர்த்தகம் நடந்ததாகக் கூறுகிறது. (மதுரை 315.24) இலங்கைப் பாளி நூல்கள் தமிழ் நாட்டு வணிகர் இலங்கையில் குதிரை வர்த்தகம் செய்ததாகக் கூறுகின்றன. இவ் வர்த்தகத்தில் பரதவர் ஈடுபட்டதாக செனவிரட்ண கூறுகிறார். பரதவர் கடலிலிருந்து எடுத்த உப்பை உமணர் உள்நாட்டில் விற்பனை செய்தார். நற்றிணையில் உமணர் வருகையை எதிர்பார்த்து உழாத உழவர் (பரதவர்) உப்பைக் குப்பைகளாக வைத்துக் காத்திருந்தனர் என்ற குறிப்புள்ளது. (நற் 138.12) பாண்டி நாட்டிலுள்ள சில பிராமிக் கல்வெட்டுக்கள் உப்பு வணிகர் பற்றிக் கூறுகின்றன. (ஆயாயனநஎயn 1966)

இவ்வாறு பலதரப்பட்ட பொருளாதார நடவடிக்கையில் பரதவர் ஈடுபட்டதினால் செல்வம் இவர்களிடத்தே குவிந்தன. சங்க இலக்கியத்தில் இவர்களது இருப்பிடங்கள், மாளிகைகள், கப்பல்கள், அலங்கார வண்டிகள், வாகனங்கள் பற்றி வரும் குறிப்புக்கள் இவர்களின் செல்வ நிலையை காட்டுகின்றன. (மதுரை 315. 323 பெரும்பாண் 319, 324 அகம் 86) புற நானூறில் வரும் ‘தென் பரதவர் மிடல் சாய’ என்ற சொற்றொடர்களும், பாண்டிய நெடுஞ்செழியனை கொற்றவன் காவலன் ‘பரதவ தலைவன்’ எனவும் கூறப்படுவது சங்ககால அரசியலிலும், சமூகத்திலும் பரதவருக்கிருந்த மதிப்பைக் காட்டுகின்றது.

இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயருக்குரியவர்கள் ஆற்றிய தொழில்கள், பதவிகள், சமூக அந்தஸ்து என்பவற்றை நோக்கும் போது சங்க இலக்கியத்தில் வரும் பரதவ சமூகத்தை அப்படியே நினைவுபடுத்துவதாக உள்ளன. சங்க இலக்கியங்களில் பரதவ சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றிக் கூறப்படுவது போல், இலங்கை வரலாற்று இலக்கியங்களில் எந்தவித குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் இக்காலத்தில் தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றி ஆக்காங்கே சில குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவர் பற்றிவரும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் பெருங்கற்கால கறுப்பு – சிவப்பு மண்டபங்கள் காணப்படும் இடங்களை அண்டிய பகுதியில் காணப்படுவதை சான்றாதாரம் காட்டி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பரதவர் இலங்கை வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார். (1985 : 49) அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வாய்வில் குடியேற்றத்தின் ஆரம்பகாலச் சான்றுகளுடன் இலங்கையில் கிடைக்கப்பெறாத பளிங்குக் கற்கள், மணிகள், குதிரை எலும்பின் எச்சங்கள் கிடைத்துள்ளன. (ஊழniபொயஅ 1996 : 81) இவை வணிக குடியேற்றம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

தமிழ் நாட்டில் பரதவர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாகப் பாண்டி நாட்டிலுள்ள தாமரபரணி ஆற்றங்கரை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதே இடப்பெயர் வடமேற்கு இலங்கையில் உள்ள ஒரு இடத்தின் பெயராக கி.மு.6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் முழு இலங்கைக்குரிய பெயராக மாறியதை அசோகன் காலக் கல்வெட்டிலும், கி.பி.1.2.ஆம் நூற்றாண்டுக்கு உரிய வெளிநாட்டார் குறிப்புக்களிலும் காணமுடிகிறது. இவ்விடப் பெயர் ஏற்பட பாண்டி நாட்டிலுள்ள தாமரபரணி ஆற்றங்கரையிலிருந்து ஏற்பட்ட வர்த்தக குடியேற்றம் ஒரு காரணமாக இருக்கலாமென கூறுவோருமுளர். ஆனால் இலங்கையில் கி.மு.6ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்படும் இப்பெயர் தமிழ் நாட்டு வலலாற்று மூலங்களில் கி.பி.12ஆம் நூற்றாண்டின் பின்னரே காணப்படுகின்றன. இவற்றை நோக்கும் போது இரு பிராந்தியத்திலும் வாழ்ந்த பரதவ சமூகத்தினருக்கு இடையிலான வர்த்தகப் பண்பாட்டுத் தொடர்பால் இங்கிருந்தே அப்பெயர் தமிழ் நாட்டிற்கு சென்றதா என எண்ணத் தூண்டுகிறது.

