முருங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முருங்கன் இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஊர். இது மதவாச்சி - தலைமன்னார் வீதி எனப்படும் ஏ-14 நெடுஞ்சாலையை முருங்கன் சிலாவத்துறை வீதி சந்திக்கும் இடத்தை அண்டி அமைந்துள்ளது. இவ்வூர் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முருங்கன் கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்குகிறது. மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்குச் செல்லும் தொடர்வண்டிப் பாதையும் முருங்கனுக்கு ஊடாகவே செல்வதுடன், அங்கே தொடர்வண்டி நிலையம் ஒன்றும் உள்ளது. முருங்கனில் ஒரு மாகாணப் பாடசாலையும்,[1] ஒரு பிரதேச வைத்தியசாலையும்[2] உள்ளன. இங்கே அஞ்சல், தந்தி வசதிகளுடன் கூடிய அஞ்சல் நிலையம் ஒன்றும் உள்ளது.[3]

குறிப்புக்கள்[தொகு]

  1. "பாடசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-27 அன்று பார்க்கப்பட்டது.
  2. "வைத்தியசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-27 அன்று பார்க்கப்பட்டது.
  3. "அஞ்சல் அலுவலகங்கள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-27 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முருங்கன்&oldid=3591239" இருந்து மீள்விக்கப்பட்டது