தலைமன்னார்
தலைமன்னார் Talaimannar තලෙයිමන්නාරම | |
---|---|
நகரம் | |
![]() ஆதாம் பாலத்தைக் காட்டும் வரைபடம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | மன்னார் |
பி.செ. பிரிவு | மன்னார் |
தலைமன்னார் (Talaimannar, சிங்களம்: තලෙයිමන්නාරම) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மன்னார்த் தீவின் வடமேற்குக் கரைப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியாகும்.
போக்குவரத்து[தொகு]
1964 டிசம்பரில் இடம்பெற்ற தனுஷ்கோடி புயல் அழிவுகளுக்கு முன்னர் பாக்குநீரிணை ஊடாக இந்தியாவில் இருந்து தலைமன்னார் வரை பயணிகள் படகுச் சேவை இடம்பெற்று வந்தது. தலைமன்னார் தனுஷ்கோடியில் இருந்து கிழக்கே 18 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இப்படகுச் சேவை இந்திய-இலங்கை புகையிரதத் துறையினரால் இராமேசுவரத்தில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையில் நடத்தப்பட்டு வந்தது. புயலின் அழிவுகள் காரணமாக இச்சேவை நிறுத்தப்பட்டது. இலங்கையின் தென்பகுதிகளை இணைக்கும் தொடருந்து சேவைகள் தலைமன்னாரில் இருந்து மதவாச்சி ஊடாக நடைபெற்று வந்தது. ஈழப்போரை அடுத்து இச்சேவைகள் இடைநிறுத்தப்பட்டது. 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டில் கொழும்பில் இருந்து மடு வரை சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.[1] 2015 மார்ச் 14 இல் இச்சேவை தலைமன்னார் வரை நீடிக்கப்பட்டது. தலைமன்னாரில் இருந்து மடு வரையிலான முதலாவது சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆரம்பித்து வைத்தார்.[2]
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Lanka Business Online". Sri Lanka gives northern rail rebuilding deal to India’s IRCON. 2010-08-18. Archived from the original on 2011-10-04. https://web.archive.org/web/20111004193217/http://www.slrfc.org/2010/08/18/sri-lanka-gives-northern-rail-rebuilding-deal-to-india.
- ↑ "தலைமன்னார் - மடு ரயில் சேவை பாரத பிரதமரினால் ஆரம்பித்து வைப்பு". தினகரன். 2015-3-14. http://www.thinakaran.lk/Vaaramanjari/2015/03/15/?fn=n1503151.[தொடர்பிழந்த இணைப்பு]