பரத பற்றி வரும் கல்வெட்டுக்களில் பொலநறுவை மாவட்டத்தில் உள்ள தூவகெல என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டு சிறப்பாக குறிப்பிடத்தக்கது. (வழக்கத்திற்கு மாறாக இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக எழுதப்பட்டுள்ள இககல்வெட்டில் பரதஸ ஹகிதஸ (டீயசயவயளயலய மவையளய) என்பவன் கொடுத்த குகை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பரத என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது. (ஏறத்தாழ இதையொத்த கப்பல் உருவம் தமிழ் நாட்டில் அழகன் குளம் அகழ்வாய்வின் போது கி.மு.2.1 ஆம் நூற்றாண்டுக்குரிய ரௌலட்டட் மண்டபத்தில் பெறப்பட்டுள்ளது.) இது பரத என்பவனை கப்பல் தலைவனாக அல்லது, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகனாக கருத இடமுண்டு. தொலமி பாண்டி நாட்டுக் கடற்கரைப் பகுதியில் தரித்து நின்ற கப்பல் பற்றி தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில் என்பன கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலன்களாக குறிப்பிடப்பட்டு உள்ளன. இதில் திமில், அம்பி என்பன மீன் பிடித்தலுக்கும் பெரிய கப்பலிலிருந்து பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு வரவும் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கம், நாவாய் நீண்ட கடற்பயணத்திற்கும் வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (சுப்பராயலு 1983 : 161 – 162) இலங்கையில் தமிழ் வணிகனாகிய நாவாய் தலைவன் தென்னிந்தியாவில் இருந்து குதிரையை கொண்டு வந்து விற்பனை செய்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. நாயன்மார் பாடல்கள் வங்கம் நிறைந்த துறை முகமாக வட இலங்கையில் உள்ள மாதோட்டத்தைக் கூறுகின்றன. (மயினைகிளார் 1953) இதனால் பொலநறுவைக் கல்வெட்டில் வரும் கப்பல் உருவத்தை பாளி, தமிழ் இலக்கியங்கள் கூறும் நாவாய் அல்லது வங்கமாகக் கருதலாம்.

கல்வெட்டுக்கள் சிலவற்றை நாவிக என்ற பெயருடன் படகெ, தொட என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புரணவிதாண இவை கடற்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கலன்கள் எனக் கூறுகிறார். இதில் படகெ, தொட என்ற சொற்கள் தமிழில் வழக்கில் உள்ள படகு, தோணி போன்ற சொற்களுடன் தொடர்புபடுத்த இடமுண்டு. அண்மையில் பிரித்தானிய nஐர்மன் ஆய்வுக் குழுவினர் அநுராதபுர பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குரிய சங்ககால நாணயங்களையும் கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலம் ஒன்றின் உருவம் பொறித்த நரைநிற மட்பாண்ட ஓடு ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். (ஊழniபொயஅ 1996இ92) இதில் உள்ள கடற்கலத்தை கல்வெட்டுக்களில் வரும் படகெ. தோட போன்ற சொற்களுடன் தொடப்பு படுத்தலாம். இதையொத்த உருவத்தை தமிழ் நாட்டில் புதிய கற்கால ஓவியங்களிலும் சாதவானகர் கால நாணயங்களிலும் காணமுடிகிறது. இவ் ஆதாரங்களில் இருந்து சங்க காலத்திற்கு முன்பு இருந்தே இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கடல் வாணிபத் தொடர்புகள் இருந்ததென உறுதிப்படுத்தலாம். இவை பொலநறுவைக் கல்வெட்டில் வரும் பரத என்பவனை அயல் நாடுகளுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டவனாகக் கருத இடமளிக்கிறது.

சங்க இலக்கியத்தில் பரதவரின் முக்கிய தொழில்களில் ஒன்றாக முத்து, சங்கு குளித்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தொழில்கள் பாண்டி நாட்டிற்கும் வடமேற்கு இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் நடந்ததற்கு போதிய சான்றுகள் உண்டு. இந்தியாவைக் காட்டிலும் இலங்கையில் தரமான முத்து கிடைத்ததாக கி.மு.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகத்தனில் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்காலப் பகுதியில் ஆட்சிபுரிந்த இலங்கை மன்னர்கள் சிலர் இந்திய மன்னர்களுக்கு முத்தை பரிசாக கொடுத்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. பண்டு தொட்டு வடமேற்கு இலங்கையில் உள்ள சிலாபம் என்ற இடம் முத்துச் சிலாபம் என்ற பெயரை பெற்றிருந்ததற்கு இங்கு நடைபெற்று வரும் முத்துக் குளித்தலே முக்கிய காரணமாகும். பரத என்ற பெயருக்குரிய பிராமிக் கல்வெட்டுக்களில் கணிசமானவை இப்பிராந்தியத்திலிருந்து கிடைத்திருப்பது இத்தொழில்களோடு இவர்களுக்கிருந்த தொடர்பைக் காட்டுகிறது எனலாம்.

