அக்டோபர் 16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | அக்டோபர் 2015 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXV | ||||||
அக்டோபர் 16 (October 16) கிரிகோரியன் ஆண்டின் 289 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 290 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 76 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1775 - ஐக்கிய அமெரிக்காவில் மேய்ன் மாநிலத்தின் போர்ட்லண்ட் நகரம் பிரித்தானியரால் எரிக்கப்பட்டது.
- 1781 - ஜோர்ஜ் வாஷிங்டன் வேர்ஜீனியாவின் யோர்க்டவுன் நகரைக் கைப்பற்றினார்.
- 1793 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனின் மனைவி மரீ அண்டொனெட் கழுத்து வெட்டி மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டாள்.
- 1799 - பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்.
- 1813 - ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.
- 1834 - லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.
- 1905 - ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
- 1905 - பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.
- 1923 - வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1934 - குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான ஜெர்மனிய வான்படையின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது.
- 1942 - பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1949 - கிரேக்க கம்யூனிசத் தலைவர் நிக்கலாஸ் சக்காரியாடிஸ் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1951 - பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலி கான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- 1964 - மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
- 1973 - ஹென்றீ கிசிங்கர், லே டுக் தோ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர்.
- 1975 - கிழக்குத் திமோரில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் இந்தோனீசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1984 - தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூடு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
- 1987 - தெற்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற சூறாவளியில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
- 1996 - குவாத்தமாலாவில் உதைப்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் கொல்லப்பட்டனர்.
- 1998 - சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினொச்சே லண்டனில் கைது செய்யப்பட்டார்.
- 2003 - தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.
- 2006 - ஈழப்போர்: இலங்கை, ஹபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
- 2006 - இலங்கையில் 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
பிறப்புக்கள்[தொகு]
- 1854 - ஆஸ்கார் வைல்டு, ஐரிய எழுத்தாளர் (இ. 1900)
- 1927 - கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (இ. 2015)
- 1963 - சூசை, கடற்புலிகளின் தலைவர்
- 1975 - ஜாக் காலிஸ், தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்
இறப்புகள்[தொகு]
- 1799 - கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் (பி. 1760)
- 1951 - லியாகட் அலி கான், பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் (பி. 1896)