பண்டைய இலங்கையில் மீன்பிடித் தொழிலோடு பரத என்ற பெயருக்குள்ள தொடர்பைக் காட்ட கல்வெட்டுக்களிலோ அல்லது பாளி இலக்கியங்களிலோ இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் அண்மையில் தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்றில் இதற்குரிய சான்று கிடைத்துள்ளது. இங்கு இதே காலத்திற்குரிய உதிரன், தஸபிடன், மஹசாத்தன், கபதிகடலன் போன்ற தமிழ் நாணயங்களுடன் பரததிஸ என்ற பெயர் பொறித்த நாணயம் ஒன்றும் கிடைத்துள்ளது. (டீழிநசயசயஉhஉhi 1999: 53, புஷ்பரட்ணம் 1999: 55 – 70) இதில் காணக்கூடிய சிறப்பு என்னவெனில் பின்புறத்தில் பரததிஸ என்ற பெயரும் முன்புறத்தில் இரு மீன்கோட்டுருவமும் இடம்பெற்றிருப்பதாகும். இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம். பின்னொட்டுச் சொல்லாக வரும் திஸ என்ற பெயருக்கு பூச நட்சத்திரம் என்ற பொருள் உள்ளது (இராசகோபால்). இப்பெயர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் பல இடங்களில் வருகிறது. இப்பெயரில் குறுநில மன்னர்களும், சிற்றரசர்களும் இருந்துள்ளனர். இது பிராகிருத மொழிக்குரிய பெயராக இருப்பினும் இப்பெயரில் தமிழர்களும் இருத்ததற்குப் போதிய சான்றுகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்ற இடத்திலுள்ள கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்று தீகவாபி என்ற இடத்தில் வாழ்ந்த திஸ என்ற தமிழ் வணிகன் பற்றிக் கூறுகிறது. அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்று திஸ தமிழன் தமிழ் வணிகர்களுடன் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகின்றது. அண்மையில் தமிழ் நாட்டில் அழகன் குளம் என்ற இடத்தில் கிடைத்த மட்பாண்டை ஓட்டில் தீசன் என்ற பெயர் பெறப்பட்டுள்ளது (இராசகோபால்). பேராசிரியர் சிற்றம்பலம் சங்க இலக்கியத்தில் வரும் திரையர் என்ற ஒரு இனக் குழுவைக் குறித்ததெனக் கொண்டால் அச்சொல்லிற்கும் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த திஸ, திஸ்ஸ என்ற பெயர்களுக்கும் இடையிலான தொடர்பு ஆராயப்படக் கூடியதென்பதற்கு சில சான்றாதாரங்களைக் காட்டியுள்ளார். திரை என்ற சொல்லுக்கு கடல், கடலலை, குளம் என்ற பல கருத்துக்கள் உண்டு. இலங்கையில் கிடைத்த பரத பற்றிய 21 கல்வெட்டுக்களில் 12 கல்வெட்டுக்கள் திஸ என்பனவை பரதவ (பரத) சமூகத்துடன் தொடர்பு படுத்திக் கூறுகின்றன. இதில் கல்வெட்டுக்களில் வரும் வணிகன், அரச தூதுவன், கப்பல் தலைவன் போன்ற பதவிகள் அனைத்தும் பரததிஸ என்பவனோடு தொடர்புடையதாக உள்ளன. தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்று மீன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டு அதன் மத்தியில் “திஸஹ” என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. (டீழிநயசய உhiஉhi 1999: 60இ ழே- 43) இதை நாணயமாக கொள்வதைவிட திஸ என்பவனுக்குரிய முத்திரை எனக் கூறலாம். இவற்றிலிருந்து மீன் பிடித்தலோடு பரதவ சமூகத்திற்கும் திஸ என்ற பெயருக்கும் உள்ள தொடர்பு தெரியவருகிறது. இச்சான்றுகள் கடல் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளோடு பரதவ சமூகத்திற்கும் திஸ, திஸய என்ற பெயருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவதால் திரையர் என்ற இனக் குழுவுடன் திஸ என்ற பெயருள்ள உறவை தொடர்புபடுத்திப் பார்க்கலாம் என்ற கருத்திற்கு இவை மேலும் சான்றாக உள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவ சமூகத்தின் தோற்றத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்பு படுத்துகிறார். இதற்கு இச்சமூகம் பற்றிய கல்வெட்டுக்கள், பண்பாட்டு மையங்களை அண்டிக் காணப்பட்டதையே சான்றாகக் காட்டுகிறார். இன்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் பரதவ சமூகம் வாழ்ந்து வரும் இடங்களில் வட, வடமேற்கு இலங்கை சிறப்பாக குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பூநகரி வட்டாரத்திலுள்ள மண்ணித்தலை என்ற கடற்கரைக் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய பல சான்றுகளுடன் குறிப்பாக கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள் (டீடயஉம யனெ சநன றயசந) தமிழ் பிராமி எழுத்துப் பொறிந்த மட்பாண்ட ஓடுகள், இரும்புக் கருவிகள் என்பவற்றுடன் மீன் பிடிப்பதற்கென ஊசிகளும் (குiளா ர்ழமள) கிடைத்துள்ளன. (புஷ்பரட்ணம் 1993). பரத என்ற சொல்லின் இன்னொரு வடிவமாக கல்வெட்டுக்களில் வரும் பத என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இப்பெயருக்குரியவர்கள் இலங்கையில் பரந்துபட்ட அளவில் வாழ்ந்தனர் எனக் கூறலாம்.


இவர்கள் வர்த்தகத்தில் மட்டுமன்றி அரசியல், கிராம நிர்வாகம், நீதி, படைத்துறை, கலை போன்ற பல துறைகளில் ஈடுபட்டிருந்தமை தெரிகிறது. குத்திக்குளம் என்ற இடத்தில் உள்ள கல்வெட்டு பதகுமார என்பவன் பௌத்த சங்கத்திற்கு அளித்த தானம் பற்றிக் கூறுகிறது. இதில் வரும் பதகுமர என்பதை பரதகுமார என எடுத்துக்கொள்ளலாம். சங்க காலத்தில் சிலப்பதிகாரம் பரதவ குமாரன் என அழைத்ததற்கு சான்றுண்டு. (சிலப் 156) அண்மையில் சேருவில் என்ற தமிழ் கிராமத்தில் கிடைத்த கல்வெட்டில் பதகம திஸ்ஸவும், தமிழ் சோழவும் (தமிட சுட) இணைந்து பௌத்த சங்கத்திற்கு தானம் அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (ளுநநெஎசையவநெ 1985: 52). இதில் சோழர் தமிழராக குறிப்பிடப்பட்டமை சிறப்பாக நோக்கத்தக்கது. வட இலங்கையில் பதசுட என்ற சொல் சில கல்வெட்டுக்களில் வருகின்றன.

மேற் கூறப்பட்ட கல்வெட்டுக்களில் இருந்து சங்ககாலத்தைப் போல் சமகாலத்தில், இலங்கையிலும் பரதவ சமூகம் வாழ்ந்ததெனக் கூறலாம். சங்க இலக்கியத்தில் பரவர், பரதவர் என வரும் பெயர்கள் இலங்கைக் கல்வெட்டு மொழிக்கு ஏற்ப பத, பரத என மாற்றமடைந்திருக்கலாம். இதற்கு கல்வெட்டுக்களில் வரும் பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்கள் சம காலத்தில் வெளியிட்ட நாணயங்களில் தமிழில் இடம்பெற்றிருப்பதைச் சான்றாக கூறலாம். செனிவரட்னா பரத என்ற முன்னொட்டுச் சொல் திராவிட மொழிக்குரிய ஆய், மாற, மருமக என்ற பெயர்களுடனும், பிராகிருத மொழிக்குரிய சும, உதர, சுமலி போன்ற சொற்களுடனும் வருவதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆரம்பத்தில் இனக் குழுவைக் குறித்த பரதவ என்ற பெயர் பின்னர் சமூகப் பெயராக மாறியதாக ஒரு குருத்துண்டு. Nஐம்ஸ் ஆர்னலின் பரதவர், பரவர், பரதர் ஆகியோர் நாக இனக்குழுவை சார்ந்தவர் எனக் கூறுகிறார் (முருகானந்தம் 1990, 3) வட இலங்கை நாகதீவு எனவும், நாகர்கள் வாழ்ந்த இடம் எனவும் கூறும் வரலாற்று மரபுண்டு. இலங்கையில் பரத பற்றி வரும் கல்வெட்டுக்கள் பெருமளவுக்கு வட இலங்கையிலும், வடமேற்கு இலங்கையிலும் காணப்படுவதுடன் சில கல்வெட்டுக்களில் பரதநாக என்ற பெயர் இணைந்து வருவதையும் காணலாம். இதனால் பரத என்ற சமூகப் பெயர் இலங்கையில் வேறுபட்ட இனக் குழுக்களிடையே சமூகப் பெயராகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் அதன் செல்வாக்கு கூடிய அளவுக்கு வட, வடமேற்கு இலங்கையில் இருந்ததெனக் கூறலாம். இன்று பரதவ சமூகம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழி பேசும் பிராந்தியங்களிலும், இலங்கையில் சிங்கள, தமிழ் மொழி பேசும் வட்டார மக்களிடமும் காணப்படுகின்றன. வட, வடமேற்கு இலங்கையில் இப்பரதவ சமூகம் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதை இடைக்கால, மத்தியகால வரலாற்று ஆவணங்களிலிருந்து அறியமுடிகிறது. இதனால் இச்சமூகத்தின் தொடக்க கால ஆதாரமாக இப்பிராந்தியத்தில் காணப்படும் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயரைக் குறிப்பிடலாம்.

வங்காலைப் பாடசாலைகள்[தொகு]

மன்னார் மாவட்டத்தின் ஒரு பாலைவனச் சோலையாக, மாதோட்டத்தின் கலங்கரை விளக்காக, கல்வியில் சிறப்பிடமாக, விசுவாசத்தின் விளைநிலமாக, கலைகளின் வடிவமாக பரிணமித்து நிற்கும் வங்காலைக் கிராமத்தின் கல்வியும் கலைகளும் எமது விசுவாசத்திற்கு வித்திட்ட வரலாற்றை நாம் நோக்குவோம்.

“கல்வியிணுங்கில்லை சிற்றுயிர்க் குற்ற துணை” என்ற ஆன்றோரின் முது மொழிக்கொப்ப கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த எமது கிராம மக்கள் கல்வி வளர்ச்சிப் பணியில் காட்டி வந்திருக்கும் அக்கறை பெரும் வியப்புக்குரியதே.

ஆரம்ப காலங்களில் குடியேற்ற வாதத்திற்கு உட்பட்ட நாடாக காணப்பட்ட காலங்களில் அவர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்காக கரையோரங்களைக் கைப்பற்றி வந்தனர். பின்னர் சுதேசிகளிடம் தங்களது சமயத்தை பரப்புவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர்கள் சமயத்துடன் கல்வியிலும் ஆர்வம் காட்டினர். இதனால் ஆரம்ப காலங்களில் பள்ளிக்கூடங்கள் எல்லாம் சமயதலைவர்களிடம் காணப்பட்டது. நிர்வாகம், பாடம் எல்லாம் இவர்களது தீர்மானப்படி இடம் பெற்றது.

பாடசாலைகள் கோவில் பற்று பாடசாலைகளாக, கோவிலை அண்டி காணப்பட்டது.இதிலிருந்து பாடசாலைகளின் வளர்ச்சி ஆரம்பிக்கபட்டது. இவ்வாறான நடவடிக்கையே வங்கம் தங்கும் சாலையாக காணப்பட்ட வங்காலை எம் பதியில் கல்விக்கு வித்திட்டது எனலாம்.இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்னரே எமது கிராமத்தில் பாடசாலைகள் நடாத்தப்பட்டுள்ளமையும் அது கத்தோலிக்க கோவிலைஅண்டியதாக காணப்பட்டமைக்கும் சான்றுகள் உள்ளன.

ஆரம்ப காலங்களில் குச்சிவீடும் குடிசையும் தான் வங்காலைப் பாடசாலை. 1900 இற்கு முற்பட்ட காலத்தில் கத்தோலிக்கக் கலவன் என்ற பெயரில் மிகச்சொற்ப மாணவர்களைக் கொண்டதாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டுள்ளது.

ஏடும் எழுத்தாணியும் இவர்கள் கல்வி கற்கும் கருவிகளாகும். ஓலைச்சுவடி கொண்டு கற்றாலும் இவர்களது கல்வி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படவில்லை. திண்ணைப் பாடசாலைகளில் கல்வி வளர்த்த தலைமை ஆசிரியர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு சூசைப்பிள்ளை அவர்களும் அதனைத் தொடர்ந்து பண்டிதர் கபிரியேற்பிள்ளை வாத்தியாரும் மிகச் சிறப்பாக கல்விக்கு வித்திட்டுள்ளனர்.என்பது இன்றும் பலராலும் கூறப்படும் விடயமாகும். பண்டிதர் கபிரியேற்பிள்ளையோடு சேர்ந்து வந்காலையின் முதல் ஆசிரியப் பெண்மணியான சலோமையா.லீனா அவர்களும் நீண்ட காலமாக நற்சேவையாற்றி வந்துள்ளனர்.

1931 ஆண்டில் திரு.எஸ்.பர்ணபாஸ் குலாஸ் அவர்கள் 226 மாணவர்களையும் நான்கு ஆசிரியர்களையும் அரைப்பகுதி கற்சுவரால் ஆன கட்டிடத்தில் இப்பாடசாலையை இயக்கி வந்துள்ளார்.

இவர் 1963 ம் ஆண்டு வரையான கூடிய காத்திற்கு வங்காலைக் கல்விப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார்.இவரது காலப்பகுதியில் அதாவது 1935.05.01 வரை வங்காலை கத்தோலிக்க பாடசாலையானது வங்காலை ஆண்கள் பாடசாலை, வங்காலை கிறீஸ்து இராசா கன்னியர் பாடசாலை எனப் பிரிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. அருட்தந்தை சூசைதாசன் நல்லையா அடிகளாரின் வேண்டுகோளின் படி 1935ல் திருக்குடும்ப கன்னியர்கள் எமது பங்கிற்கு வந்து கல்விப்பணியில் ஈடுபட்டனர்.இதன் பின்பு கிறீஸ்து இராசா கன்னியர் பாடசாலையை இவர்கள் பொறுப்பேற்று நடாத்தினார்கள்.

ஆண்கள் பாடசாலையானது புனித ஆனாள் பாடசாலையாக மாற்றப்பட்டது.1944ல் நடைபெற்ற 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் ஆண் பெண் இருபாலரிலும் இருந்து ஆறு மாணவர்கள் திறமை சித்தி பெற்று எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரிக்கு அரச செலவில் கல்வி கற்க தெரிவாகினர். ஆயினும் அப்போதிருந்த மதத் தடை காரணமாக அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை.பின்னர் இத் தடை நீக்கப்பட்டதால் தொடர்ந்து பல ஆண்டுகள் இப் புலமைப் பரிசில் பெறும் மாணவர்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்பினை எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்திலும், புனித சவேரியார் கல்லூரியிலும் பெற்றனர். ஏனெனில் 1960ம் ஆண்டு வரை எமது பாடசாலை ஓர் உதவி நன்கொடை பெறும் ஆரம்ப பாடசாலையாகவே ஆங்கில பாதிரியாராலும் யாழ் மேற்றிராசனத்தாலும் வளர்த்து வரப்பட்டது.

பின்னர் 1960ல் இலங்கை அரசினால் இவ்வகைப் பாடசாலைகளை அரசுடமையாக்கி முகாமையை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு பூராகவும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த வகையில் எமது வங்காலைப் பாடசாலையும் அரசுடமையாக்க எடுத்த முயற்சிக்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்புக் காட்டப்பட்டது. இதற்கான நியாயங்களும் எடுத்து முன்வைக்கப்பட்டது. ஆயினும் அரசு தனது நிலையில் இருந்து சற்றும் தளராது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி சில உறுதி மொழூpகளை வழங்கியது. 1960 மார்கழி மாதத்தில் இலங்கை அரசினால் அங்கிகரிக்கப்பட்ட பாடசாலையாக மாறியது.ஆயினும் பாடசாலை தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஈழத்தின் பல பாகங்களிலும் மகாவித்தியாலயங்களும் மத்திய வித்தியாலயங்களும் உருவாகி கொண்டிருந்த வேளையில் எமது பாடசாலை அதே தரத்தில் காணப்பட்டமையானது பெற்றோர் மற்றும் பெரியோர் மத்தியில் கல்வி தொடர்பான விளிப்புணர்வை ஏற்படுத்தியது. இதனால் இக் காலப் பகுதியில் கிராமசபைத்தலைவர் திரு.உ. சம்சோன்.மிராண்டா அவர்கள் தலைமையில் அதிபர் திரு.திருச்செல்வம் அவர்களின் நெறிபடுத்ததாலும் முன்னார் அதிபர்கள் தொ.மக்சிமஸ்.லெம்பேட் திரு.பி. சவிரியான் லெம்பேட், மற்றும் திரு.சீ. ஞானப்பிரகாசம். லெம்பேட், திரு. ப. அபியாஸ். சோசை திரு. செ. இம்மனுவேல்.குரூஸ் ஆகியோர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உயர் திரு.ஏ.யு.அழகக்கோன் அவர்கள் அனுசரனையுடன் அன்றைய கல்விப்பணிப்பாளர் நாயகத்தைச் சந்தித்து கலந்துரையாடி எமது பாடசாலையை தரமுயர்த்த முயற்சித்தனர். இம் முயற்சி 1968.01.05 ல் வெற்றியளித்தது. 1974.07.31 வரை திரு.எஸ். அதிரியான்.மார்க் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றிருந்தார். இவரது காலத்தில் 1972.06.12.இல் கல்வியமைச்சின் மேலதிக நிரந்தர செயலாளர் உயர் திரு.மு.ர்.ஆ. சுமதிபால அவர்களால் சம்பிரதாய பூர்வமாக உயர்தர கலைப்பிரிவு புனித ஆனாள் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. இம் மாணவர்கள் 1975 ல் பல்கலைக்கழகம் சென்று எமது பாடசாலையின் பெயரைத் தடம் பதித்தனர். அதன் பின்னர் 1978.05.02 வரை திரு. எஸ்.சூசையப்புபீரிஸ்அவர்களும்அவர்களைதொடர்ந்துமுன்னாள்

மன்னார் கல்வி பணிப்பாளர் அமரர். எஸ். வேதநாயகம் அவர்களும் கல்விப்பணியை மேற்கொண்டு நடத்தினர். இதனை தொடர்ந்து திரு.தொ.மக்சிமஸ் அவர்கள் அதிபராக பாடசாலையை பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரைக் காலமும் தனித்து இயங்;கி வந்த பாடசாலைகளான புனித ஆனாள் ஆண்கள் பாடசாலையையும் வங்காலை கிறிஸ்து இராசா பெண்கள் பாடசாலையையும் 1981.10.01 முதல் புனித ஆனாள் மகாவித்தியாலயம் என்ற பெயரில் ஒன்றினைந்து இயங்கத் தொடங்கியது. ஆலயப்பகுதியில் காணப்பட்ட இப் பாடசாலை தற்போது காணப்படும் புதிய இடத்திற்கு மாற்றம் பெறுவதற்கான சிந்தனை துளிர்க்கத் தொடங்கியது. இதன் பயனாக திரு.தொ.மக்சிமஸ்.லெம்பேட் அவர்களின் அயராத முயற்சியால் அப்போதைய அமைச்சர் செ.இராஜதுரை அவர்களது முன்னாள் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பி.சூசைதாசன்.சோசை ஆகியோரின் பரிந்துரையாலும் நாம் தற்போது காணும் 100’ஒ 20’ கொண்ட முதலாவது மாடிக்கட்டிடத் தொகுதிக்கான அரச நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றது. இதற்கான அடிக்கல் அன்றைய வீடமைப்பு அமைச்சர் ஜனாப் எம்.எச்.முகம்மது அவர்களால் நாட்டப்பட்டது.

சதுப்பு நிலமாகக் காணப்பட்ட இப்பகுதியின் ஒரு பகுதியில் தனியார் குடிமனை காணப்பட்டமையினால் இதனை அப்புறப்படுத்தி முழுப்பரப்பையும் பாடசாலைக்கு எடுக்கும் திட்டத்தில் குடியிருப்பாளருக்கு (மாசில்லா குரூஸிற்கு) ; நஷ்ட ஈடும் வேறுக் காணியும் வழங்கப் பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. புதிய மேல்மாடி அமைக்கும் திட்டத்திற்கான நிதி பற்றாக்குறையாக காணப்பட்டமையினால் ஆலய நிதியின் மூலம் அத்திவாரமும், ஊர் மக்கள் சிரமதான பணி மூலமும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டன. இவ் வேலையின் அன்றைய ஆலய சபையாரும் பங்குத்தந்தை அமரர் அருட் திரு.மேரிபஸ்ரியான் அவர்களும் முன்னின்று உழைத்தனர். அத்துடன் பங்கு இளைஞர்கள் ஊர் பெரியோர்கள் யாவரும் அயராது பாடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது பணியை தொடர்ந்து அதிபர் எப். சவிரியான்.லெம்பேட் அவர்கள் எமது பாடசாலையின் கல்விப்பணியை 1984.05.18 வரை வெற்றிகரமாக கொண்டு நடாத்தினர். இக் காலப்பகுதியில் டிலாசால் சபை அருட்சகோதரர் கிறிஸ்ரி டோரஸ் தமது கல்விப்பணியை எமது பாடசாலையில் ஆற்றி வந்தார். இவரைத் தொடர்ந்து 1985.06.01 வரையும் திரு.உவில்பிரட்.சோசை அவர்கள் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு பொறுப்பேற்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து 1987.01.25 வரை திரு.ஏ.ஒஸ்பிஸ்.குருஸ் அவர்கள் பாடசாலையின் கல்விப்பணியை பொறுப்பேற்று மேற்கொண்டிருந்தார். இவரது காலத்தில் பாடசாலையில் வணிகப்பிரிவும் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டு உயர்தரப் பிரிவு மேலும் விரிவாக்கப்பட்டது.

இம் மாணவர்கள் 1987 ல் முதல்தடவையாக வணிகத்துறையில் தோற்றி பல்கலைக்கழகம் சென்று வணிகத்துறையிலும் எமது பாடசாலையின் பெயரை நிலைநிறுத்தினர். அத்துடன் அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பு கொள்கையில் வளப்பயன்பாட்டினை உச்சமாக பயன்படுத்ததக்க வகையில் கொத்தணிப் பாடசாலை முறை ஆரம்பிக்கப்பட்டது. இக் கொத்தணிப் பாடசாலையின் மையப் பாடசாலையாக எமது பாடசாலையும் அதன் முதல் அதிபராக திரு.ஏ.ஒஸ்பிஸ்.குருஸ் அவர்களும் செயற்பட்டார். இவரது காலத்தில் புதிய பாடசாலைவளாகத்தில் விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கான 80’ஒ20’ கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பாடசாலையின் பௌதீக வளம் விரிவாக்கப்பட்டது.

1987.01.25 திரு.ஏ.ஒஸ்பிஸ் குருஸ் அவர்கள் இளைப்பாறியதைத் தொடர்ந்து பிரதி அதிபர் திரு.சி. திபூசியஸ். பீரிஸ் அவர்களால் பாடசாலை பொறுப்பேற்று நடாத்தப்பட்ட போது ,எமது மகாவித்தியாலயம் புதிய இடத்திற்கு 1987.05.07 ல் சம்பிராயபூர்வமாக மாற்றப்பட்டது. 1988.01.02 இலிருந்து புதிய அதிபராக திரு.எஸ்.செபமாலை அவர்கள் பொறுப்பேற்றதுடன் கொத்தணி அதிபராகவும் திறமையாக செயற்பட்டார். இக் காலத்தில் எமது பாடசாலை விளையாட்டு,கல்விச செயற்பாடுகளில் முன்னேற்றமடைந்து வந்தது. இவர் 1990.05.15 இல் இடமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து திரு.பி.எமில்.குலாஸ் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இக்காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டமையால் எமது கிராமத்தில் உள்ள மக்கள் இந்தியா, மடு, மன்னார்த் தீவு ஆகிய பகுதிகளில் இடம் பெயர்ந்தனர். பாடசாலையும் இங்கு இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக இப்பாடசாலை 1991.01.09 முதல் மன்.தாழ்வுபாடு றோ.க.த.க. பாடசாலையில் சிறிது காலம் இயங்கியது.


பின்னர் சனிவிலேஜ் பகுதியில் ஓலைக் கொட்டகையில் தனியாக இயங்கத் தொடங்கியது. கல்வியைக் கண்ணாகக் காத்து வந்த எம் மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் 1992.08.22 அன்று இரவு பாடசாலைக் கொட்டகைக்கு இனம் தெரியாத நபர்களால் தீ இட்டுக் கொழுத்தப்பட்டது. இச்செயலானது எமது கல்வியின் ஆர்வத்தை மேலும் அதிகரித்ததுடன் எமது மண்ணிற்கு மீண்டும் வர வேண்டும் என்ற தணியாத தாகத்தை ஏற்படுத்தியது.இதன் விளைவாக 1993.01.25 ல் அதிபர் திரு.பி.எமில்.குலாஸ் அவர்களின் தலைமையில் மீளவும் கல்வி நடவடிக்கை எமது தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் உயர் தர விஞ்ஞான பிரிவும் ஆரமபி;க்கப்பட்டு உயர்தரபிரிவின் சகல துறைகளையும் கொண்ட பாடசாலையாக திகழ்ந்தது.இவரது காலத்தில் 90’ஒ 25’ கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1994.07.11 ல் இவரின் இடமாற்றத்தினை தொடர்ந்து திரு.எஸ்.சூசையப்பு லெம்பேட் அவர்கள் பாடசாலையின் அதிபராக கல்விப்பணியாற்றியிருந்தார்.இவரது காலத்தில் 1994.09.23 மன்.புனித.ஆனாள் மகாவித்தியாலயம்,மன்.புனித.ஆனாள் மத்திய மகாவித்தியாலயம் ஆக தரமுயர்த்தப்பட்டது.

1995.07.25 ல் இவர் இடமாற்றப்பட்டதை தொடர்ந்து 1995.08.01 ல் திரு.ஆ.பங்கிராஸ்.சோசை அவர்கள் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் 1995ல் உயர் தர பரீட்சைக்கு விஞ்ஞான, கணித பிரிவுகளில் தோற்றி பல்கலைக்கழக மருத்துவ துறைக்கும், பொறியியல் துறைக்கும் மாணவர்கள் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டு எமது பாடசாலையின் பெயரை நிலைநிறுத்தி வெற்றி; கொண்டனர். இவரது பணிக்காலத்தில் 1997.10.06ல் திருமதி.ரஜனி ஆரோக்கியநாயகம் அவர்கள் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டு சிறந்த பணிகளை ஆற்றியிருந்தார். புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையும் இவர் பெறுகின்றார்.இவர் இடமாற்றம் பெற்றதும் தொடர்ந்து திரு.ஆ.பங்கிராஸ்.சோசை அவர்கள் அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தத்திற்கு அமைய 1999.02.01 ல் எமது மத்திய மகாவித்தியாலயம் சிரேஷ்ட,கனிஷ்ட பாடசாலையாக பிரிக்கப்பட்டு ஓரே வளாகத்தில் இயங்கியது. இக்காலத்திpல் கனிஷ்ட பாடசாலை அதிபராக திரு.சூ.றெமிஜியஸ் பீரிஸ் அவர்களும் சிரேஷ்ட பாடசாலைக்கு திரு.ஆ.பங்கிராஸ்.சோசை அவர்களும் பொறுப்பேற்றிருந்தனர். திரு.ஆ.பங்கிராஸ் சோசை அவர்கள் சிரேஷ்ர பாடசாலையில் இருந்து 2000.06.05 ல் இளைப்பாறிய போது பிரதி அதிபராக இருந்த டிலாசால் சபை அருட்சகோதரர் ச.இ.றெஜினோல்ட் அவர்கள் பாடசாலைப் பொறுப்பை ஏற்றார். இவரது காலத்தில் எமது பாடசாலையின் அதிபர் அலுவலகம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு திருத்தப்பட்டது. தொடர்ந்து திரு.எஸ்.றெமிஜியஸ் அவர்கள் சிரேஷ்ர பாடசாலைக்கு அதிபராகவும், திரு.கி.மரியான்.கூஞ்ஞ அவர்கள் கனிஷ்ர பாடசாலைக்கு அதிபராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். திரு.கி.மரியான்.கூஞ்ஞ அவர்கள் காலத்தில் 100’ஒ 20’ கொண்ட மேல்மாடித் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அரசாங்க சுற்றறிக்கைக்கு அமைய 2002.06.01ல் சிரேஷ்ட, கனிஷ்ட பாடசாலைகள் ஒன்றிணைக்கப்பட்டு திரு.கி.றெமிஜியஸ்.பீரிஸ் அவர்கள் அதிபராக தொடர்ந்து செயற்பட திரு.கி.மரியான்.கூஞ்ஞ அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றார். திரு.எஸ். றெமிஜியஸ்.பிரீஸ் அவர்கள் 2002.05.19ல் இடமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து 2002.05.29 ல் இருந்து திரு.சி.திபூசியஸ்.பிரீஸ் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார்.

பின்னர் மன்னார் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப்பணிப்பாளராகக் கடமை புரிந்த திருமதி.எல்.மாலினி வெனிற்றன் அவர்கள் எமது பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது காலத்தில் குடிநீர் வசதி,மலசலக்கூட தொகுதி ஆகிய பாடசாலையின் அடிப்படைத்தேவைகள் யுனிசெவ் நிறுவன உதவியுடன் ஓரளவு பூரணப்படுத்தப்பட்டது. அத்துடன் நெக்கோட் நிறுவன உதவியுடன் நவீன நூலகத்தொகுதியும் மூன்று வகுப்பறைத் தொகுதியும் கொண்ட புதிய கட்டிடம் 2004.01.18 ல் வடக்கு கிழக்கு மாகாண நெக்கோட் நிறுவன பணிப்பாளருமாகிய எஸ்.மரியதாசன்.குரூஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 2005ல் திறந்து வைக்கப்பட்டது.1998,1999 ம் ஆண்டு உயர்தர மாணவர்களால் சேகர்க்கப்பட்ட நிதியைக் கொண்டு முன்புற நுழைவாயில் வளையி அமைக்கப்பட்டு 2004.01.18 ல் திறந்து வைக்கப்பட்டது.சம காலங்களில் மன்னார் மாவட்டம் மன்னார்,மடு என்ற இருகல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டு மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளராக திரு.எம்.ஆபேல். றெவ்வல் அவர்களும்,மடு வலயக்கல்விப் பணிப்பாளராக திரு.ஏ.திபூசியஸ்.குரூஸ் அவர்களும் கடமையாற்றினர். அவர்கள் இருவரும் எமது கிராமத்தைப் பிறப்பிடமாக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது பாடசாலையின் கல்வி வரலாறு பல நூற்றாண்டிற்கும் மேற்பட்டதாகும். இக் காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர்களும்,பிற இடத்து ஆசிரியர்களும் எமது கிராமத்தை சேர்ந்த ஆசிரியர்களும் கல்வித் தூண்களாக நின்று தமது அளப்பரிய அர்ப்பண சேவையை எமக்கு அளித்துள்ளார்கள். குறிப்பாக திருக்குடும்ப கன்னியர் சபையைச் சார்ந்த அருட்சகோதரிகளான மொனிக்கா, யான்மேரி, இமல்டா, கொன்ஸ்சப்ரா பசில், வலன்ரைன், கொன்சன்ரைன், சென்போல், அன்று அனற், கில்டாகாட், எவரஸ்டா, பிபியானா, அவர்களையும் எமது கல்வி சமூகம் நினைவு கூறுகின்றது. ஆயினும் எல்லோரது சேவையினையும் இக் கட்டுரையில் விபரிக்க முடியாதுள்ளது. இவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லையாயினும் அனைவரையும் எம் சமூகம் இன்று பெயர் சொல்லி நன்றியுடன் நினைவு கூறுகின்றது.

இக்காலத்தில் பல அரச உயர் அதிகாரிகள்,கல்வி உயர்அதிகாரிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள், தொழில் நிர்வாகமானிகள், சட்டவாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அரச அலுவலகர்கள்,சமயத்தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியல் வாதிகள், சமூக அலுவலர்கள், என பலரை உருவாக்கிய தனது கம்பீரமான தோற்றத்துடன் நிமிர்ந்து நிற்கின்றது. எமது பாடசாலைக்கு பல சோதனைகள் ஏற்பட்டாலும் கல்வியிலும் கலைகலாச்சாரத்திலும், விளையாட்டிலும் பல தேசிய சாதனைகளை நிலைநாட்டி தனது பெயரை மங்காது காத்து வருகின்றது,தொடர்ந்து இதன் கல்விப்பணி எங்கும் பரவிட ஆனாள் அன்னை அருள் பாலித்திட வேண்டுமென்று இறைஞ்சுகிறோம்.


உசாத்துணை நூல்கள்[தொகு]

  • நெய்தல் நில மன்னர்கள், கலாநிதி ஏ.எஸ்.சோசை, விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம், சிறப்பு மலர்: புனித ஆனாள் ஆலயம் - வங்காலை.
  • கலாநிதி ப.புஸ்பரட்ணம் (2003), பண்டைய இலங்கையில் பரதவர் சமூகம், சில தொல்லியல் சான்றுகள், தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, (யாழ் பல்கலைக்கழகம்).
  • Nguhrpupah; K.K.Pillay (1975): A Social History of the Tamils (Madras University)

வெளியிணைப்பு[தொகு]

8°53′45″N 79°55′57.51″E / 8.89583°N 79.9326417°E / 8.89583; 79.9326417

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காலை&oldid=1347309" இருந்து மீள்விக்கப்பட்டது